செர்பிய தினார்

செர்பிய தினார் (ஆங்கிலம்: Serbian Dinar; சின்னம்: РСД; குறியீடு: RSD) செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”.

செர்பிய தினார்
Cрпски динар / Srpski dinar (செர்பிய மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிRSD
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100பாரா
குறியீடுРСД மற்றும் RSD
வங்கிப் பணமுறிகள்
அதிகமான பயன்பாடு10, 20, 50, 100, 200, 500, 1000, 5000 தினார்.
Coins
Freq. used1, 2, 5, 10, 20 தினார்.
மக்கள்தொகையியல்
User(s) செர்பியா
Issuance
நடுவண் வங்கிசெர்பிய தேசிய வங்கி
Websitewww.nbs.rs
Printerவங்கித்தாள் மற்றும் நாணய உருவாக்கு நிறுவனம் (டாப்சிடர்)
Websitewww.nbs.rs/export/internet/english/zin
Mintவங்கித்தாள் மற்றும் நாணய உருவாக்கு நிறுவனம் (டாப்சிடர்)
Websitewww.nbs.rs/export/internet/english/zin
Valuation
Inflation5,1%
Source, ஜூலை 2010
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.