இரட்யார்ட் கிப்ளிங்
சோசப்பு இரட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling டிசம்பர் 30, 1865 - ஜனவரி 18, 1936) இந்தியாவில் மும்பையில் பிறந்த[2] பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர். இவர் 1907 இல் தனது 42 ஆவது வயதில் நோபல் பரிசு பெற்றார். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே. மேலும் இப்பரிசு பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளரும் இவராவார். சிறுவர்களுக்கான கதைகள், நாவல், கவிதைகள், சிறுகதைகள் என எழுதினாலும் ஒரு கவிஞராகவே அறியப்படுகிறார்.
இரட்யார்ட் கிப்ளிங் Rudyard Kipling | |
---|---|
![]() | |
பிறப்பு | யோசேப்பு ரட்யார்ட் கிப்ளிங் திசம்பர் 30, 1865 பம்பாய், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 18 சனவரி 1936 70) லண்டன், இங்கிலாந்து[1] | (அகவை
தொழில் | சிறுகதை, புதின எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் |
நாடு | பிரித்தானியர் |
இலக்கிய வகை | சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், கவிதை, பயண இலக்கியம், அறிவியல் புதினம் |
கருப்பொருட்கள் | இந்தியா |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
த ஜங்கிள் புக் ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ் கிம் |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1907) |
பின்பற்றுவோர்
|
அவருடைய கற்பனைக் கதை தொகுப்பான த ஜங்கில் புக் (1894) (ரிக்கி-டிக்கி-டவி ஆகிய கதைகள் உட்பட்ட ஒரு கதைத் தொகுப்பு), கிம் (1901) (ஒரு வீரசாகச கதை), த மேன் ஹூ வுட் பீ கிங் (1888) உட்பட பல குறுங்கதைகள்; மற்றும் மேண்டலே (1890), கங்கா டின் (1890) மற்றும் இஃப் (1910) உட்பட அவருடைய கவிதைகளுக்காகவும் புகழ்பெற்றிருக்கிறார். “குறுங்கதைக் கலையில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாளராக” அவர் கருதப்படுகிறார்;[3] குழந்தைகளுக்கு அவர் எழுதிய புத்தகங்கள் குழந்தைகள் இலக்கியத்தில் நீங்கா இடத்தைக் கைப்பற்றியுள்ளன; மேலும் அவருடைய தலைசிறந்த வேலைகள் அவருடைய பல்துறை வண்மைக்கும் பிரகாசமான உரைநடை நயத்திற்கும் சான்றாக விளங்குகின்றன.[4][5]
19வது நூற்றாண்டின் இறுதியிலும் 20வது நூற்றாண்டின் துவக்கத்திலும் கிப்ளிங்க் உரைநடையிலும் கவிதையிலும் மிகவும் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்.[3] ஹென்றி ஜேம்ஸ் என்ற எழுத்தாளர் அவரைக் குறித்து கூறும்போது, “என்னைப் பொருத்தவரையில் நான் அறிந்தவர்களிலேயே கிப்ளிங்க் (நுண்மான் நுழைபுலம் மட்டுமல்லாமல்) ஒரு முழுமையும் பூர்த்தியுமடைந்த ஒரு மேதாவியாக எனக்குத் தோன்றுகிறார்” என்றார்.[3] 1907ம் ஆண்டு அவருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அன்றைய தேதியில் ஆங்கில மொழிக்காக அவருக்கே முதல் முறையாக இந்த பரிசு வழங்கப்பட்டது. இன்று வரை நோபல் பரிசு பெற்றவர்களில் அவரே மிகவும் வயது குறைந்தவராவார்.[6] மற்ற பல கௌரவங்களுக்கு மத்தியில், அவர் பிரிட்டிஷ் பொயட் லாரட்ஷிப் என்ற பட்டத்திற்கும் பலமுறை நைட்ஹுட் பட்டத்திற்கும் முன்மொழியப்பட்டார், ஆனால் அவையனைத்தையும் அவர் நிராகரித்துவிட்டார்.[7]
அவருடைய வாழ்க்கையின் பிந்தைய பகுதியில், கிப்ளிங்க் (ஜார்ஜ் ஆர்வல் மூலமாகவாவது), “ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஒரு தீர்க்கதரிசியாக” கருதப்பட்டார்.[8] அவருடைய இலக்கியங்களில் பாரபட்சமும் இராணுவ ஆட்சியும் மேலோங்கி நின்றதாக பலர் எண்ணினர்.[9][10] 20வது நூற்றாண்டின் பெரும்பகுதியில் இதனால் அவருடைய இலக்கியம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.[11][12] டக்ளஸ் கெர் என்ற விமர்சகரின் கூற்றுபடி, “அவர் இப்போதும் உணர்ச்சி ததும்பும் வகையில் இருவேறு கருத்துகளை தூண்டியெழுப்பக்கூடிய ஒரு எழுத்தாளராக இருக் கிறார். இலக்கிய மற்றும் கலாச்சார வரலாற்றில் அவருடைய இடம் இன்னமும் சரிவர நிறுவப்படவில்லை. ஐரோப்பிய சாம்ராஜ்ஜியத்தின் சகாப்தம் சரிய சரிய, அந்த சாம்ராஜ்ஜியம் எப்படி அனுபவிக்கப்பட்டதென்பதை விளக்கியவர்களில் இவர் தன்னிகரற்றவராகவும், பெருத்த சர்ச்சைக்குரியவராகவும் கருதப்படுகிறார். இதோடு அவருடைய உரைநடை நயத்திற்கான அதிகரித்துவரும் செல்வாக்கோடு சேர்ந்து, அவர் முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவராக சரித்திரத்தில் இடம்பெறுகிறார்” என்றார்.[13]
குழந்தைப் பருவமும் ஆரம்பவாழ்க்கையும்

ரட்யார்ட் கிப்ளிங் ஜோசஃப் ரட்யார்ட் கிப்ளிங் என்று, 1865ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, இந்தியாவின் பாம்பேயில் பிறந்தார். அப்போது பாம்பே ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இவருடைய பெற்றோர் ஆலிஸ் கிப்ளிங் (இயற்பெயர் மெக்டொனால்ட்) மற்றும் (ஜான்) லாக்வுட் கிப்ளிங் ஆவர்.[14] ஆலிஸ் கிப்ளிங் (பிரசித்திப் பெற்ற நான்கு விக்டோரிய சகோதரிகளில் ஒருவர்)[15] ஒரு சுறுசுறுப்பான பெண்மணியாக காணப்பட்டார்.[16] இந்தியாவின் எதிர்கால வைஸ்ராய் ஒருவர் அவரைப் பற்றிக் கூறும்போது, “கிப்ளிங்க் அம்மையார் இருக்கும் இடத்தில் சோர்வுக்கு இடமே இல்லை” என்றார்.[3] லாக்வுட் கிப்ளிங், ஒரு சிற்பியாகவும் வனைதொழில் வடிவமைப்பாளராகவும் இருந்தார். இவர் பாம்பேயில் புதியதாக நிறுவப்பட்ட சர் ஜம்ஸ்ட்ஜீ ஜீஜீபாய் கலை மற்றும் தொழிற்சாலை பள்ளியின் முதல்வராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.[16]
அந்த வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருந்த இந்த தம்பதியர், இங்கிலாந்தின், ஸ்டஃபோர்ட்சையர், ரட்யார்டிலுள்ள ரட்யார்ட் ஏரியின் அருகே இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதல் மோகத்தில் சந்தித்திருந்தனர். அந்த குளம் அவர்களை மிகவும் வசீகரித்ததால், தங்களுடைய முதல் குழந்தைக்கு ரட்யார்ட் என்று பெயரிட்டனர். கிப்ளிங்குடைய பெரியம்மாவான ஜார்ஜியானா, ஓவியர் எட்வர்ட் பர்ன் - ஜோன்ஸ்க்கு மணமுடிக்கப்பட்டார், அவருடைய மாமியான ஆக்னஸ் ஓவியரான எட்வர்ட் பாய்ண்டருக்கு மணமுடிக்கப்பட்டார். அவருடைய மிகவும் புகழ்பெற்ற உறவினர் அவருடைய முதல் அத்தான் ஸ்டான்லி பால்ட்வின் ஆவார். இவர் 1920கள் முதல் 1930கள் வரை மூன்று முறை கன்ஸர்வேடிவ் கட்சி சார்பான பிரதம மந்திரியாக இருந்தார்.[17] கிப்ளிங்குடைய பிறந்த வீடு மும்பையில் இன்னமும் சர் ஜெ.ஜெ. இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ளைட் ஆர்ட் என்ற நிறுவனத்தின் வளாகத்தில் காணப்படுகிறது. பல வருடங்களாக இது கல்லூரி முதல்வருடைய (டீன்) இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. இந்தக் குடிலில் கிப்ளிங்க் இங்கு தான் பிறந்தாரென்ற ஒரு வாசகம் காணப்பட்டாலும், அந்த முந்தைய குடில் பல வருடங்களுக்கு முன் தகர்க்கப்பட்டு அதனிடத்தில் மற்றொன்று கட்டப்பட்டதென்று மும்பையின் வரலாற்றாசிரியர் ஃபாய் நிஸ்ஸன் குறிப்பிடுகிறார். இந்த மர பங்களா பல வருடங்களாக காலியாகவும் பூட்டப்பட்டும் காணப்படுகிறது.[18] 2007ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையிலுள்ள ஜெ ஜெ ஸ்கூல் ஆஃப் ஆர்ட் வளாகத்திலுள்ள அவருடைய பிறப்பிடம் இந்த எழுத்தாளரையும் அவருடைய பணிகளையும் (கீழே வரலாற்று செல்வாக்கு என்ற பகுதியை பார்க்கவும்) கௌரவிக்கும் வண்ணம் அதை ஒரு அருங்காட்சியகமாக மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

பாம்பேயைக் குறித்து கிப்ளிங்க் எழுதும்போது:[19]
<கவிதை>எனக்கு நகரங்களின் தாயே,
நான் அவளுடைய வாசற்கதவுகளில் பிறந்தேன், பனைமரங்களுக்கும் கடலுக்குமிடையே, உலகம்-முடியும் ஸ்டீமர்கள் காத்திருக்கும் வாயிலில்.</கவிதை>
பெர்னிஸ் எம்.மர்ஃபீயின் கூற்றுபடி: " கிப்ளிங்குடைய பெற்றோர்கள் தங்களை ஆங்கிலோ- இந்தியர்கள் (இந்தியாவில் குடியேறின ஆங்கிலேயரைக் குறிக்க 19வது நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு பதம்) என்று கருதினார்கள். மேலும் கிப்ளிங் அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியை மற்ற இடங்களில் செலவழித்தாலும் அவர் தன்னையும் ஆங்கிலோ-இந்தியர் என்றே குறித்துக்கொண்டார். அவருடைய கற்பனைக் காவியங்களில் நாடு சம்பந்தப்பட்ட அடையாளங்கள் மற்றும் தேசியப் பற்றிணைவுகள் ஆகிய கருப்பொருட்கள் அடிக்கடி மேலோங்கின."[20] கிப்ளிங் இந்த உட்போர்களைக் குறித்து எழுதும்போது: " மத்தியான வேளைகளில் நான் தூங்க செல்வதற்கு முன் அவர் (போர்ச்சுகீஸ் நாட்டவரான ஆயா ) அல்லது மீடா (இந்து உதவியாளர் அல்லது ஆண் உதவியாளர்) எங்களுக்கு கதைகளும் பல இந்திய குழந்தைப் பாடல்களும் கூறுவர் (அவை அனைத்தும் இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது). இதற்குப் பிறகு எங்களுக்கு ஆடையணிந்து உணவறைக்கு செல்வதற்கு முன் ‘இப்போ அப்பா, அம்மாவிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டும்’ என்று எச்சரித்து அனுப்புவார்கள். இதனால் நான் ஆங்கிலம் பேசியபோது கூட அந்த உள்ளூர் மொழியில் யோசித்து அதன் பின் அதை மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் தட்டு தடுமாறி பேசினேன்” என்று கூறுகிறார்.[21]
கிப்ளிங் ஐந்து வயதானபோது பாம்பேயின் “சக்திவாய்ந்த பிரகாசமும் இருளும்” சூழ்ந்த நாட்கள் முடியவிருந்தன.[21] அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வழக்கத்தின்படி, அவரும் அவருடைய மூன்று-வயது நிரம்பிய சகோதரியான ஆலிஸும் (“டிரிக்ஸ்”), இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு இந்தியாவில் வாழும் ஆங்கிலேயரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் ஒரு தம்பதியினரிடம் சவுத்ஸீக்குக் (போர்ட்ஸ்மோத்) கொண்டு செல்லப்பட்டார்கள். அடுத்த ஆறு வருடங்கள் இரண்டு குழந்தைகளும் ஹாலவே தம்பதியினரின் வீடாகிய, லோர்ன் லாட்ஜில் வாழ்ந்தனர். சுமார் 65 வருடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அவருடைய சுயசரிதையில், அவர் இந்த காலத்தை கடும் பயத்துடனும் திகிலுடனும் நினைவு கூறுகிறார். திருமதி ஹாலவேயின் கையில் பட்ட கொடுமையும் நிராகரிப்பும் அவருடைய இலக்கிய வாழ்க்கையை காலத்துக்கு முன்னமே தூண்டியிருக்கக் கூடுமோ என்றுக் கூட வியந்திருக்கிறார்: " ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய ஒரு குழந்தையை வழி மறித்து (அதுவும் தூங்க செல்லும்போது) அந்த நாளின் அவன் என்ன செய்தானென்று குறுக்குவிசாரனை செய்தால், அவன் மிகவும் எளிதாக எதிர்மாறான பதில்களை அளிப்பான். ஒவ்வொரு எதிர்மாறான பதிலும் பொய்யென்று கருதப்பட்டு காலை உணவில் கணக்குக் கொடுக்க சொல்லப்பட்டால் வாழ்க்கையே அவலமாகிவிடும். நான் என் வாழ்க்கையில் என் பங்குக்கு கொஞ்சம் சண்டை சச்சரவுகளை சந்தித்து இருக்கிறேன், ஆனால் இதெல்லாம் கணக்கிடப்பட்ட சித்தரவதை - மதசார்பாக இருந்தாலும் சரி, அறிவுப்பூர்வமாக இருந்தாலும் சரி. எனினும், சீக்கிரத்தில் நான் பொய் சொல்லவேண்டிய நிர்பந்தங்களை கவனித்துப் பார்க்கும்படி என்னை வைத்தது: இதுவே இலக்கிய முனைப்பின் அடித்தளமென்று எண்ணுகிறேன்”.[21]
கிப்ளிங்குடைய சகோதரியான டிரிக்ஸ் லோர்ன் லாட்ஜில் இவரைவிட சற்று நன்றாக வாழ்ந்ததாக தெரிகிறது. திருமதி ஹாலவே அவள் இறுதியில் ஹாலவேயின் மகனை திருமணம் செய்துகொள்வாள் என்று எண்ணினார்கள் போலும்.[22] இரண்டு குழந்தைகளுக்கும் இங்கிலாந்தில் போய் விஜயம் செய்வதற்கு உறவினர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொரு கிறிஸ்மஸுக்கும் அவர்களுடைய பெரியம்மாவான ஜார்ஜியானா (“ஜார்ஜி”) மற்றும் அவருடைய கணவர் ஓவியர் எட்வர்ட் பர்ன் - ஜோன்ஸின் வீட்டுக்கு செல்வார்கள். ஃபுல்ஹாம், லண்டனில் இருந்த இந்த வீடு “த கிராஞ்ச்” என்றழைக்கப்பட்டது. கிப்ளிங்க் இந்த வீட்டை, “நான் முழுவதும் பரலோகம் என்று நம்பின இடம்” என்று பிற்பாடு விவரித்தார்".[21] 1877ம் ஆண்டு ஆலிஸ் கிப்ளிங்க் இந்தியாவிலிருந்து திரும்பி, குழந்தைகளை லோர்ன் லாட்ஜிலிருந்து வெளியேற்றினார். “அதற்குப் பின் பிரியமுள்ள பெரியம்மா, அங்கு அப்படி நடத்தப்பட்டதைக் குறித்து ஏன் தன்னிடம் கூறவில்லை என்று அடிக்கடி என்னிடம் கேட்பார். குழந்தைகள் விலங்குகளைவிட சற்று அதிகமாக பேசுவார்கள் அவ்வளவு தான். அவர்களுக்கு நடப்பது தான் உலத்தின் நியமனம் என்று அவ்வபோது ஏற்றுக்கொள்ளுகின்றனர். அதிலும் மோசமாக நடத்தப்படும் குழந்தைகள், தாங்கள் வாழும் சிறைச்சாலையின் கொடூர இரகசியங்களை வெளியாக்கினால் என்ன ஆகுமென்று நினைத்து, அதிலிருந்து வெளியேறும் வரை அவைகளை வெளியிடுவதே கிடையாது” என்று கிப்ளிங்க் பிற்பாடு நினைவுகூறுகிறார்.[21]
1878ம் ஆண்டு ஜனவரி மாதம், கிப்ளிங் வெஸ்ட்வர்ட் ஹோ!, டெவனிலுள்ள த யுனைடட் சர்வீஸஸ் காலெஜுக்கு அனுப்பப்பட்டார். இந்த பள்ளி ஆண் பிள்ளைகளை இராணுவத்துக்கு தயாராவதற்காக சில வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த பள்ளியில் வாழ்க்கை முதலில் சற்று சிரமமாக ஆரம்பித்தது, ஆனால் காலப்போக்கில் அங்கு அவர் பல உறுதியான நட்புகளை பிடிக்கமுடிந்தது. இவை பல வருடங்களுக்குப் பிறகு அவருடைய பள்ளி வாழ்க்கையின் கதைத் தொகுப்பாக ஸ்டாக்கி & கோ என்று வெளியிடப்பட்டன.[22] இங்கிருந்த போது, சவுத்ஸீக்கு திரும்பிய டிரிக்ஸுடன் குடியிருந்த ஃப்ளாரன்ஸ் கரார்டை சந்தித்து கிப்ளிங் காதல் கொண்டார் (டிரிக்ஸும் திரும்பிவிட்டார்). த லைட் தாட் ஃபெய்ல்ட் (1891) என்ற கிப்ளிங்கின் முதல் நாவலுக்கு ஃப்ளாரன்ஸ் ஒரு காரணமாக இருந்தார்.[22]
அவருடைய பள்ளிப்படிப்பின் இறுதியில், அவருக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்துக்கு உதவித்தொகையில்[22] செல்வதற்கான கல்வியாற்றல் இல்லாததாக முடிவு செய்யப்பட்டது. அவருக்கு நிதியளிக்க அவருடைய பெற்றோராலும் முடியாதிருந்தது;[16] இதனால் லாக்வுட் கிப்ளிங், லாஹூரில் (இப்போது பாகிஸ்தான்) தன் மகனுக்கு ஒரு வேலையை வாங்கித் தந்தார். அங்கு லாக்வுட் மாயோ காலெஜ் ஆஃப் ஆர்ட்டிற்கு முதல்வராகவும் லாஹுர் அருங்காட்சியகத்தின் காப்பாளராகவும் பணிபுரிந்தார். கிப்ளிங்க், சிவில் மற்றும் மிலிட்டரி கெஸெட் என்ற ஒரு சிறிய உள்ளூர் செய்தித்தாளில் உதவி பதிப்பாளராக இருந்தார்.
1882ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி அவர் இந்தியாவுக்கு கப்பலேறி 1882ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பாம்பேக்கு வந்து சென்றார். இந்த நிகழ்வைப் பல வருடங்களுக்குப் பிறகு கிப்ளிங்க் விவரித்தார், “ஆக, பதினாறு வருடங்களும் ஒன்பது மாதங்களும் நிறைந்தவனாய், நான்கு அல்லது ஐந்து வயது மூத்தவனாய், புதிதாய் அரும்பிய மீசையுடன் நான் பிறந்த பாம்பேக்கு வந்து சேர்ந்தேன். பிற்பாடு என் மீசையை பார்த்தவுடனே திகைத்துப் போன் என் தாய் ஒரு மணி நேரத்துக்குள் அதை உடனே எடுக்கக் கட்டளையிட்டார். பாம்பேயில் நான் கண்ட காட்சிகளும் முகர்ந்த நறுமணங்களும் பழைய நினைவுகளையும் பழைய வார்த்தைகளையும் கொண்டு வந்தன. ஆனால் அவைகளின் அர்த்தமோ எனக்குப் புலப்படவில்லை. இந்தியாவில்-பிறந்த மற்ற பையன்களும் அவர்களுக்கும் இதே நிகழ்வு நடந்ததைக் கூறினார்கள்."[21] இந்த வருகை கிப்ளிங்கை மாற்றியது. “என் பெற்றோர் வாழ்ந்த லாஹூருக்கு செல்ல இன்னும் மூன்று அல்லது நான்கு நாள் இரயில் பயணம் இருந்தது. இதன் பிறகு என்னுடைய ஆங்கில வாழ்க்கை சிறிது சிறிதாக என்னை விட்டு விலகி சென்றது. அதற்கு பிறகு என் வாழ்க்கையில் முழு மூச்சாக அது திரும்பி வந்ததாகவே எனக்கு நினைவில்லை".[21]
ஆரம்பகாலப் பயணங்கள்
த சிவில் அண்ட் மிலிட்டரி கெஸெட் என்ற நாளிதழை என்னுடைய “நேசம் என்னுடைய மிக உன்னதமான காதல்” என்று கிப்ளிங்க் அழைத்தார்.[21] கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டருக்கு ஒவ்வொரு நாள் ஓய்வு தவிர்த்து இந்த நாளிதழ் வருடந்தோறும் வாரத்திற்கு 6 நாட்கள் வெளியானது. பதிப்பாசிரியர் ஸ்டீஃபன் வீலர் கிப்ளிங்கை கடினமாக வேலை வாங்கினார், ஆனால் அவருக்கு எழுத வேண்டுமென்ற அவா கட்டுக்கடங்காமலிருந்தது. 1886ல் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான, டிபார்ட்மெண்டல் டிட்டிஸ் என்ற நூலை வெளியிட்டார். அந்த வருடம் செய்தித்தாள் ஒரு புதிய பதிப்பாசிரியரை சந்தித்தது. புதிய பதிப்பாசிரியரான கே ராபின்சன், கிப்ளிங்கிற்கு அதிக படைப்பாற்று சுதந்திரமளித்து செய்தித்தாளுக்கு குறுங்கதைகள் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.[4]
1883ம் ஆண்டின் வேனிற்காலத்தில், கிப்ளிங், மலை பிரதேசமும், ஆங்கிலேயர் காலத்து இந்தியாவின் வேனிற்கால தலைநகரமுமான சிம்லாவுக்கு (இப்போது ஷிம்லா) விஜயம் செய்தார். அப்போது ஆறு மாதங்களுக்கு இந்தியாவின் வைஸ்ராயும் அரசாங்கமும் ஸிம்லாவுக்கு பெயர்வது வழக்கமாயிருந்தது. ஆகவே அது “பதவி மற்றும் உல்லாசத்திற்கான மையமாக” விளங்கியது.[4] கிப்ளிங்குடைய குடும்பம் வருடாவருடம் ஸிம்லாவுக்கு செல்வதும் லாக்வுட் கிப்ளிங் அங்கிருந்த கிறைஸ்ட் சர்ச்சில் பணிபுரியவும் கேட்டுக்கொள்ளப்பட ஆயிற்று. 1885 முதல் 1888 வரை ஒவ்வொரு வருடமும் வருடாந்திர ஓய்வுக்காக அவர் ஸிம்லாவுக்கு சென்றார். த கெஸெட்டிற்கு அவர் எழுதின பல கதைகளில் ஸிம்லா இடம்பெறலானது.[4] ஸிம்லா அல்லது எந்த ஒரு மலை பிரதேசத்திற்கு என் பெற்றோர் சென்றாலும் அந்த மாதம், எனக்கு பெருத்த மகிழ்ச்சியை அளித்தது. ஒவ்வொரு மணி நேரமும் தங்கத்தில் விலை போனது. இரயிலிலும் சாலையிலும் உஷ்ணத்திலும் அசௌகரியத்திலும் ஆரம்பிக்கும். குளு குளுவென்ற மாலையில் முடியும். இரவு படுக்கையறையில் அனல் மூட்டும் நெருப்பு, அடுத்த நாள் காலையில், சுட சுட தேனீர், இப்படி முப்பது நாட்கள். குடும்பம் முழுவதும் சேர்ந்த களகளவென்ற பேச்சு. வேலை செய்யக் கூட அங்கு ஆயாசமாக இருந்தது. விளையாட்டு வேலை இரண்டும் கலந்து இரண்டும் சமமாகவே முடிந்தது.” என்று அவர் இந்த நேரத்தைக் குறித்து விவரித்தார்.[21] லாஹூரில், 1886ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் 1887ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குமிடையே, அரசிதழில் சுமார் 39 கதைகள் வெளிவந்தன. இக்கதைகளில் பெரும்பாலானவை, கிப்ளிங்கின் முதல் உரைநடை தொகுப்பான ப்லெய்ன் டேல்ஸ் ஃப்ரம் த ஹில்ஸில் 1888ம் ஆண்டு ஜனவரி மாதம் கல்கத்தாவில் அவருடைய 22வது பிறந்த நாளுக்கு ஒரு மாதத்திற்கு பின்பு வெளியானது. அதற்குள் லாஹூரில் கிப்ளிங்குடைய காலம் முடிவுக்கு வந்தது. 1887ம் ஆண்டு நவம்பர் மாதம், அவர் கெஸெட்டின் இன்னும் பெரிய கிளை செய்தித்தாளான ஐக்கிய மாகாணங்களின் அலாஹாபாதிலுள்ள த பையனியருக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருடைய எழுத்து தங்கு தடையின்றி தொடர்ந்தது. பின்வரும் ஆண்டு: சோல்ஜர்ஸ் த்ரீ , த ஸ்டோரி ஆஃப் த கேட்ஸ்பீஸ் , இன் பிளாக் அண்ட் வைட் , அண்டர் த டியோடார்ஸ் , த ஃபாண்டம் ரிக்சா மற்றும் வீ வில்லி விங்கி என்று குறுங்கதை தொகுப்புகள் ஆறினை வெளியிட்டார். இதில் மொத்தம் 41 கதைகள் இருந்தன, அவற்றில் சில சற்று நீளமாகவே இருந்தன. கூடுதலாக, ராஜ்புடானாவின் மேற்கத்திய பிராந்தியத்தில் த பையனியரின் சிறப்பு ஆசிரியராக அவர் எழுதின பல எழுத்துக்கள் பிற்பாடு லெட்டர்ஸ் ஆஃப் மார்க்கீ என்று தொகுக்கப்பட்டு, ஃப்ரம் ஸீ டு ஸீ அண்ட் அதர் ஸ்கெச்சஸ், லெட்டர்ஸ் ஆஃப் டிராவல் என்று வெளியிடப்பட்டன.[4]
1889ம் ஆண்டின் ஆரம்பத்தில், த பையனியர் , கிப்ளிங்கிற்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையிலிருந்து அவரை விடுவித்தது. கிப்ளிங்கும், அதிகமதிகமாக தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். அவருடைய கதைகளின் ஆறு பதிப்புகளின் உரிமைகளை அவர் £200க்கும் ஒரு சிறிய உரிமைத்தொகைக்கும் (ராயல்டி) விற்றுவிட்டார். அதே போன்று த ப்லெய்ன் டேல்ஸையும் £50க்கு விற்றார். மேலும், அவர் விலகப்போவதற்கான அறிவிப்பை முன்னமே அளித்ததற்காக த பையனியரிடம் ஆறு-மாதங்களுக்கான ஊதியத்தை முன்னமே பெற்றுக்கொண்டார்.[21] இந்த பணத்தைக்கொண்டு அவர் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் இலக்கிய பிரபஞ்சத்தின் மையமான லண்டனுக்கு செல்ல முடிவு செய்தார். 1889ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி, கிப்ளிங், இந்தியாவை விட்டு கிளம்பினார். முதலாவது ரங்கூன், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஜப்பான் வழியாக சான் ஃப்ராஸிஸ்கோவிற்கு பயணித்தார். பிறகு அவர் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் த பையனியருக்காக கட்டுரைகள் எழுதிக்கொண்டே பயணம் செய்தார். இவையும் ஃப்ரம் ஸி டு ஸி அண்ட் அதர் ஸ்கெச்சஸ், லெட்டர்ஸ் ஆஃப் டிராவலில் தொகுக்கப்பட்டன. சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் தன்னுடைய அமெரிக்க பயணங்களை துவங்கிய கிப்ளிங்க், வடக்கே போர்ட்லாண்ட், ஆரிகனுக்கு சென்றார்; அங்கிருந்து சியாட்டல், வாஷிங்க்டன்; மேலும் வடக்கே கனடாவில் விக்டோரியா மற்றும் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா; அங்கிருந்து மறுபடியும் அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா; கீழே சால்ட் லேக் சிட்டி; பிறகு கிழக்கே ஹில் குடும்பத்தினரை சந்திக்க ஒமாஹா, [[நெப்ராஸ்காவிற்கு சென்றார். அங்கிருந்து சிகாகோ, இல்லினாய்; பிறகு ஹில் குடும்பத்தினரை சந்திக்க ஒஹியோ நதியில் பீவர் பென்செல்வேனியாவிற்கு சென்றார். அங்கிருந்து பேராசிரியர் ஹில்லுடன் சடாக்குவாவிற்கு சென்றார். பிற்பாடு நயகரா, டொராண்டோ, வாஷிங்டன் டி.ஸி, நியூ யார்க், பாஸ்டன் ஆகிய இடங்களுக்கும் சென்றார்.[23] இந்த பயணத்தின் போது அவர் எல்மைரா, நியூ யார்க்கில் மார்க் ட்வெயினை சந்தித்து அவரோடு சமயம் கழிப்பதில் பூரித்துப் போனார். கிப்ளிங் பிறகு அட்லாண்டிக்கை கடந்து 1889ம் ஆண்டு அக்டோபர் மாதம் லிவர்பூல் வந்து சேர்ந்தார். அதன் பின் சீக்கிரத்தில் அவர் லண்டன் இலக்கிய உலகத்தில் காலெடுத்து வைத்து பெரும் புகழை சம்பாதித்தார்.[3]
ஒரு எழுத்தாளராக அவருடைய வாழ்க்கை
லண்டன்
லண்டனில், கிப்ளிங்குடைய பல கதைகள் பல்வேறு இதழாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தங்கவும் ஒரு இடம் கிடைத்தது:
இதனிடையே, நான் வில்லியர்ஸ் தெரு, ஸ்டிராண்டில் ஒரு குடியிருப்பை கண்டுபிடித்தேன். நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அவ்வளவு முன்னேற்றமடையாமல் பாரம்பரியத்தில் மூழ்கி கிடந்தது. என்னுடைய அறைகள் சிறிதாயிருந்தன, அவ்வளவு சுத்தமாக இல்லை. ஆனால் என்னுடைய மேஜையிலிருந்து என் ஜன்னலுக்கு வெளியே நான் எட்டிப்பார்த்தால், கேட்டிஸ் மியுசிக் ஹாலுடைய விசிறிப்பலகணி நுழைவாயில் வழியாக தெருவக்கு குறுக்காக பார்த்தால் அதன் மேடையைக் கூட பார்க்க முடிந்தது. சேரிங்க் கிராஸ் இரயில்கள் என் கனவுகளில் ஒரு பக்கம் மடமடவென்று பாய்ந்துக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஸ்டிராண்டிலிருந்து வரும் ஓசைகள், என் ஜன்னல்களுக்கு முன், தந்தை தேம்ஸ் ஷாட் டவருக்குக் கீழே அவருடைய பலசரக்குகளை மேலும் கீழும் செலுத்திக்கொண்டிருந்தார்.
அடுத்த இரண்டு வருடங்களில், அவர் த லைட் தட் ஃபெய்ல்ட் என்ற ஒரு நாவலை வெளியிட்டப்பின், நரம்பு தளர்ச்சிக்குள்ளானார்; அப்போது அவர் அமெரிக்க எழுத்தாளரும் வெளியீட்டு முகவருமான வால்காட் பெலிஸ்டர் என்பவரை சந்தித்து அவருடன் சேர்ந்து த நௌலக்கா (இதில் எப்போதும் இல்லாமல் இந்த புத்தகத்தின் தலைப்பை எழுத்துப்பிழையுடன் எழுதிவிட்டார்; கீழேப் பார்க்கவும்) என்ற ஒரு நாவலை எழுதினார்.[16] 1891ம் ஆண்டு அவருடைய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்டிரேலியா, நியுசிலாந்து மற்றும் மறுபடியும் இந்தியாவிற்கு செல்ல கடல் பிரயாணம் மேற்கொண்டார். எனினும் குடற்காய்ச்சல் (டைஃபாய்ட்) ஜுரத்தினால் வால்காட் பெலிஸ்டருடைய திடீர் மரணத்தைக் குறித்துக் கேள்விப்பட்டவுடன், இந்தியாவில் தன் குடும்பத்தோடு கிறிஸ்மஸ் செலவிடவிருந்த திட்டத்தை கைவிட்டு, உடனே லண்டனுக்கு திரும்பினார். அவர் திரும்புவதற்கு முன், வால்காட்டின் சகோதரியான காரொலின் (கேரி) பெலிஸ்டிரிடம் திருமணத்திற்கு தந்தி மூலமாக விருப்பத்தை தெரிவித்தார் (தன்னை ஏற்றுக்கொள்ளும்படியும்). இவரை கிப்ளிங் ஒரு வருடத்திற்கு முன் சந்தித்து, ஒரு தொடர்ச்சியற்ற காதலில் இருந்ததாக தெரிகிறது.[16] இதனிடையே, 1891ம் ஆண்டின் கடைபகுதியில், இந்தியாவில் வாழும் ஆங்கிலேயரின் வாழ்க்கையைப் பற்றிய குறுங்கதைத் தொகுப்பு, லைஃப்ஸ் ஹாண்டிகாப் என்ற நூலும் லண்டனில் வெளியிடப்பட்டது.
1892ம் ஆண்டு, கேரி பெலிஸ்டர் (வயது 29) மற்றும் ரட்யார்ட் கிப்ளிங் (வயது 26) லண்டனில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இலண்டனில் “சளிக்காய்ச்சல் கொள்ளை நோய் பெருமளவில் காணப்பட்டு, அடக்கம் செய்பவர்கள் கறுப்பு குதிரைகளின் பற்றாக்குறையால் இறந்தவர்களை பழுப்பு குதிரைகள் கொண்டு திருப்தி செய்யவேண்டியதாயிருந்தது”.[21] இவர்களது திருமணம் லாங்காம் பிளேஸில் உள்ள ஆல் சோல்ஸ் ஆலயத்தில் நடந்தது. ஹென்றி ஜேம்ஸ் பெண்ணை திருமணத்தில் தந்தார்.
ஐக்கிய அமெரிக்கா
தங்கள் தேன் நிலவுக்காக தம்பதியர் முதலில் ஐக்கிய அமெரிக்காவிற்கும் (ப்ரேடில்போரோ, வெர்மாண்டில் உள்ள குடும்ப பண்ணை வீடு உட்பட) பின்னர் ஜப்பானுக்கும் செல்வதாக முடிவெடுத்தனர்.[16] ஆனால், அவர்கள் யோகோஹோமா, ஜப்பானை வந்தடைந்த போது அவர்களது வங்கியான தி நியூ ஓரியண்டல் பேங்கிங்க் கார்பரேஷன் தோல்வியடைந்ததை அறிந்தனர். அதை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு அவர்கள் வெர்மாண்ட், U.Sக்கு திரும்பி வந்தனர். இந்த சமயத்தில் கேரி அவர்களது முதல் முறை கர்ப்பமாக இருந்தார். அவர்கள் ஒரு மாதத்திற்கு பத்து டாலர்கள் வாடகைக்கு ப்ராடில்போரோ அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். வாடகைக் கொள்முறைக்கு முன்னோடியாக நாங்கள் அதற்கு எளிமையே உருவாக அறைகலன் அமைத்தோம். நாங்கள் இரண்டு அல்லது மூன்று நபர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு பெரிய சூடு-காற்று அடுப்பை வாங்கி நிலவறையில் வைத்தோம். லேசான எங்கள் தரைகளில் பெரிய துளைகளிட்டு அதன் எட்டு இன்ச் பழுப்புகளைப் பொறுத்தினோம் (குளிர் காலத்தின் ஒவ்வொரு வாரமும் எங்கள் படுக்கையிலேயே நாங்கள் எப்படி எரிந்து போகாமல் இருந்தோம் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவேயில்லை) மற்றும் நாங்கள் மிக அதிகபட்சமாக, சுயநலமாக மன நிறைவோடு இருந்தோம்".[21]
அவர்களது முதல் குழந்தை ஜோசஃபின் பிளிஸ் காட்டேஜ் என்ற இந்த குடிலில், “29 டிசம்பர் 1892ம் ஆண்டு அன்று இரவு மூன்று அடி பனிப்பொழிவில்” பிறந்தாள். என்னுடைய பிறந்தநாள் அதே மாதம் 30ம் தேதி மற்றும் அவள் தாயாரின் பிறந்த நாள் அதே மாதம் 31ம் தேதி, அவள் சரியாக பொருந்தும் நேரத்தில் பிறந்ததற்காக அவளைப் பாராட்டினோம்..."[21]
இந்த குடிலில் தான் ஜங்கிள் புக்ஸின் முதல் வரைபடங்கள் கிப்லிங்கிற்குக் கிடைத்தது. “பிளிஸ் குடிலில் உள்ள வேலை அறை ஏழுக்கு எட்டு என்ற அளவில் இருந்தது மற்றும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பனிப் பொழிவின் அளவு ஜன்னல் சாளரம் வரை இருக்கும். ஓநாய்களால் வளர்க்கப் பட்ட ஒரு சிறுவன் உள்ளிட்டவர்கள் இருக்கும் ஒரு இந்திய வன வேலை பற்றிய கதை ஒன்றை நான் எதேச்சையாக எழுதினேன். ‘92ம் ஆண்டின் குளிர் காலத்தில் அமைதியான, ரகசியம் நிறைந்த நேரத்தில் என்னுடைய சிறு வயது பத்திரிக்கைகளில் இருந்த மசானிக் சிங்கங்கள் மற்றும் ஹகார்டின் நாடா த லில்லியில் உள்ள ஒரு வரியும் இந்த கதையோடு இணைந்து எதிரொலித்தது. இந்த பிரதான யோசனையை மூளையில் தேக்கிய பின் எனது பேனா ஆதிக்கம் செய்யத் தொடங்கியது மற்றும் அது மோக்லி மற்றும் மிருகங்கள் பற்றிய கதைகளை எழுதத் தொடங்கியதை நான் கண்டேன். இது பிற்காலத்தில் ஜங்கிள் புக்ஸாக உருவாகியது".[21] ஜோசஃபின் பிறந்த பின்னர் பிளிஸ் குடில் நெருக்கமாக இருந்தது, ஆகையால் அவர்கள் ஒரு நிலம் வாங்கினர் –10 ஏக்கர்கள் (40,000 m2) கனேடிகட் நதியை பார்த்தபடி இருக்கும் ஒரு பாறைகள் நிறைந்த மலையோரத்தில் கேரியின் சகோதரர் பெட்டி பெலாஸ்டியரிடம் இருந்து வானிகி தங்களது சொந்த வீட்டைக் கட்டினர்.
அந்த வீட்டிற்கு கிப்லிங் வால்காட் மற்றும் அவர்களது இனைவை மதிக்கும் வகையில் வீட்டிற்கு “நவ்லாகா” எனப் பெயரிட்டார், இந்த முறை அதன் பெயர் சரியாக எழுதப்பட்டது.[16] லாகூரில் அவரது இளமைக் காலத்தில் இருந்து (1882-87) கிப்லிங்கிற்கு முகலாய கட்டுமானங்கள்[24] உற்சாகத்தை அளித்தது குறிப்பாக லாகூர் கோட்டையில் அமைந்துள்ள நவ்லாகா காட்சி மாடம் மிகவும் கவர்ந்தது. இதுவே பின்னாளில் அவரது நாவலின் தலைப்புக்கும் அவரது வீட்டுப் பெயருக்கும் உத்வேகமாக அமைந்தது.[25] கிப்லிங் சாலையில், டம்மர்ஸ்டனில் உள்ள பிராட்டில்புரோவுக்கு வடக்கே மூன்று மைல் (5 கிமி) தூரத்தில் இந்த வீடு இன்னும் உள்ளது. இது ஒரு பெரிய, ஒதுங்கிய, அடர்த்தியான பச்சை நிற வீடு மற்றும் இதில் கூழாங்கற்களால் ஆன மேற்கூரை மற்றும் பக்கங்கள் கொண்டது. இதை கிப்லிங் தனது “கப்பல்” என்றும் “ தனக்கு “சூரிய ஒளி கொடுத்து மற்றும் மனதை லேசாக வைத்துக்கொண்டது” எனக் குறிப்பிடுகிறார்.[16] வெர்மாண்டில் அவர் தனித்து இருந்ததாலும் அவரது ஆரோக்கியமான “நல்லறிவு மிக்க சுத்தமான வாழ்வு” ஆகியவை அவரை புதிதாக மற்றும் அதிகமாக எழுதுபவராக்கியது.
நான்கு வருட குறுகிய காலத்தில், ஜங்கிள் புக்ஸுக்கு கூடுதலாக, ஒரு சிறுகதைகளின் தொகுப்பு (த டேஸ் வொர்க் ), ஒரு நாவல் (கேப்டன்ஸ் கரேஜியஸ்) மற்றும் த செவன் சீஸ் உள்ளிட்ட அளவற்ற கவிதைகள் ஆகியவற்றை படைத்தார். அவரின் கவிதைகளான “மாண்டலே” மற்றும் “கங்கா டின்” ஆகியவை அடங்கிய, மார்ச் 1890ல் முதன் முறையாக தனிப்பட்ட முறையில் பதிப்பிக்கப்பட்ட பேரக்-ரூம் பாலட்ஸ் என்பதன் தொகுப்பு மார்ச் 1892ம் ஆண்டு வழங்கப்பட்டது. குறிப்பாக ஜங்கிள் புக்ஸ் எழுதுவதை மிகவும் விரும்பினார் – இரண்டும் கற்பனை எழுத்தாற்றலில் தலை சிறந்தவை – மேலும் அந்த புத்தகங்களைப் பற்றி அவருக்கு எழுதிய குழந்தைகளுக்கு பதில் போடுவதையும் பேசுவதையும் விரும்பினார்.[16]
லேச்சொன் நவ்லாகாவில் அவரது எழுத்து வாழ்வை எப்போதாவது சில பார்வையாளர்கள் இடையூறு செய்வார்கள். இதில், 1893ல் ஓய்வு பெற்ற பிறகு அவரை சந்திக்க வரும் அவரது தந்தை[16] மற்றும் அவரது கோல்ஃப் விளையாட்டு குச்சிகளை கொண்டு வந்து இரண்டு நாட்கள் தங்கி கிப்லிங்கிற்கு அதிகப்படியான கோல்ஃப் பாடங்களை எடுக்கும் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கோணன் டோய்ல் ஆகியோர் அடங்குவர்.[26][27] கிப்லிங்கிற்கு கோல்ஃப் பிடித்துப்போனது, எப்போதாவது உள்ளூர் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தும் பாதிரியாரோடு பயிற்சி செய்வார், மேலும் தரை பனியால் மூடப் பட்டிருக்கும் போது சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட பந்தை வைத்து கூட விளையாடுவார்.[14][27] ஆனால், இந்த விளையாட்டு “பெரிய வெற்றி அடையவில்லை, ஏனெனில் அடிப்பதற்கு அதிகபட்ச அளவு இல்லாமல் இருந்தது: பந்து 2 மைல்கள் (3 கிமி) வழுக்கி கனேடிகட் நதிக்கு இறக்கத்தில் பயனித்து சென்றுவிடும்."[14]
அனைத்து ஆதாரங்களின் படி, கிப்லிங்க் வெளிப்புறத்தை நேசித்தார்,[16] வெர்மாண்டில் இலையுதிர் காலத்தில் இலைகள் திரும்புதல் கூட எந்த வகையிலும் குறைந்ததல்ல. இந்த நிகழ்வை ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார்:"ஒரு சிறிய பனை இதை துவக்கியது, எரியும் இரத்தச் சிவப்பு திடீரென ஏற்பட்டு, அங்கு ஒரு பணை மரங்களின் வரிசையின் அருகில் அவன் நின்றான். அடுத்த நாள் காலை சுமாக்குகள் வளரும் சதுப்பு நிலங்களில் இருந்து பதில் கிடைத்தது. மூன்று நாட்கள் கழித்து குன்றின் பக்கங்களில் கண்களுக்கு எட்டும் தூரம் வரை தீ பரவியது, சாலைகளில் ஆழ்சிவப்பு மற்றும் தங்க நிறங்கள் மூடி இருந்தன. பின் ஒரு ஈரமான காற்று அடித்து அந்த மிக அழகான ரானுவத்தின் சீருடைகளை கலைத்தது; மற்றும் திடமாக நின்று கொண்டிருந்த அந்த கருவாலி மரங்கள், கடைசி இலை உதிரும் வரை தங்கள் மந்தமான வெங்கல நிறமுடைய கவசங்களைத் தாங்கி, ஒன்றுமே இல்லாமல் பென்சில்-நிழல் கோடு போன்று வெற்று மரக்கிளைகள் மட்டும் இருக்கும் வரை நின்றன. அந்த மரங்களின் மிக அந்தரங்க இதயம் வரை ஒருவரால் பார்க்க முடிந்தது."[28]

1896 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், இந்த ஜோடியின் இரண்டாவது பெண் எல்சி பிறந்தார். இந்த சமயத்தில், பல வாழ்க்கை வரலாறு எழுத்தாளர்களின் படி அவர்களது திருமண உறவுமுறை கவலை இல்லாத மற்றும் இயல்பானதாக இல்லை.[29] அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை உடையவர்களாக எப்போதும் இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட பங்குகளில் விழுந்துவிட்டது போல தோன்றியது.[16] இதே சமயத்தில் நிச்சயதார்த்தம் நடந்த ஒரு நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த வருத்தமான அறிவுரையை வழங்குகிறார்: திருமணங்கள் முக்கியமாக கற்றுக் கொடுப்பவை “கடினமான ஒழுக்கங்கள் – பணிவு, கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் முன்சிந்தனை போன்றவையாகும்."[30]
கிப்லிங் குடும்பத்தினர் வெர்மாண்ட் வாழ்க்கையை மிகவும் நேசித்தனர், இரண்டு நிகழ்வுகள் நடந்திராவிட்டால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்திருப்பர் – ஒன்று உலக அரசியல் தொடர்பானது, மற்றொன்று குடும்ப வேறுபாடு. இவை அவர்களின் அந்த வாழ்க்கையை முடித்தது. 1890களின் தொடக்கத்தில் யுனைடட் கிங்டம் மற்றும் வெனிசுவேலா பிரிட்டிஷ் கியானா தொடர்பான எல்லைப் பிரச்சனையினால் சண்டையில் இறங்கின. பல முறை, அமெரிக்கா நடுநிலை வகிக்க முன்வந்தது, ஆனால் 1895ல் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் ரிச்சர்டு ஓல்னி, கண்டத்தில் அரசுரிமை இருப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கு நடுநிலை வகிக்கும் “உரிமை” உண்டு என்று வாதிட்டு பிரச்சனையை பெரிதாக்கினார் (மோண்ட்ரோவின் கோட்பாட்டின் நீட்டிப்பாக ஓல்னியின் பொருள் விளக்கத்தைப் பார்க்கவும்).[16] இது யுனைடட் கிங்டமில் பிரச்சனைகளை உருவாக்கியது மற்றும் இந்த நிகழ்வு ஒரு பெரிய ஆங்லோ-அமெரிக்க பிரச்சனையாக பெரியதாகி, இரண்டு பக்கங்களிலும் போர் என்ற பேச்சுகள் எழும் வரை சென்றது.
இந்த பிரச்சனை இன்னும் அதிகமான அமெரிக்க-பிரிட்டிஷ் ஒத்துழைப்புக்கு வழி வகுத்தாலும், அந்த நேரத்தில் அங்கு பரவியிருந்த குறிப்பாக பத்திரிக்கைகளில் இருந்த பிரிட்டிஷுக்கு எதிரான எண்ணங்கள் கிப்லிங்கிற்கு மனக்குழப்பத்தை அளித்தது.[16] அவர் ஒரு கடிதத்தில் – “ஒரு நட்புடனான இரவு உணவு மேஜையில் இருக்கும் போது ஒரு இறுப்பானை வைத்து குறி பார்ப்பது போல” உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[30] அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு எழுத்தாளரின் படி,[14] ஜனவரி 1896ல் அமெரிக்காவில் தனது குடும்பத்தின் “நல்ல முழுமையான வாழ்வை” முடித்துக் கொண்டு தங்கள் வருங்காலத்தை வேறு எங்காவது தேட அவர் முடிவெடுத்தார்.
டேவன்
இறுதி பிரச்சனையாக ஒரு குடும்ப தகராறு ஆனது. சிறிது நாளாக, கேரிக்கும் அவளது சகோதரர் பீட்டி பெலஸ்டியருக்கும் இடையேயான உறவுமுறை அவரது குடிப்பழக்கம் மற்றும் கடன்பிரச்சனை காரணமாக சுமுகமாக இல்லாமல் போனது. மே 1896ல், முழுமையாகக் குடித்திருந்த பீட்டி தெருவில் கிப்லிங்கை சந்தித்து உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கப் போவதாக மிரட்டினான்.[16] இந்த நிகழ்வு பீட்டி கைதாவதற்கு வழி வகுத்தது, ஆனால் அதைத் தொடர்ந்த வழக்கு மற்று அதன் விளைவான விளம்பரம், கிப்லிங்கின் தனிமையை முழுவதுமாக அழித்தது மற்றும் அவர் மிகுந்த துயரமாகவும், சோர்வாகவும் ஆகினார். ஜுலை 1896ல், வழக்கு மீண்டும் தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்பு, நல்லதற்காக நவ்லாகா , வெர்மாண்ட் மற்றும் அமெரிக்காவை விட்டு தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.[14]
இங்கிலாந்தில், செப்டம்பர் 1896ல், டேவன் கடற்கரையில் டோர்கே என்ற இடத்தில் ஒரு மலை அருகில், கடலைப் பார்த்தவாறு இருக்கும் வீட்டில் குடியேறினர். வசிப்பவர்களை ஊக்கமிழந்தவர்களாகவும், மனம் தளர்ந்தவர்களாகவும் ஆக்குவதாக நினைத்த இந்த புது வீட்டைப் பற்றி கிப்லிங்க் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை எனிலும், அவர் ஆக்கப்பூர்வமாகவும், சமுதாயத்தோடு இணக்கமுள்ளவராகவுமே இருந்தார்.[16] கிப்லிங் தற்போது மிகப் பிரபலமானவராக இருந்தார் மற்றும் முந்தைய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவரது எழுத்துகளின் வழியாக அரசியல் விமர்சனங்களை அதிகமாக குறிப்பிடத் தொடங்கி இருந்தார். ஆகஸ்டு, 1897ல் அவரது மகன் ஜான் பிறந்தார். பதிக்கப்பட்ட போது முரண்பாடை விளைவித்த இரண்டு கவிதைகளான “ரிசஷனல்” (1897) மற்றும் “த வொயிட் மேன்ஸ் பர்டன்”(1899) ஆகியவற்றிற்கான வேலைகள் இந்த நேரத்தில் தான் அவர் தொடங்கினார். தெளிவான மற்றும் கடமை சார்ந்த பேரரசை உருவாக்க உதவும் பண்ணாக சிலர் இதை கருதினாலும் (விக்டோரியன் காலத்தின் மனநிலையை பிரதிபலித்தது), இந்த கவிதைகள் மற்றவர்களால் அதே அளவிற்கு ஏகாதிபத்தியம் மற்றும் அதை சார்ந்த நிற வெறி மனப்பான்மையின் கொள்கைப் பரப்பாகவும் கருதப்பட்டது; ஆயினும் மற்ற சிலர் இந்த கவிதைகளில் சோகத்தையும் மற்றும் ஒரு ஏகாதிபத்தியம் சிதறப்போவதற்கான எச்சரிக்கைகளையும் பார்த்தனர்.[16]
<கவிதை>வெள்ளை மனிதனின் பாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்—
நீங்கள் உருவாக்கும் சிறந்த இனத்தை அனுப்புங்கள்— உங்கள் புதல்வர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புங்கள் உங்களால் சிறைபட்டவர்களுக்கு உதவ; அதிகப்படியான பாரமான உடுப்புகளோடு காத்திருக்க, காடுகள் மற்றும் நாடுகளில் சிறையடிக்கப்பட்ட மக்களோடு— நீங்கள் புதிதாய் பிடித்த பாவப்பட்ட மக்கள், பாதி பேய் குணம் கொண்டவர்கள் பாதி குழந்தை போன்றவர்கள். - த வைட் மேன்ஸ் பர்டன் [31]
</கவிதை>
இந்த கவிதைகளில் முன்னோக்கும் இருந்தது, இந்த எண்ணம் ஒன்றுமே இல்லாமலும் கூட போகலாம்.[32]
<கவிதை>தூரந்திரியும், எங்கள் மாலுமிகள் கரைகின்றன;
மலைகளிலும் குன்றுகளிலும் தீ மங்குகின்றது: அந்தோ, சென்ற காலங்களின் புகழெல்லாம் நினிவே, தீரு போல் ஆனதே! தேசங்களின் நீதிபதியே, எங்களை சற்று பொறுத்தருளும். நாங்கள் மறந்து போவதற்குமுன் - நாங்கள் மறந்து போவதற்குமுன்!
- ரிசஷனல் [33]</கவிதை>
ஒரு அளவுக்குள் அடங்காத எழுத்தாளர்—அவரது எந்த வேலையும் எளிதில் வகைபடுத்தமுடியாது – டார்கேயில் இருந்த போது, அவர் ஸ்டால்கி & கோ என்ற பள்ளிக் கதைகளின் தொகுப்பை எழுதினார் (வெஸ்ட்வேர்ட் ஹோவில் உள்ள யுனைடட் சேர்விஸஸ் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பிறந்தது). இதில் உள்ள சிறு வயது முதன்மை கதாபாத்திரங்கள், அனைத்தும் தெரிந்த தேசப்பற்று மற்றும் அதிகாரத்தின் மீது குறை கூறும் மனப்பான்மையோடு இருந்தனர். அவரது குடும்பத்தாரின் படி, ஸ்டால்கி & கோவில் உள்ள கதைகளை உரக்கப் படிப்பதை மிகவும் விரும்பினார் மற்றும் பல முறை தனது சொந்த நகைச்சுவைகளைப் படித்தே பிடிப்பு ஏற்படும் அளவுக்கு சிரிப்பார்.[16]
தென்னாப்பிரிக்கா

1898ன் முன் பகுதியில் அவரது குடும்பம் ஒரு குளிர்கால விடுமுறைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு பயணமானாரகள். இது ஒரு வருடாந்திர பாரம்படியமாக தொடர்ந்து (இதன் அடுத்த வருடம் தவிர) 1908ம் ஆண்டு வரை நீடித்தது. தனது புதிய மதிப்பான பேரரசின் கவிஞர் என்பதைத் தொடர்ந்து கிப்லிங்க், கேப் காலணியில், செசில் ரோட்ஸ், சர். ஆல்ஃபிரட் மில்னர் மற்றும் லியேண்டர் ஸ்டார் ஜேம்ஸன் உள்ளிட்ட சில அதிக அதிகாரம் உள்ள அரசியல்வாதிகளால் வரவேற்கப்பட்டார். இதற்கு கைமாறாக, கிப்லிங்க் ஒரு இவர்களோடு நட்பு வளர்த்துக் கொண்டார் மற்றும் மூன்று பேரையும் அவர்களது அரசியலையும் மெச்சத் தொடங்கினார். தென் ஆப்பிரிக்கா வரலாற்றில் 1898-1910 வரை மிகுந்த முக்கியமான காலகட்டமாக இருந்தது. இரண்டாவது போயர் போர் (1899-1902), அதைத் தொடர்ந்த சமாதான ஒப்பந்தம் மற்றும் 1910ல் தென் ஆப்பிரிக்க சங்கம் ஆகியவை தொடங்கப்பட்டது. இங்கிலாந்துக்கு திரும்பி வந்தவுடன், போயர் போரில் பிரிட்டிஷின் நிலைக்கு ஆதரவாக கிப்லிங் கவிதை எழுதினார் மற்றும் 1900ன் தொடக்கத்தில், பிரிட்டிஷ் வீரர்களுக்காக த ஃபிரண்ட் என்ற பத்திரிக்கையை புதிதாகக் கைபற்றப் பட்ட ஆரஞ்சு ஃபிரீ ஸ்டேட்டின் தலை நகரான புளோம்ஃபோண்டைனில் தொடங்க உதவி புரிந்தார். அவரது பத்திரிக்கை வேலை இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்தாலும், 10 வருடங்களுக்கு முன்னால் அலகாபாதில் த பயோனியர் பத்திரிக்கையில் இருந்து வெளி வந்த பிறகு முதன் முறையாக கிப்லிங் பத்திரிக்கை பணியாளராக இருந்தார்.[16] சண்டையைப் பற்றிய அவரது கருத்துகளை அதிகப்படியான வெளிப்படுத்தும், பிரசுரிக்கப்படும் கட்டுரைகளையும் அவர் எழுதினார்.[34] கிம்பர்லியில் மதிக்கப்பட்ட இறந்தவர்கள் நினைவிடத்திற்கான (நெடுநாளாக இருக்கும் நினைவுச்சின்னம்) கல்வெட்டையும் எழுதினார்.
மற்ற எழுத்துகள்
கிப்லிங் தனது மற்றொரு குழந்தைகளுக்கான கதைகளுக்காக பொருட்களை சேமிக்கத் தொடங்கினார், ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ் ஃபார் சில்ட்ரன். இது 1902ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அவரது இன்னுமொரு அற்புதமான வேலையான, கிம் இதற்கு அடுத்த ஆண்டு பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
1899 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிற்கு அவர்கள் வந்தபோது, கிப்லிங் மற்றும் அவளது மூத்த மகள் ஜோசஃபின் இருவரும் நியுமோனியாவால் (நுரையீரலழற்சி) பாதிக்கப்பட்டனர். இந்த நோயினால் அவரது மகள் ஜோசஃபின் இறந்து போனார். முதல் உலகப் போரின் போது, போரின் பல கப்பல்துறை சார்ந்த பொருள்களைப் பற்றிய பல்வேறு கட்டுரைகள் மற்றும் கவிதைகள் கொண்ட த ஃபிரிண்ஜஸ் ஆஃப் ஃபிளீட் [35] என்ற புத்தகத்தை எழுதினார். இந்த கவிதைகளில் சிலவற்றை ஆங்கில இசையமைப்பாளர் எட்வர்டு எல்கர் இசைக் கோர்ப்பு செய்தார்.
கிப்லிங் இரண்டு அறிவியல் கற்பனைக் கதைகளை எழுதினார், வித் த நைட் மெயில் (1905) மற்றும் ஏஸ் ஈஸி ஏஸ் ஏ.பி.சி (1912), இரண்டும் 21ம் நூற்றாண்டில் கிப்லிங்கின் ஏரியல் போர்ட் ஆஃப் கண்டிரோல் யூனிவர்ஸ் என்பதை மையமாக கொண்டதாகும். இவை நவீன விஞ்ஞான கற்பனைகளாக இருந்தன.[36]
1934ல் ஸ்ட்ரேண்ட் பத்திரிக்கையில் “ஃப்ரூஃப்ஸ் ஆஃப் ஹோலி ரிட்” என்ற ஒரு சிறுகதையை அவர் எழுதினார். இதில் வில்லியம் ஷேக்ஸ்ஃபியர் கிங் ஜேம்ஸின் பைபிலின் வார்த்தைகளை சீர் செய்ய உதவினார் என குறிப்பிட்டுள்ளார்.[37] கற்பனை-அல்லாதவைகள் என்ற வகையில் கூட அவர் ஈடுபட்டார். அவர் ஜெர்மன் கடற்படையின் பலத்திற்கு பிரிட்டிஷின் பதிலளிப்பை பற்றிய விவாதத்தில் பங்கெடுத்து பல தொடர் கட்டுரைகளை 1898ம் ஆண்டு எழுதினார். இது ஏ ஃபிலீட் இன் பீயிங் என்று தொகுக்கப்பட்டது.
தொழிலின் உச்சநிலை
இருபதாம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் கிப்லிங் தனது புகழின் உச்சியில் இருந்தார். 1907ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. பரிசு புகழுரையில் குறிப்பிடப்பட்டது: “கவனிக்கும் திறனின் வலிமையை கருத்தில் கொண்டு, கற்பனையின் அசல்தன்மை, யோசனைகளின் வீரியம் மற்றும் வர்ணணையில் உள்ள அலாதியான திறமை ஆகியவை இந்த உலகப் புகழ் எழுத்தாளரின் படைப்புகளில் காணப்படும் குணாதிசயங்கள்”. நோபல் பரிசுகள் 1901ல் இருந்து உருவாக்கப்பட்டது மற்றும் கிப்லிங் அதைப் பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளர் ஆவார். 1907 ஆம் ஆண்டில் டிசம்பர் 10 தேதி, ஸ்டாக்ஹோமில் நடந்த பரிசளிப்பு விழாவில், ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தர செயலர், சி.டி.ஆஃப் விர்சன் கிப்லிங்கையும் மூன்று நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தையும் பாராட்டினார்:[38]
இந்த ஆண்டு நோபல் பரிசை ருட்யார்டு கிப்லிங்கிற்கு ஸ்வீடிஷ் அகாடமி கொடுப்பதன் மூலம், பன்மடங்கு புகழைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து இலக்கியத்திற்கு மற்றும் நம்முடைய கால கட்டத்தில் இந்த நாடு கொடுத்த வர்ணனை என்ற வகையின் மிகச் சிறந்த அறிவாளிக்கும் வணக்கமும் பாராட்டும் தெரிவிக்க விழைகிறது.
இந்த சாதனையின் “புத்தக-இறுதியாக”, இரண்டு தொடர்புடைய கவிதை மற்றும் கதைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது அமைந்தது: 1906 மற்றும் 1910ல் முறையே வெளியிடப்பட்ட பக் ஆஃப் பூக்ஸ் ஹில் மற்றும் ரிவார்ட்ஸ் அண்ட் ஃபேரீஸ் . அதற்கு பிறகு “இஃப்…” என்ற கவிதை இடம் பெற்றிருந்தது. 1995ல் பி.பி.சி நடத்திய கருத்து கணிப்பில், இது யூகேவின் அதிகமாக விரும்பப்படும் கவிதையாக தேர்வு செய்யப்பட்டது. சுய கட்டுப்பாடு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்துதல் பற்றி விவரிக்கும் இந்த கவிதை கிப்லிங்கின் மிகப் பிரபலமான கவிதை என்பதை எந்த ஐயமுமின்றி சொல்லலாம்.
ஐரிஷ் சங்க அங்கத்தினர்களின் சுய-ஆட்சி எதிர் நிலையைக் கண்டு கிப்லிங்க் மிகவும் பரிதாபப்பட்டார். உல்ஸ்டர் சங்கத்தின் தலைவரான டப்லினில் பிறந்த எட்வர்ட் கார்சன் கிப்லிங்கின் நண்பராவார். இவர் அயர்லாந்தில் சுய ஆட்சியை எதிர்த்து உல்ஸ்டர் தன்னார்வளர்களை எழுப்பினார். இதை பிரதிபலிக்கும் வகையில் 1912ல் “உல்ஸ்டர்” என்ற கவிதையை கிப்லிங் எழுதினார். தனது நண்பர் ஹென்ரி ரைடர் ஹகார்டை போலவே கிப்லிங்கும் போல்ஷிவிசத்தை கடுமையாக எதிர்த்தார். இந்த ஒத்த கருத்தினாலேயே கிப்லிங்க் 1889ல் லண்டன் வந்த போது இருவரும் நண்பர்கள் ஆயினர் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்தனர்.
அவர் அரசவைக் கவியாக ஏன் அறிவிக்கப்படவே இல்லை என பலர் ஆச்சரியப்பட்டனர். 1892-96 இடையே அவருக்கு இது வழங்கப்பட்டதாகவும் அவர் அதை நிராகரித்து விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
முதல் உலகப் போரின் தொடக்கத்தில், மற்ற பல எழுத்தாளர்கள் போல, யூகேவின் போர் நோக்கங்களுக்கு உற்சாகமாக ஆதரவு அளிக்கும் துண்டு பிரசுரங்களையும் கிப்லிங்க் எழுதினார்.
முதல் உலகப் போரின் தாக்கங்கள்
1915ல், லூஸ் சண்டையில் கிப்லிங்கின் ஒரே மகன் ஜான் இறந்தார். அதற்கு பின் அவர் எழுதியது “யாராவது ஏன் நாங்கள் இறந்தோம் எனக் கேட்டால், அவர்களிடம், எங்கள் தந்தைகள் பொய் சொன்னார்கள் எனக் கூறவும்” (கிப்லிங்கின் மகன் இறந்தது அவரது கவிதையான, “மை பாய் ஜேக்”, என்பதற்கு ஆதாரமாக அமைந்தது மற்றும் இந்த நிகழ்வு மை பாய் ஜேக் என்ற நாடகத்திற்கும் அதைத் தொடர்ந்து வந்த தொலைக்காட்சி தழுவல், ஆவணப்படத்துக்கும் ஆதாரமாக அமைந்தது இரட்யார்ட் கிப்லிங்: அ ரிமெம்பரன்ஸ் டேல் .) ஏனெனில், முதலில் சரியில்லாத கண் பார்வை காரணமாக ஜான் ஐரிஷ் காவலர் துறையில் நிராகரிக்கப்பட்டாலும் வெறும் 17 வயதில் அவரை அலுவலர் பயிற்சிக்கு தனது மகனை சேர்க்க தனது செல்வாக்கை அதிகமாக பயன்படுத்தி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த காவலர்கள் துறையில் அவருக்கு இடம் வாங்கித் தந்ததில் அவரது பங்கை நினைத்து கிப்லிங்கின் குற்ற உணர்வை வெளிப்படுத்துவதாய் இந்த வார்த்தைகள் உள்ளதாக யூகிக்கப்படுகிறது.[39]
இந்த துயரத்துக்கு ஒரு பகுதி பதிலளிப்பாக, கிப்லிங் சர்.ஃபேபியன் வேரின் இம்பீரியல் போர் கல்லறை குழுவில் (இப்போது காமென்வெல்த் போர் கல்லறை குழு) சேர்ந்தார். முன்னாளில் மேற்குப் பகுதிகளை ஒட்டி வரிசையாக அமைந்துள்ள தோட்டம் போன்ற பிரிட்டிஷ் போர் கல்லறைகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் காமென்வெல்த் வீரர்கள் புதைக்கப் படிருக்கும் இடங்களுக்கும் இந்த குழு பொறுப்பேற்றது. இந்த திட்டத்தில் அவரது மிக முக்கியமான பங்களிப்பு அவர் கல்லறைகளுக்காக தேர்ந்தெடுத்த பைபிள் வாசகம். பெரிய கல்லறைகளில் நினைவுக் கற்களில் பொறிக்க “அவர்களது பெயர் இன்னும் வாழட்டும்” என்ற வாசகத்தையும், அடையாளம் தெரியாத வீரர்களின் கல்லறை கற்களில் “கடவுள் அறிவார்” என்ற வாசகத்தையும் அவர் பரிந்துரை செய்தார். அவர் இரண்டு பாகங்கள் கொண்ட ஐரிஷ் காவலர்களின் வரலாறு அடங்கிய புத்தகத்தை எழுதினார் மற்றும் ராணுவ வரலாறுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.[40] கிப்லிங்கின் உருக வைக்கும் சிறு கதையான, “த கார்டனர்” கல்லறைகளுக்கு சென்றதைக் கூறுகிறது மற்றும் அவரது கவிதை “த கிங்ஸ் பில்க்ரிமேஜ்” (1922) கிங் ஜார்ஜ் V இம்பீரியல் போர் குழுவினால் கட்டப் பட்டுக் கொண்டிருந்த கல்லறைகளையும், நினைவு சின்னங்களையும் பார்வையிட அவர் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிக் கூறுகிறது. வாகனங்களின் புகழ் அதிகமாகத் தொடங்கிய போது, கிப்லிங்க் பிரிட்டிஷ் பத்திரிக்கையின் வாகனங்கள் பற்றிய செய்தியாளர் ஆனார் மற்றும் அவரது வாகனத்தை ஒரு ஓட்டுனர் தான் இயக்கினாலும், இங்கிலாந்தை சுற்றி, வெளிநாடுகளுக்கும் அவர் செய்த பயணங்கள் பற்றி உற்சாகமாக எழுதினார்.
1922ல், கிப்லிங் அவரது சில கவிதைகளில் பொறியாளர்களின் வேலையைப் பற்றி குறிப்பிட்டிருந்ததால், டொரோண்டோ பல்கலைக் கழகத்தின் கட்டுமான பொறியியல் பேராசிரியர் ஒருவர் பட்டம் பெறும் பொறியியல் மாணவர்களுக்காக ஒரு மதிப்பான கடமை மற்றும் நிகழ்வை தயார் செய்ய அவரது உதவியை வேண்டினார். கிப்லிங் மிகுந்த உற்சாகத்தோடு இரண்டையும் விரைவாக எழுதினார், அது முறையான தலைப்பாக, “த ரிச்சுவல் ஆஃப் த காலிங் ஆஃப் அண் இண்ஜினியர்” என்று அழைக்கப்பட்டது. தற்போது, கனடாவில் பட்டம் பெறும் அனைத்து பொறியியல் பட்டதாரிகளுக்கும் சமுதாயத்தில் அவர்களின் கடமையின் நினைவாக ஒரு இரும்பு வளையம் வழங்கப்படுகிறது.[41] அதே வருடம் கிப்லிங், மூன்று வருட பணியாக, ஸ்காட்லாந்தில் உள்ள செயிண்ட். ஆண்ட்ரூ பல்கலைக் கழகத்தின் லார்டு ரெக்டராக ஆனார்.
இறப்பு மற்றும் மரபு
கிப்லிங்க் 1930களின் முதல் பகுதி வரை எழுதிக் கொண்டே இருந்தார். ஆனால் இப்போது அவரது வேகமும் குறைந்தது மற்றும் வெற்றியும் சரிந்தது. அவர் 18 ஜனவரி 1936ம் ஆண்டு துளையுடைய முன் சிறுகுடற் புண் ஏற்பட்டு,[42] ஜார்ஜ் V இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் 70 வயதில் இறந்தார். அவரது இறப்பு பற்றி முன்னதாக ஒரு பத்திரிக்கையில் தவறான செய்தி வெளியிடப்பட்டது, அதற்கு அவர், “தற்போது தான் நான் இறந்துவிட்டதாக படித்தேன். உங்கள் சந்தாதாரர்களின் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விட மறந்து விடாதீர்கள்” என்று எழுதினார்.")
ரட்யார்ட் கிரிப்லிங் கோல்டர்ஸ் கிரீன் இடுகாட்டில் எரியூட்டப்பட்டார். அவரது சாம்பல் பல பெருமை வாய்ந்த இலக்கிய கவிஞர்கள் புதைக்கப்பட்ட அல்லது கௌரவிக்கப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் ஆஸ்ரமம் தெற்குப் பகுதியில் உள்ள போயட்ஸ் கார்ணரில் புதைக்கப்பட்டது.
இறப்புக்குப் பின் மதிப்பு
பல எழுத்தாளர்கள், மிக முக்கியமாக எட்மண்ட் கேண்ட்லர், கிப்லிங்கின் படைப்புகளால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். ஆயினும், அவரது இறப்பைத் தொடர்ந்து அவரது படைப்புகள் அழியத் தொடங்கியது. அவரது சரியான அளவுகள் மற்றும் நயம் என்பதிலிருந்து கவிதையில் புது பாணி விலகிச் சென்றது. மேலும், 20ம் நூற்றாண்டுன் நடுவில் கொலோணியல் காலனிகள் சரியத் தொடங்கிய போது, கிப்லிங்கின் படைப்புகள் அந்த காலத்திற்கு ஏற்றார் போல் இல்லாமல் போனது. அவரை குற்றம் சாட்டும் பலர், கிப்லிங்கின் படைப்புகளை அவரது சமூக மற்றும் அரசியல் பார்வைகளில் இருந்து பிரிக்க முடியாது என கருதுகின்றனர்; அவர் இந்திய கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர், இவை அதிக பட்சமாக கலோணிய பார்வையான, இந்தியர்கள் மற்றும் மற்ற காலணிகளில் உள்ள மக்கள் ஐரோப்பியர்கள் உதவியின்றி வாழ முடியாது என்பதை ஆதரிக்கிற படியால் இவை இனவெறி சார்ந்தவை எனக் கருதப்படுகிறது. ஆயினும், அவரது பல படைப்புகளில் மிக அதிகமான பெருநோக்குப் பார்வை கூட பார்க்க முடியும் மற்றும் ஆச்சரியமாக ஐரோப்பியர் அல்லாதவர்கள் மீது மதிப்பும் எப்போதாவது வெளியே தெரியும். இந்த வாதத்திற்கு ஆதாரமாக அவர் “ரிசஷனல்” என்பதில் குறிப்பிட்டுள்ள “சட்டம் இல்லாத குறைந்த இனத்தவர்” என்ற வரியில் உள்ள சோகத்தை மறுப்பதாகும். இந்த வரிகள் சீனாவில் பாக்சர் எதிர்ப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், ஜெர்மணியில், கைசர் வில்ஹம் II, பேசிய பேச்சின் சமகாலத்திய ஆதாரமாக விளங்குகிறது. வில்ஹம் கூறியதாவது, ஒரு “பெரிய” சட்டம் என்ற ஒன்று உள்ளது மற்றும் கிப்லிங் இதனை கேலி செய்கிறார். காலணியில் வாழும் மக்களை பொதுவாக குறிப்பிடும் வகையில், “த வொயிட் மேன்ஸ் பர்டன்” என்ற கவிதையில் “பாதி-பெய் மற்றும் பாதி-குழந்தைகள்” என்று எழுதியிருப்பதும் கவனிக்கப்படுகிறது. ஆனால், ரட்யார்ட் கிப்லிங் பற்றிய தனது கட்டுரையில் ஜார்ஜ் ஆர்வெல் கூறுவதாவது, “ரிசஷணல்” கவிதையில் கூறப்பட்டுள்ள குறைந்த இனத்தவர் என்பது “ஓரளவு நிச்சயமாக” ஜெர்மாணியர்களைத் தான் குறிக்கிறது, மேலும் ஆர்வெல் கூறுகையில், இந்த கவிதை பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனியில் பதவி சார்ந்த அரசியலை எதிர்ப்பதாகவும் அமைகிறது என்கிறார்.[43] மற்றுமொரு சிறு கதை, த செர்வண்ட்ஸ் ஆஃப் த குயின், ராணுவ முகாம் விலங்குகளின் பார்வையில் கூறப்படுகிறது. அதில் ஒரு போர் குதிரை, ஒட்டகம், எருதுகள், கழுதை மற்றும் ஒரு யானை ஆகியவை உள்ளது. அவை அனைத்தும் மனிதர்களின் போர்கள் எதற்காக என்று வியப்பதாக ஒரு போர் எதிர்ப்பு செய்தியோடு இருக்கும். கடைசியாக, வருகை புரியும் அஃப்கான் ஷேக் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த ஒரு பெரிய அணிவகுப்பு நடக்கிறது, இது எப்படி நடந்தது என அவர் கேட்கிறார். அலுவலர், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கட்டளையிடுவது, அது நிறைவேற்றப்படும் என்று கூறி ஒவ்வொருவரின் பதவியைப் பற்றியும் கூறுகிறார். ஷேக் பதில் அளிப்பதாக, “ இது அஃப்கானிஸ்தானாக இருந்தால், “நாங்கள் எங்கள் மூளையை மட்டுமே பின் தொடர்வோம்” என்று கூறுகிறார். இது முற்றிலும் உண்மையாக இல்லாத போதிலும், மூன்று முறை அஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து, அதிக ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டும், தோல்வியடைந்த பிரிட்டிஷை கேலி செய்வதாக அமைந்தது. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு USSRக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது.
சாரணருடன் உள்ள தொடர்புகள்
சாரணர் இயக்கத்தோடு கிப்லிங்குக்கு இருந்த தொடர்பு மிகவும் அதிகமானது. சாரணர் இயக்கத்தை நிறுவிய பேடன் போவல் த ஜங்கிள் புக் கதைகள் மற்றும் கிம் ஆகியவற்றில் இருந்து பல பொருள்களை உபயோகித்து சிறுவர்கள் இயக்கமான வுல்ஃ கப்ஸை நிறுவினார். இந்த தொடர்புகள் இன்றும் இருக்கின்றன. இந்த இயக்கத்திற்கு மோக்லியின் வளர்ப்பு குடும்பமான வுல்ஃப் குடும்பத்தை ஒட்டி பெயரிடப்பட்டிப்பது மட்டுமல்லாமல், வுல்ஃப் கப் குழுவின் உதவியாளர்களாக இருக்கும் வாலிபர்களுக்கு த ஜங்கிள் புக்கில் உள்ள பல பெயர்கள் சூட்டப்படுகின்றன, குறிப்பாக, வாலிப தலைவருக்கு சியோனி வுல்ஃப் குழுவின் தலைவர் அகேலாவின் பெயர் சூட்டப்பட்டது.[44]
அவரது இனவெறி மனப்பான்மை குறித்த விவாதம்
இனவெறி குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து கிப்லிங்கை காக்கும் பலரின் வாதம், அவரது எழுத்துகளில் உள்ள இனவெறி அவரால் அல்ல அவரது கற்பனை கதாபாத்திரங்களால், பேசப்படுவது, ஆக, இவை கதாபாத்திரங்களை சரியான முறையில் பிரதிபலிப்பதாய் அமைகிறது என்று கூறுகின்றனர். அவர்கள் ஆசிரியரின் சொந்த குரலில் எழுதப்பட்ட “த வொயிட் மேன்ஸ் பர்டன்” மற்றும் “ரிசஷனல்” ஆகியவை உள்ளிட்ட கவிதைகள் உள்ளிட்டவைகளில் உள்ள முரண் மற்றும் மாற்று பொருளை அவர்கள் கண்டு கொண்டனர்.[45]
அவரது கவிதைகள் மற்றும் கதைகள் பற்றிய கருத்துகள்
கவிதைகளுக்கான இலக்கிய தரம் மற்றும் இனவெறி மனப்பான்மையில் மாற்றங்கள் ஆகியவை நிகழ்ந்து விட்ட போதிலும், கிப்லிங் உடைய கவிதைகள் அதனை “எதிர்மாறானவை என்பதற்கு பதிலாக “விறுவிறுப்பான மற்றும் திறமையானவை” என்று கருதுபவர்களிடையே இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. டி.எஸ். இலியட் போன்ற வித்தியாசமான கவிஞர்கள் கூட, ஏ சாய்ஸ் ஆஃப் கிப்லிங்க்ஸ் வெர்ஸ் (1943) என்பதை தொகுத்தார், ஆனால் அவ்வாறு செய்யும் போது அவர் கூறியதாவது – “அவர் கிப்லிங் சில நேரங்களுக்காக கவிதை எழுதலாம் – விபத்தாக அது அமைந்தால் கூட சரி!” கிப்லிங்கின் வயது வந்தோருக்கான கதைகள் கூட அச்சில் உள்ளது மற்றும் பால் ஆண்டர்சன், ஜார்ஜ் லூயிஸ் போர்கஸ் மற்றும் ஜார்ஜ் ஆர்வெல் போன்ற வித்தியாசமான எழுத்தாளர்களால் கூட அதிக புகழாரத்தை பெற்றிருக்கிறது. அவரது குழந்தைகளுக்கான கதைகள் பிரபலமாகவே உள்ளன. மற்றும் அவரது ஜங்கிள் புக்ஸ் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் படத்தை தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் கோர்டா எடுத்தார் மற்றும் மற்ற படங்களை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. அவரது பல கவிதைகள் பெர்சி கிரைங்கரால் இசையமைக்கப்பட்டுள்ளது. 1964ல் பி.பி.சியில் அவரது கதைகளைத் தழுவிய ஒரு தொடர் குறும் படங்கள் ஒளிபரப்பப்பட்டது.[46]
பர்வாஷில் உள்ள கிப்லிங்கின் வீடு
1939ல் கிப்லிங்கின் மனைவியின் மறைவுக்குப் பிறகும் அவரது “பேட்மேன்” என்ற பர்வாஷ், கிழக்கு சசெக்ஸில் உள்ள அவர்களது வீடு தேசிய குழுமத்திற்கு உயில்வழியாக அளிக்கப்பட்டு அது இப்போது ஆசிரியருக்காக ஒதுக்கப்பட்ட பொது அருங்காட்சியகமாக உள்ளது. எல்சி, அவரது மூன்று குழந்தைகளில் 18 வயதை தாண்டி வாழ்ந்த ஒரே நபர், 1976ல் குழந்தைகளின்றி இறந்தார் மற்றும் அவரது காப்புரிமைகளையும் தேசிய குழுமத்திற்கு உயில்வழி வழங்கினார். கிப்லிங் சங்கம் என்பது இன்றும் செயல்படும் நிலையில் யுனைடட் கிங்டத்தில் ஒன்றும், ஆஸ்திரேலியாவில் ஒன்றும் உள்ளது.
நாவல் ஆசிரியர் மற்றும் கவிஞருமான சர். கிங்ஸ்லி ஏமிஸ், ஏமிஸின் தந்தை 1960களில் சில காலம் தங்கிய பர்வாஷ் எனும் ஊரில் உள்ள கிப்லிங்கின் வீட்டைப் பார்த்த பின்னர் ‘கிப்லிங் அட் பேட்மேன்ஸ்’ என்ற கவிதையை எழுதினார். ஏமிஸ் மற்றும் ஒரு பி.பி.சி குழு எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது வீடுகள் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக எடுத்த குறும்படங்களுக்காக அங்கு சென்றனர். சேக்கரே தலைவரின் 'த லைப் ஆஃப் கிங்ஸ்லி ஏமிஸின்' படி:
‘பேட்மென்ஸ்’ அந்த மொத்த குழுவுக்கும் எதிர்மறையான உணர்வை தந்தது மற்றும் ஏமிஸ் அந்த வீட்டில் இருபத்து நான்கு மணி நேரம் கூட அங்கு தங்க முடியாது என முடிவெடுத்தார். இந்த வருகை மறுபடியும் கிப்லிங்கின் வாழ்வு மற்றும் எழுத்துகள் குறித்த ஒரு சிறு ஆய்வான ரட்யார்ட் கிப்லிங்க் மற்றும் அவரது உலகம் (1975) நினைவு கூறப்பட்டுள்ளது. ஏமிஸின் கிப்லிங்கின் தொழில் முன்னேற்றம் குறித்த எண்ணம் செஸ்டர்டன் குறித்த அவரது எண்ணத்தோடு ஒத்திருந்தது: முக்கியமான படைப்புகள் முதல் பகுதியில் எழுதப்பட்டவர், கிப்லிங்கின் வழக்கும் 1885-1902 வரையாகும். 1902க்குப் பிறகு, பேட்மென்ஸுக்கு அவர் குடி பெயர்ந்த வருடத்திற்குப் பிறது அவரது படைப்புகள் குறையத் தொடங்கியது மட்டுமல்லாமல் உலகம், மாற்றங்கள் ஆகியவற்றிற்கு எதியான எண்ணங்களும் தோன்றின. ஏமிஸ் இவை அந்த வீட்டின் மன அழுத்தம் தரக் கூடிய சுற்றுச் சூழலினால் தான் என்று கருதுகிறார்.[47]
இந்தியாவில் அவரது புகழ்
அதிகமான தனது படைப்புப் பொருட்களை எடுத்த இடமான நவீன கால இந்தியாவில், குறிப்பாக நவீன இந்துக்கள் மற்றும் சில காலணிக்குப் பிறகான திறனாய்வாளர்கள் மத்தியில் அவரது புகழ் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. மற்ற சமகால இந்திய அறிவாளிகளான ஆஷிஸ் நந்தி போன்றவர்கள் அவரது படைப்புகள் குறித்த அதிக வித்தியாசமான பார்வை கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேரு கிப்லிங்கின் நாவலான கிம் தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் என எப்போதும் விவரித்துக்கொண்டிருப்பார்.
நவம்பர் 2007ல், மும்பையில் உள்ள ஜெ ஜே கலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது பிறப்பிடம் அவரையும் அவரது படைப்புகளையும் கொண்டாடும் வகையில் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.[48]
பழைய பதிப்புகளில் ஸ்வஸ்திகா


ரட்யார்ட் கிப்லிங்கின் பல பழைய பதிப்புகளின் அட்டையில் ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டிருக்கும், இது ஒரு தாமரை மலரை யானை எடுத்து செல்லும் படத்தை ஒத்திருக்கும். 1920 ஆம் ஆண்டு வரை நாசிக்கள் ஸ்வஸ்திகா குறியை உபயோகிக்கவில்லை எனிலும், 1930களில் இருந்து இந்த காரணத்தால் கிப்லிங் நாசி-ஆதரவாளராக இருப்பாரோ என்ற ஐயம் எழ வாய்ப்பாக அமைந்தது. இந்திய நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்வாழ்வை குறிக்கும் இந்திய சூரிய குறியை சார்ந்தே கிப்லிங் ஸ்வஸ்திகாவை உபயோகித்தார்; (இது “புனிதமான பொருள்” என்ற பொருள் தரக் கூடிய சமஸ்கிருத வார்த்தையான ஸ்வஸ்திகாவில் இருந்து வந்தது). அவர் ஸ்வஸ்திகா குறியை வலப் பக்கம் மற்றும் இடப் பக்கம் பார்க்கக் கூடியவையாகவும் அவர் உபயோகித்தார்.[49][50] தான் நாசிக்கு ஆதரவு அளிப்பதாக தவறாக நினைக்கப்படக் கூடாது என்பதற்காக, நாசிக்கள் பதவிக்கு வருவதற்கு முன்னரே, பதிப்புகளில் இருந்து அவர் அதை எடுக்கச் சொன்னார். அவரது மறைவுக்கு ஒரு வருடத்திற்கு குறைவாக அவர் த ராயல் சொஸைடி ஆஃப் செயிண்ட். ஜார்ஜில் 1935 ஆம் ஆண்டு மே 6ம் தேதி அன்று ஒரு பேச்சை வழங்கினார் (“ஏண் அண்டிஃபண்டட் ஐலாண்ட்" என்ற தலைப்பில்). இதில் அவர் யூகேவிற்கு நாசி ஜெர்மனியால் ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றி எச்சரித்தார்.[51]
படைப்புகள்
- த ஸ்டோரி ஆஃப் த காட்பைஸ் (1888)
- ப்ளெயின் டேஸ்ல் ஃப்ரம் த ஹில்ஸ் (1888)
- த ஃபாந்தம் ரிக்ஷா அண்ட் அதர் எரி டேல்ஸ் (1888)
- த லைட் தட் ஃபெயில்டு (1890)
- "மாண்டலே" (1890) (கவிதை)
- "கங்கா டின்" (1890) (கவிதை)
- த ஜங்கில் புக் (1894) (சிறு கதைகள்)
- த செகண்டு ஜங்கில் புக் (1895) (சிறு கதைகள்)
- "இஃப்—" (1895) (கவிதை)
- கேப்டன்ஸ் கரேஜியஸ் (1897)
- "ரிசஷனல்" (1897)
- த டேஸ் வர்க் (1898)
- ஸ்டாக்கி & கோ. (1899)
- "த வைட் மேன்ஸ் பர்டன்" (1899)
- கிம் (1901)
- ஜஸ்ட் சோ ஸ்டோரிஸ் (1902)
- பக் ஆஃப் பூக்ஸ் ஹில் (1906)
- லைஃப்ஸ் ஹாண்டிகேப் (1915) (சிறு கதைகள்)
குறிப்புதவிகள்
- The Times, 18 January 1936, p.12
- Pinney, Thomas (September 2004). H. C. G. Matthew and Brian Harrison. ed. ‘Kipling, (Joseph) Rudyard (1865–1936)’. Oxford Dictionary of National Biography. Oxford University Press.
- ரூதர்ஃபோர்ட், ஆண்ட்ரூ (1987). ரட்யார்ட் கிப்லிங்கால் எழுதப்பட்ட "பக் ஆஃப் பூக்ஸ் ஹில் அண்ட் ரிவார்ட்ஸ் அண்டு ஃபேரீஸில்" உள்ள ரட்யார்ட் கிப்லிங்கின் பதிப்புகளுக்கான பொது முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி அச்சகம். ISBN 0-19-282575-5
- ரூதர்ஃபோர்ட், ஆண்ட்ரூ (1987). ரட்யார்ட் கிப்லிங்கால் எழுதப்பட்ட "ப்ளெயின் டேல்ஸ் ஃப்ரம் த ஹில்ஸில்" உள்ள ஆக்ஸ்ஃபோர்டு உலகத்தின் பண்டைய இலக்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி அச்சகம். ISBN 0-19-281652-7
- டால்ஸ்டாய், கிப்லிங் மற்றும் டி'அன்னுன்சியோ ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய இயற்கையான திறமைகள் கொண்ட எழுத்தாளர்களாவர், ஆனால் அவர் அந்த சத்தியத்தை பூர்த்தி செய்யவில்லை என்று ஜேம்ஸ் ஜாய்ச் கருதினார். "மதத்தை குறித்த யோசனைகளில் ஓரளவுக்கு வெறியர்களாகவோ நாட்டுப்பற்று கொண்டவர்களாகவோ" அந்த மூன்று எழுத்தாளர்களும் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். 1938ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி டேவிட் ஃப்லீஷ்மானின் குறிப்பேடு, ரிச்சர்ட் எல்மானினால் எழுதப்பட்ட ஜேம்ஸ் ஜாய்சில் குறிப்பிடப்பட்டிருந்தது. பக்கம்-661, ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம் (1983) ISBN 0-19-281465-6
- Alfred Nobel Foundation. "Who is the youngest ever to receive a Nobel Prize, and who is the oldest?". Nobelprize.com. பார்த்த நாள் 2006-09-30.
- பெர்கென்ஹெட், லார்ட். 1978. ரட்யார்ட் கிப்லிங் , பின்னிணைப்பு B, “நன்மதிப்புகள் மற்றும் விருதுகள்”. வெயிடென்ஃபெல்ட் & நிக்கல்சன், லண்டன்; ராண்டம் ஹவுஸ் இங்க்., நியூயார்க்.
- Orwell, George (2006-09-30). "Essay on Kipling". பார்த்த நாள் 2006-09-30.
- லூயிஸ், லிசா. 1995. ரட்யார்ட் கிப்லிங்கினால் எழுதப்பட்ட "ஜஸ்ட் சோ ஸ்டோரீஸின்" ஆக்ஸ்ஃபோர்ட் உலகத்தின் பண்டைய இலக்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம். ப.xv-xlii. ISBN 0-19-282276-4
- குவிக்லே, இசபெல். 1987. ரட்யார்ட் கிப்லிங்கினால் எழுதப்பட்ட "த கம்ப்லீட் ஸ்டாக்கி அண்டு கோவின்" ஆக்ஸ்ஃபோர்ட் உலகத்தின் பண்டைய இலக்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம். ப.xiii-xxviii. ISBN 0-19-281660-8
- செயிட், எட்வர்ட். 1993 கலாச்சாரம் மற்றும் ஏகாதிபத்தியம் லண்டன்: சாட்டோ & விண்டஸ். பக்கம் 196. ISBN 0-679-75054-1.
- சாண்டிசன், ஆலன். 1987. ரட்யார்ட் கிப்லிங் எழுதிய கிம்மின் ஆக்ஸ்ஃபோர்ட் உலகத்தின் பண்டைய இலங்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம். ப. xiii–xxx. ISBN 0-19-281674-8.
- டக்லஸ் கேர், ஹாங் காங் பல்கலைகழகம். "ரட்யார்ட் கிப்லிங்." இலக்கிய கலைக்களஞ்சியம் மே 30. 2002. லிட்ரரி டிக்ஷனரி கம்பெனி. 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 26.
- கேரிங்டன், சார்லஸ். 1955. ரட்யார்ட் கிப்லிங்: ஹிஸ் லைஃப் அண்டு வர்க். மாக்மில்லன் மற்றும் நிறுவனம், லண்டன் மற்றும் நியூயார்க்
- ஃப்லாண்டர்ஸ், ஜூடித். 2005. அ சர்கில் ஆஃப் சிஸ்டர்ஸ்: ஆலிஸ் கிப்லிங், ஜார்ஜியானா பர்னே-ஜோன்ஸ், ஆக்னஸ் பாயிண்டர் மற்றும் லாசியா பால்ட்வின் . டபுல்யூ.டபுல்யூ.நார்டன் மற்றும் நிறுவனம், நியூயார்க். ISBN 0-393-05210-9
- ஜில்மர், டேவிட். 2002. த லாங் ரிசெஷனல்: த இம்பீரியல் லைஃப் ஆஃப் ரட்யார்ட் கிப்லிங் , ஃபரார், ஸ்டிராஸ் மற்றும் ஜிராக்ஸ், நியூயார்க்.
- thepotteries.org (2002-01-13). "did you know ....". The potteries.org. பார்த்த நாள் 2006-10-02.
- Sir J.J. College of Architecture (2006-09-30). "Campus". Sir J. J. College of Architecture, Mumbai. பார்த்த நாள் 2006-10-02.
- ரட்யார்ட் கிப்லிங் எழுதிய "டு த சிட்டி ஆஃப் பாம்பே" செவன் சீஸ்க்கு அர்ப்பணிக்கப்பட்டது, மாக்மில்லன் மற்றும் நிறுவனம் 1894.
- Murphy, Bernice M. (1999-06-21). "Rudyard Kipling - A Brief Biography". School of English, The Queen's University of Belfast. பார்த்த நாள் 2006-10-06.
- Kipling, Rudyard (1935). "Something of myself". public domain. பார்த்த நாள் 2008-09-06.மேலும்: 1935/1990. என்னை பற்றின சிலவிஷயம் மற்றும் மற்ற தன் வரலாறு எழுத்துக்கள். கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிட்டி அச்சகம். ISBN 0-521-40584-X.
- கார்பெண்டர், ஹென்ரி மற்றும் மாரி ப்ரிச்சார்ட். 1984. ஆக்ஸ்ஃபோர்ட் கம்பானியன் டூ சில்ட்ரன்ஸ் லிட்ரேச்சர். ப. 296–297.
- பின்னே, தாமஸ் (பதிப்பாசிரியர்). லெட்டர்ஸ் ஆஃப் ரட்யார்ட் கிப்லிங், தொகுப்பு 1 . மாக்மில்லன் மற்றும் நிறுவனம், லண்டன் மற்றும் நியூயார்க்.
- ராபர்ட் டி. கப்லன் (1989) லாஹூர் அஸ் கிப்லிங் நியூ இட். த நியூயார்க் டைம்ஸ். 2008ம் ஆண்டு மார்ச் 9 அன்று மீட்கப்பட்டது
- கிப்லிங், ரட்யார்ட் (1996) ரைட்டிங்க்ஸ் ஆன் ரைட்டிங்க்ஸ். கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிட்டி அச்சகம். ISBN 0-521-44527-2. ப. 36 மற்றும் ப. 173ஐ பார்க்கவும்.
- மால்லட், ஃபிலிப். 2003. ரட்யார்ட் கிப்லிங்: அ லிட்ரரி லைஃப் . பால்கிரேவ் மாக்மில்லன், நியூயார்க். ISBN 0-333-55721-2
- ரிக்கட்ஸ், ஹாரி. 1999. ரட்யார்ட் கிப்லிங்: அ லைஃப் . கேரல் மற்றும் கிராஃப் வெளியீட்டாளர்கள் இங்க்., நியூயார்க். ISBN 0-7867-0711-9.
- கிப்லிங், ரட்யார்ட். 1920. லெட்டர்ஸ் ஆஃப் டிராவல் (1892–1920) . மாக்மில்லன் மற்றும் நிறுவனம்.
- நிக்கல்சன், ஆடம். 2001. கேரி கிப்லிங் 1862-1939 : த ஹேட்டட் வைஃப் . ஃபேபர் & ஃபேபர், லண்டன். ISBN 0-571-20835-5
- பின்னே, தாமஸ் (பதிப்பாசிரியர்). லெட்டர் ஆஃப் ரட்யார்ட் கிப்லிங், தொகுப்பு 2 . மாக்மில்லன் மற்றும் நிறுவனம், லண்டன் மற்றும் நியூயார்க்.
- கிப்லிங், ரட்யார்ட். 1899. த வைட் மேன்ஸ் பர்டென் . த டைம்ஸ் , லண்டன் மற்றும் மெக்லர்ஸ் மேகசின் (U.S.) ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்யப்பட்டது. 1899 ஆம் ஆண்டு பிப்ரவரி 12.
- ஸ்னாட்கிராஸ், க்ரிஸ். 2002. அ கம்பேனியன் டூ விக்டோரியன் போயட்ரி . ப்ளாக்வெல், ஆக்ஸ்ஃபோர்ட்.
- கிப்லிங், ரட்யார்ட். 1897. ரிசெஷனல் . ஜூலை 1897ம் ஆண்டு லண்டனில் த டைம்ஸில் வெளியிடப்பட்டது.
- Kipling, Rudyard (18 March 1900), "Kipling at Cape Town: Severe Arraignment of Treacherous Afrikanders and Demand for Condign Punishment By and By", The New York Times, p. 21
- த ஃபிரிங்கஸ் ஆஃப் த ஃப்லீட் , மாக்மில்லன் & கோ. லிமிடட்., லண்டன், 1916
- Bennett, Arnold (1917). Books and Persons Being Comments on a Past Epoch 1908-1911. London: Chatto & Windus.
- ஸ்டிராண்டில் உள்ள சிறு கதைகள் , த ஃபோலியோ சொசைட்டி, 1992.
- "Nobel Prize in Literature 1907 - Presentation Speech". Nobelprize.org. பார்த்த நாள் 2008-09-10.
- வெப், ஜார்ஜ். முன்னுரை: கிப்லிங், ரட்யார்ட். த ஐரிஷ் கார்ட்ஸ் இன் த கிரேட்டஸ்ட் வார் . 2 தொகுப்புகள். (ஸ்பெல்மவுண்ட், 1997), ப. 9.
- கிப்லிங், ரட்யார்ட். த ஐரிஷ் கார்ட்ஸ் இன் த கிரேட்டஸ்ட் வார் . 2 தொகுப்புகள் (லண்டன், 1923)
- "The Iron Ring<!- Bot generated title ->". Ironring.ca. பார்த்த நாள் 2008-09-10.
- ரட்யார்ட் கிப்லிங்கின் வால்ட்சிங் கோஸ்ட்: ப்ரவுன் ஹோட்டலின் இலக்கியம் தொடர்பான பாரம்பரிய சொத்து, சாண்டிரா ஜேக்சன்-ஓபோக்கு, லிட்ரரி டிராவலெர்
- ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'ரட்யார்ட் கிப்லிங்', வெளியீடு ஹாரிசன், 1942 பிப்ரவரி.
- "ScoutBase UK: The Library - Scouting history - Me Too! - The history of Cubbing in the United Kingdom 1916-present<!- Bot generated title ->". Scoutbase.org.uk. பார்த்த நாள் 2008-09-10.
- James MacGregor (2007-11-26). "Documenting 'Racist' Empire Writer Rudyard Kipling". Netribution.co.uk. பார்த்த நாள் 2010-01-19.
- http://www.imdb.com/title/tt0298668/
- 'கிங்ஸ்லே அமிஸின் வாழ்க்கை', சாக்கரி தலைவர், விண்டேஜ், 2007 ப.704-705
- "Kipling's India home to become museum". BBC News. 2007-11-27. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7095922.stm. பார்த்த நாள்: 2008-08-09.
- ஸ்க்லிமான், ஹெச், டிராய் அண்டு இட்ஸ் ரிமெயின்ஸ் , லண்டன்: முர்ரே, 1875, ப. 102, 119–20
- சாரா பாக்ஸர். "உலகத்தின் மிகப்பெரிய அடையாளங்களின் ஒன்று திரும்ப வர முயலுகின்றது". த நியூயார்க் டைம்ஸ், ஜூலை 16, 1990.
- ரட்யார்ட் கிப்லிங், போர் கதைகள் மற்றும் கவிதைகள் (ஆக்ஸ்ஃபோர்ட் மெல்லிய அட்டை புத்தகங்கள், 1999), ப. xxiv-xxv.
புற இணைப்புகள்
படைப்புகள்
- அடிலைடே பல்கலைகழகத்தில் உள்ள ரட்யார்ட் கிப்லிங்கின் படைப்புகள்
- குட்டன்பேர்க் திட்டத்தில் இவரது படைப்புக்கள்
- Archive.orgல் ரட்யார்ட் கிப்லிங்கின் படைப்புகள், ஸ்கான் செய்யப்பட்ட புத்தகங்கள் கணினி இணைப்பின் மூலம் பார்க்கலாம் அல்லது PDF மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
- LibriVox.orgலிருந்து KIM இலவச mp3 பதிவு செய்தல்.
- ரட்யார்ட் கிப்லிங்கின் 450 கவிதைகளின் HTML வடிவம், வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- ரட்யார்ட் கிப்லிங்கின் படைப்புகள், HTML இணைப்பில் இருத்தல்.
- கூகிள் புத்தகத்தில் ரட்யார்ட் கிப்லிங்கின் படைப்புகள்
ஆதாரங்கள்
- கிப்லிங் அவருடைய பிரான்ஸ் என்ற கவிதையிலிருந்து 7 வரிகளை படிக்கிறார் (ஒலிதம்).
- சம்திங் ஆஃப் மைசெல்ஃப் , கிப்லிங்கின் தன் வரலாறு
- கிப்லிங் சமூக இணையதளம்
- கிப்லிங் சமூகத்திலிருந்து கிப்லிங் வாசகர் வழிகாட்டி ; கதைகள் மற்றும் கவிதைகளில் உரைவிளக்கம் செய்யப்பட்ட குறிப்புகள்.
- கிப்லிங் ஜர்னல் , கிப்லிங் சமூகத்தினால் வெளியீடு செய்யப்பட்டது. 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியீடு எண் 1ன் தேடப்படக்கூடிய உரை பெட்டகம் மற்றும் அட்டவணைகள் (சமீபத்திய எட்டு வெளியீடுகளை தவிர மற்றவை முழுவதும் உள்ளன).
- அ மாஸ்டர் ஆஃப் அவர் ஆர்ட்: ரட்யார்ட் கிப்லிங் அண்ட் மார்டன் சைன்ஸ் ஃபிக்ஷன்
- Rudyard Kipling by John Palmer at குட்டன்பேர்க் திட்டம், கட்டன்பர்க் திட்டபணியில் உள்ள 1915 வரலாறு, ஜான் பாமரால் எழுதப்பட்டது
- mowglis.orgல் உள்ள மோக்லிஸ்
- மார்ல்போரோ கல்லூரியினால் பராமரிக்கப்பட்டு வரும் ரட்யார்ட் கிப்லிங் சேகரிப்புகள்
- ரட்யார்ட் கிப்லிங்: த புக்ஸ் ஐ லீவ் பிஹைண்டு யேல் பல்கலைகழகத்தில் உள்ள பெயினெக்கே அரிய புத்தகம் மற்றும் பழைய காலத்துச்சுவடி நூலகத்தில் பொருட்காட்சி, அது தொடர்பான வெளியீடுகள் மற்றும் டிஜிட்டல் படங்கள் ஆகியவற்றை பராமரித்து வருகின்றன.
- போயட்ஸ் கார்னரில் ரட்யார்ட் கிப்லிங்கிற்கான அட்டவணை வரவு
- புகைப்படத்துடன் ஜூன் 1905ம் ஆண்டு நேஷனல் மேகசின்னில் நாலகாவின் ரட்யார்ட் கிப்லிங் என்பது சார்லஸ் வாரன் ஸ்டோடார்டால் எழுதப்பட்டது.
- வேர்சின் த வர்க்ஸ் ஆஃப் ரட்யார்ட் கிப்லிங் முதல் தொகுப்பு பதிப்பு , PDFபுத்தகங்கள் , PDF பதிப்பு மற்றும் மொபைல் PDF பதிப்பு
- கவிதை உலகத்தின் இடங்கள் குறித்த ரட்யார் கிப்லிங்கின் கவிதைகள்