லியோ டால்ஸ்டாய்
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy, செப்டம்பர் 9 [யூ.நா. ஆகஸ்ட் 28] 1828 – நவம்பர் 20 [யூ.நா. நவம்பர் 7] 1910) (ரஷ்ய மொழி: Лев Никола́евич Толсто́й, உச்சரிப்பு: லியேவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய்,
லியோ டால்ஸ்டாய் | |
---|---|
![]() | |
பிறப்பு | லியோ டால்ஸ்டாய் Leo Tolstoy ஆகத்து 28, 1828 யாஸ்னயா பொல்யானா, ரஷ்யப் பேரரசு |
இறப்பு | நவம்பர் 20, 1910 82) அஸ்டாபோவா, ரஷ்யப் பேரரசு | (அகவை
தொழில் | புதின எழுத்தாளர் |
இலக்கிய வகை | உண்மைவாதி |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
போரும் அமைதியும் அன்னா கரேனினா |
தாக்கங்கள்
| |
பின்பற்றுவோர்
|
கட்டுரையாளர், நாடகாசிரியர், கல்விச் சீர்திருத்தவாதி என டாஸ்டாயின் பிற திறமைகள் இவரை உயர்குடி டால்டாய் குடும்பத்தின் செல்வாக்குள்ள உறுப்பினராக ஆக்கின.
வரலாறு
லியோ டால்ஸ்டாய், மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில் பிறந்தார். டால்ஸ்டாய்கள் ரஷ்யாவில் பெயர்பெற்ற பழைய பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்ய உயர்குடியின் பெரும் குடும்பங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள். அலெக்சாண்டர் புஷ்கின், லியோ டால்ஸ்டாயின் உறவினராவார். லியோ டால்ஸ்டாய் வகுப்பு உணர்வு கொண்டவராக இருந்தார்.
நாவல்கள் மற்றும் கற்பனை படைப்புகள்

டால்ஸ்டாய் ரஷ்ய இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார்; அவரது படைப்புகளில் போர் மற்றும் அமைதி மற்றும் அன்னா கரேனினா மற்றும் ஹதாஜி முரத் (நாவல்), இவான் இலிச்சின் மரணம் . ஆகியவை போற்றுதலுக்குறிய படைப்புகளாகும்.
அவரது சமகாலத்தவர்கள் அவருக்கு உயர்ந்த மரியாதை செலுத்தினார்கள். பியோடார் தாஸ்தொவெஸ்கி அவரை அனைத்து நாவலாசிரியர்களை விடவும் மிகப்பெரியவராக கருதினார். போர் மற்றும் அமைதி மொழிபெயர்ப்பைப் படித்தபோது கஸ்டவ் புளூபெர்ட், "டால்ஸ்டாய் ஒரு சிறந்த கலைஞர் மற்றும் சிறந்த உளவியலாளர்!" என்று வியப்பிற்குள்ளானார்.
அன்டோன் செக்கோவ் அவர்கள், டால்ஸ்டாய் சந்திப்பதற்கு அடிக்கடி வருகை தருவதுண்டு, அன்டோன் அவர்கள் டால்ஸ்டாயைப் இவ்வாறு போற்றுகிறார், "இலக்கியம் டால்ஸ்டாய் போன்றோர் வைத்திருக்கும் போது, ஒரு எழுத்தாளராக இருப்பதற்கு எளிதானது, இனிமையானது; நீங்கள் எதையாவது சாதித்துவிட்டீர்கள் அல்லது இன்னமும் எதையும் சாதிக்கவில்லை என்று தெரிந்தாலும் கூட, அது வேறு விதமாக இருக்கலாம், ஏனெனில் டால்ஸ்டாய் எல்லோருக்காகவும் சாதிக்கிறார்.ஏனெனில் இலக்கியத்தில் முதலீடு செய்யப்படும் அனைத்து நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் அவர் நியாயப்படுத்துகிறார். "19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கவிஞர் மற்றும் விமர்சகர் மத்தேயு அர்னால்ட்" டால்ஸ்டாய் எழுதிய ஒரு நாவலானது கலையின் வேலை அல்ல, மாறாக வாழ்க்கையின் ஒரு சிரு பகுதி" என்று கருதுகிறார்.[1]
பின்னாளில் விமர்சகர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் டால்ஸ்டாயின் கலைக்கு தாங்களே அத்தாட்சிகளாய் இருந்திருக்கின்றனர். விர்ஜினியா வூல்ஃப் ஒரு படி மேலே "டால்ஸ்டாயை அனைத்து நாவலாசிரிகளையும் விட மிகச்சிறந்தவர் என்று அறிவித்தார்."[1]
டால்ஸ்டாயின் ஆரம்பகால படைப்புகள், சுயசரிதை நாவல்கள் ஆகும். அவை குழந்தைப் பருவம் (நாவல்), பிள்ளை பருவம்(நாவல்) மற்றும் பதின் பருவம் (டால்ஸ்டாய் நாவல்) (1852-1856) ஆகியவையாகும். இவை ஒரு பணக்கார நிலசுவாந்தாரின் மகன் மற்றும் அவரது விவசாயிகளுக்கும் அவருக்கும் இடையே உள்ள இடைவெளியை மெதுவாக உணர்ந்து கொள்ளுதல் பற்றி எழுதுகிறார்.பின்னாளில் டால்ஸ்டாய் இந்த நாவல்களை உணர்ச்சி ரீதியாக உள்ளது என்று நிராகரித்தபோதிலும், டால்ஸ்டாயின் சொந்த வாழ்க்கையின் ஒரு பெரும் மாற்றம் வெளிப்பட்டது. அந்த மாற்றமானது வளர்ந்து வரும் உலகளாவிய கதையில் வரும் அடையாளங்களாக தக்க வைத்துக்கொள்கிறார்கள்.
போர் மற்றும் அமைதி எழுதப்பட்ட நாவல்களிலே மிகப் பெரிய நாவல்களில் ஒன்று, அதன் வியத்தகு அகலத்திற்கும் ஒற்றுமைக்கும் குறிப்பிடத்தக்கது. அதன் பரந்த கதைக்களம் 580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது, பல வரலாற்றுடன் மற்றும் கற்பனை கலந்து உள்ளது. இந்தக் கதையானது குடும்ப வாழ்க்கையிலிருந்து தொடங்கி நெப்போலியனின் தலைமையகத்திற்கும், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் I நீதிமன்றத்திற்கும், ஆஸ்டெர்லிட்ஸ் மற்றும் போரோடினோ போர்க்களத்திற்குள்ளும் நகர்கிறது. இந்த நாவலைப் பற்றி டால்ஸ்டாயின் ஆரம்ப யோசனை திசம்பர் புரட்சியின் காரணங்களை ஆராய்வதாகும், இது அந்த நாவலின் கடைசி அத்தியாயங்களில் மட்டுமே குறிக்கப்படுகிறது, இதில் இருந்து ஆண்ட்ரி போல்கான்கிஸ்கியின் மகன் திசம்பர் புரட்சி ஒன்றில் கலந்து கொண்டதை நாம் அறிந்துகொள்ள முடியும். இந்த நாவல் டால்ஸ்டாயின் வரலாற்றின் தத்துவத்தையும், குறிப்பாக நெப்போலியன் மற்றும் அலெக்ஸாண்டர் போன்ற தனிநபர்களின் முக்கியத்துவத்தையும் ஆராய்கிறது. சற்று ஆச்சரியப்படத்தக்க வகையில், டால்ஸ்டாய் போர் மற்றும் அமைதி ஒரு நாவலாக அவர் கருதவில்லை (அந்த நேரத்தில் எழுதப்பட்ட பெரும் ரஷ்ய கற்பனைகளில் பலவற்றை நாவல்கள் என்று அவர் கருதினார்). டால்ஸ்டாய் யதார்த்தமான பள்ளியின் ஒரு நாவலாசிரியர் என்று ஒருவர் கருதினால்,அவருடைய அந்த நாவலானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமுதாய மற்றும் அரசியல் விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பாகும் என்ற இந்தப் பார்வை அல்லது கருத்து ஆச்சரியமிக்கதாக இருக்காது.[2]
போர் மற்றும் அமைதி (உண்மையில் இது டால்ஸ்டாயின் ஒரு கவிதை காவியம் என்று நம்பினார் ) எனவே இதற்கு நாவல் தகுதி இல்லை என்றும் நினைத்தார். டால்ஸ்டாய், அன்னா கரேனினாவை தான் தனது முதல் உண்மையான நாவலாக கருதினார்.[3]
அன்னா கரேனினா நாவலுக்குப் பிறகு, டால்ஸ்டாய் கிறிஸ்தவ கருப்பொருள்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார், இது அவரது பிந்தைய நாவல்களான இவான் இலிச்சின் மரணம் (1886) மற்றும் என்ன செய்ய வேண்டும்? போன்ற நாவல்களில் ஒரு மதச்சார்பற்ற தீவிரவாத கருக்களை உருவாக்கம் செய்திருப்பதை காணலாம். இந்தக் கருத்துக்களால் அவரை 1901 இல் ரஷ்ய பழைமைவாத தேவாலயத்திலிருந்து வெளியேற்றம் செய்ய வழிவகுத்தது.[4]
அன்னா கரேனினா, போர் மற்றும் அமைதி நாவல்கள் மிகப்பெரிய பாரட்டுக்களைப் பெற்றபோதும் டால்ஸ்டாய் அந்தப் பாராட்டுகளை நிராகரித்தார் மேலும் பின்னாளில் அந்த நாவல்கள் வாழ்க்கையின் உண்மையான யதார்த்தத்தைக் காட்டவில்லை என்றும் கூறினார்.[5]
மத மற்றும் அரசியல் நம்பிக்கைகள்

டால்ஸ்டாய் அவர்கள் ஆர்தர் ஸ்கோபனேஹெவரின் உலகின் விருப்பம் மற்றும் பிரதிநிதித்துவம் (The World as Will and Representation) படித்தப் பிறகு படிப்படியாக அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களின் படி ஆன்மீகத்திற்கு மாற ஆரம்பித்தார். மேலும் உயர்குடி மக்களுக்குச் சரியான ஆன்மீக பாதையைக் காட்டுவதாகவும் எண்ணினார். டால்ஸ்டாய் தனது அனுபவத்தை இப்படி கூறுகிறார் "இந்தக் கோடை எனக்கு என்ன தந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஸ்கோபனேஹெவரைத் தந்தது. மேலும் ஆன்மீகப் பாதையும் நல்ல மகிழ்ச்சியையும் தந்தது மற்றும் இதுமட்டுமில்லாமல் இந்தக் கோடையில் எந்த ஒரு மாணவனும் இது போன்ற அனுபவத்தையும் ஆன்மீக ஞான்த்தையும் கோடையில் பெற்றதில்லை என்றும் விவரிக்கிறார்".[6]
டால்ஸ்டாய் ஸ்கோபனேஹெவரின் ஒரு வாக்குமூலத்தில் அத்தியாயம் VI இல் உள்ள கடைசி பத்தியை மேற்கோள் இடுகிறார். அது இவ்வாறு விளக்குகிறார், முழுமையாக சுய மறுப்பில் இருந்து வரும் எந்தவொரு செயலும் ஒரு ஒப்பீட்டளவில் ஒன்றும் இல்லை, அச்சம் கொள்ளக்கூடாது என்பதை விளக்கினார். டால்ஸ்டாய் கிறிஸ்துவம், பௌத்தம், மற்றும் இந்து ஆகிய அனைத்து மதங்கள் மூலம் துறவறத்தை மறுதலிப்பதன் மூலம் புனிதத்தன்மைக்கு வழிகாட்டியாக இருந்தார். ஸ்கோபனேஹெவரின் நெறிமுறை அத்தியாயங்களில் விரிவுபடுத்தப்பட்ட பின்வருமாறு பத்திகளைப் படித்த பிறகு, ரஷ்ய உன்னதமனிதர்கள் அனைவரும் வறுமை மற்றும் விருப்பத்தின் முறையான மறுப்பைத் தேர்ந்தெடுப்பர் என்றார்:
ஆனால் இந்தத் துன்பங்களின் தேவை (ஏழை மக்களால்) நித்திய இரட்சிப்புக்காக, இரட்சகராக அந்த உரையால் வெளிப்படுத்தப்படுகிறது (மத்தேயு 19:24): "வசதியான கனவான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைக் காட்டிலும், ஒட்டகமானது ஊசியின் காதுக்குச் சுலபமாய் நுழையக் கூடியதாயிருக்கும். "ஆகையால் நித்திய இரட்சிப்பைப் பற்றி மிகுந்த ஆர்வமுள்ளவர்கள், விதி அவர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் அவர்கள் செல்வத்தில் பிறந்தபோதும் தாமாகவே வறுமையைத் தேர்ந்தெடுக்கின்றனர்".
1884 ஆம் ஆண்டில், டால்ஸ்டாய் "என்ன நான் நம்புகிறேன்" என்ற புத்தகத்தை எழுதினார், இதில் அவர் தன்னுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் குறித்த அவருடைய நம்பிக்கையை அவர் உறுதிப்படுத்தினார், குறிப்பாக மலைப்பிரசங்கத்தின் உரைக்குப் பாதிப்புக்குள்ளானார். இயேசு: உன் ஒரு கன்னத்தில் ஒருவர் அறைந்தால் மற்றொரு கன்னத்தைத் காட்டவும் உத்தரவிட்டார், இது அவர் "கட்டாயத்தால் தீமைக்கு எதிரான எதிர்ப்பின் கட்டளை" என்றும் சமாதானத்தின் கோட்பாடு என்றும் இப்படி அகிம்சை புரிந்து கொள்ளப்படுகிறது.
மறைவு
டால்ஸ்டாய் 1910 ஆம் ஆண்டில் 82 வயதில் காலமானார். அவரது இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை, அவரது குடும்பத்தினர் அவருடைய உடல்நலத்தில் அக்கறை செலுத்தியிருந்தனர். அவரது தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதில் நாள்தோறும் முனைப்புடன் செயல்பட்டனர். வாழ்வின் கடைசி சில நாட்களில், அவரின் பேச்சும், எழுத்தும் இறப்பைப் பற்றி இருந்தது. இறுதியாக தனது உயர்குடி வாழ்க்கையைத் துறந்து, ஒரு குளிர்காலத்தின் நடுப்பகுதியில் வீட்டைவிட்டு வெளியேறினார். அந்த இரவிலேயே அவர் இறந்ததாக அறியப்படுகிறது[7]. அவரது மரணம் இரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அவரது மனைவியின் பொறாமையான வசவுகளிலிருந்து தப்பிக்கும் ஒரு முயற்சியாக, எவருக்கும் சொல்லிக்கொள்ளாமல் அவர் இரகசியமாக வெளியேறியதாக கருதப்படுகிறது. இறுதி நாட்களில் அவரது மனைவி டால்ஸ்டாயின் போதனைகளை மிக வெளிப்படையாகவே எதிர்த்து வந்ததாக அறியப்பட்டது.
மேற்கோள்கள்
- "Tolstoy, Leo." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Ultimate Reference Suite. Chicago: Encyclopædia Britannica, 2014.
- Tolstoy and the Development of Realism. G Lukacs. Marxists on Literature: An Anthology, London: Penguin, 1977
- Tolstoy and the Novel. J Bayley – 1967 – Chatto & Windus
- Church and State. L Tolstoy – On Life and Essays on Religion, 1934
- Women in Tolstoy: the ideal and the erotic R.C. Benson – 1973 – University of Illinois Press
- Tolstoy's Letter to A.A. Fet, August 30, 1869
- The last days of Tolstoy. VG Chertkov. 1922. Heinemann
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் லியோ டால்ஸ்டாய்
- குட்டன்பேர்க் திட்டத்தில் லியோ டால்ஸ்டாய் இன் படைப்புகள்
- ஆக்கங்கள் லியோ டால்ஸ்டாய் இணைய ஆவணகத்தில்
- Works by லியோ டால்ஸ்டாய் at LibriVox (public domain audiobooks)
- லியோ டால்ஸ்டாய் at the Internet Book List
- லியோ டால்ஸ்டாய் படைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லியோ டால்ஸ்டாய்
- லியோ டால்ஸ்டாய் at the Internet Movie Database
- டால்ஸ்டாய் பற்றி எஸ். ராமக்கிருஷ்ணன்