கிழக்கு ஐரோப்பிய நேரம்

கிழக்கு ஐரோப்பிய நேரம் (கி.ஐ.நே.) (ஆங்கிலம்:Eastern European Time - EET) என்பது ஒ.ச.நே.+02:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது பகலொளி சேமிப்பு நேரமாக கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரத்தைப் பயன்படுத்துகின்றன.

ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, உருசியா மற்றும் துனீசியாவைக் குறிக்கின்றது.

பயன்பாடு

பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:

மாஸ்கோ நேரம் 1922-30 மற்றும் 1991-92 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. Kaliningrad Oblast 1945 மற்றும் 1991-2011 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. 1918-22 இல் போலந்தில் இந்நேரம் கடைப்பிடிக்கப் பட்டது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கிழக்கில் தனது கட்டுப்பட்டிலிருந்த பகுதிகளில் ஜேர்மனி மத்திய ஐரோப்பிய நேரத்தை அமுலாக்கியது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.