எஸ்தோனிய குரூன்

குரூன் (சின்னம்: kr or ,-; குறியீடு: EEK), எஸ்டோனியா நாட்டின் முன்னாள் நாணயம். குரோன் என்னும் சொல் லத்தீன் மொழியின் “குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, நார்வே குரோன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் பெயர்களும் இச்சொல்லிலிருந்தே தோன்றின. ஒரு குரூனில் நூறு சென்டிகள் உள்ளன. குரூன் என்ற சொல்லின் பன்மை வடிவம் “குரூனி”. எஸ்தோனிய குரூன் முதன் முதலில் 1928ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது எஸ்டோனியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் குரூன் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1992ல் எஸ்டோனியா விடுதலை அடைந்தவுடன் குரூன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்டோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் ஜனவரி 1, 2011 முதல் குரூன் கைவிடப்பட்டது. அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ எஸ்டோனியாவின் நாணயமாகிவிட்டது.[2][3]

எஸ்தோனிய குரூன்
Eesti kroon
குரூன் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிEEK
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100சென்ட்
பன்மைகுரூனி
சென்ட்சென்டி
வேறுபெயர்காகிதம் (Paper)
வங்கிப் பணமுறிகள்
அதிகமான பயன்பாடு2, 5, 10, 25, 100, 500 குரூனி
Rarely used1, 50 குரூனி
Coins
Freq. used10, 20, 50 சென்டி, 1 குரூனி
Rarely used5 சென்டி, 5 குரூனி
மக்கள்தொகையியல்
User(s) எசுத்தோனியா
Issuance
நடுவண் வங்கிஎஸ்டோனிய வங்கி
Websitewww.bankofestonia.info
Valuation
Inflation2.8%
Sourceஐரோப்பிய மத்திய வங்கி, மே 2010
ERM
Since28 ஜூன் 2004
Fixed rate since31 டிசம்பர் 1998
=15.6466 குரூனி
Bandமாறுவதில்லை[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.