மோ யான்
குயான் மோயெ (Guan Moye, எளிய சீனம்: 管谟业; மரபுவழிச் சீனம்: 管謨業; பின்யின்: Guǎn Móyè), பரவலாக தமது புனைப்பெயர் மோ யான் (Mo Yan, சீனம்: 莫言; பின்யின்: Mò Yán) (பிறப்பு பெப்ரவரி 17, 1955), ஒரு சீன எழுத்தாளர் ஆவார். அனைத்து சீன எழுத்தாளர்களிலும் "மிகவும் புகழ்பெற்ற, பலமுறை தடை செய்யப்பட்ட மற்றும் பதிப்புரிமை உரிமைகள் திருடப்பட்டவராக" அறியப்படுகிறார்.[1] இவரது இரு படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிவப்புச் சோளம் (Red Sorghum) என்ற திரைப்படத்தின் மூலம் மேற்கத்திய உலகுக்கு அறிமுகமானார். இவருக்கு 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.[2][3]
莫言 மோ யான் | |
---|---|
![]() 2008இல் மோ யான் | |
புனைப்பெயர் | மோ யான் |
தொழில் | புதின எழுத்தாளர், ஆசிரியர் |
நாடு | சீனர் |
எழுதிய காலம் | 1981 – இன்றுவரை |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
சிவப்புச் சோளம், திராட்சைமது குடியரசு, வாழ்வும் சாவும் என்னை அயர்ச்சியடைய வைக்கின்றன |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2012 |
தாக்கங்கள்
|
நோபல் பரிசு
2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவர்.[4]
சான்றுகோள்கள்
- Morrison, Donald (2005-02-14), "Holding Up Half The Sky", TIME.
- http://www.dn.se/kultur-noje/nobelpristagaren-i-litteratur-presenteras
- "The Nobel Prize in Literature 2012 Mo Yan". Nobel Media AD (2012-10-11). பார்த்த நாள் 2012-10-11.
- "Hallucinatory Realism of Mo Yan, the First Official Chinese Winner of the Nobel Prize for Literature - The Daily Beast".
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.