அரிசுட்டாட்டில்

அரிசுட்டாட்டில் அல்லது அரிஸ்டாட்டில் (Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியும் பல் துறை வல்லுநரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தருக்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகியன இடம்பெற்றிருக்கும். பிளேட்டோவும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்தியத் தத்துவத்தின் மிக முக்கியமான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்தியத் தத்துவம், ஒழுக்கவியல், அழகியல், தருக்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அரிசுட்டாட்டில் தத்துவத்தின் ஒரு நீட்சியே ஆகும். அரிசுட்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. இவ்விருவரும் , சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு. 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் இடைக்காலத்திய இசுலாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரிசுட்டாட்டிலை இடைக்கால முசுலீம் அறிவாளிகள் "முதல் ஆசிரியர்" ( 'المعلم الأول') எனப் போற்றினர். அரிசுட்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், ஹீப்ரு, செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Ἀριστοτέλης, Aristotélēs, அரிசுட்டாட்டில்
முழுப் பெயர்Ἀριστοτέλης, Aristotélēs, அரிசுட்டாட்டில்
பிறப்புகி.மு. 384
இறப்புமார்ச் 7, கி.மு. 322 (வயது 61 அல்லது 62)
முக்கிய ஆர்வங்கள்அறிவியல், அரசியல், நாடகவியல், உயிரியல், இயற்பியல்
அரிஸ்டாட்டில்

பிறப்பு

அரிஸ்டாட்டில் என்றால் "சிறந்த நோக்கம்," என்று பொருளாகும்.இவர் ஸ்டகிரா,ஷல்சிடிஸில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெஸாலோனிகி யிலிருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே. அவரது தந்தை நிகோமசுஸ், மாசிடோனியாவின் மன்னர் அமயின்டாஸின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார்.அரிஸ்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாஸிடோனியன் மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பதினெட்டு வயது நிரம்பிய அரிஸ்டாடில் பிளேட்டோவின் அகாடமியில் அவரது கல்வியை தொடர ஏதென்ஸ் சென்றார்.

அரிஸ்டாட்டில் கி.மு. 348/47 ஏதென்ஸ் விட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அகாடமியில் கல்வி கற்றார்.பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் மருமகனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிஸ்டாடில் அப்பள்ளியை விட்டு நீங்கினார்.பின் அவர் தன் நண்பனுடன் அசியா மைனருக்கு பயனத்தை மேற்கொண்டார். பயணத்தின் போது லெஸ்போஸ் என்னும் தீவின் விலங்கியல் மற்றும் தாவரவியல் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தார்.அரிஸ்டாட்டில் ஹெர்மியாஸ் இன் வளர்ப்பு மகள் பிதியாஸைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிஸ்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிடோனியா மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க அவரது மகன் அலெக்சாண்டர்க்கு பாடம் கற்பிக்கச் சென்றார்.அரிஸ்டாட்டில் மாசிடோனியா ராயல் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.கி.மு. 335 அவர் ஏதென்ஸ் திரும்பினார், அங்கு லைசியம் என தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிஸ்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பள்ளியில் படிப்புகளை நடத்.திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். ஏதென்ஸில் அரிஸ்டாடில் இருந்த போது, அவரது மனைவி பிதியாஸ் இறந்தார்.அரிஸ்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்ஸில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.அலெக்ஸாண்டர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் இயுபோஇயா வில் அரிஸ்டாடில் இறந்தார். அரிஸ்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிஸ்டாடில்.

அலெக்சாந்தரும் அரிஸ்டாடிலும்

அலெக்சாந்தர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் நிகழ்ச்சி ஆகும். ஆனால்,அலெக்சாந்தருடன் அரிஸ்டாட்டிலும் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிஸ்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசு துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிஸ்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டார். அரிஸ்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்ஸ் மக்களும் அவரை நம்பவில்லை.அதன் பின் அவர்கள் பிரிந்தனர்.

மாஸிடோனியனை நீங்கிய அரிஸ்டாடில்

அலெக்சாந்தர் இறந்த பின்பு மாஸிடோனியனில் அரசியல் நிலைமை மாறியது. மாசிடோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்க்கட்டிலில் ஏறினர் . ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்ததை நினைவு கூர்ந்த அரிஸ்டாட்டில், உடனே 'தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை' என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார்.

நம்முடைய நற்பண்புகளுக்கும் , நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்

-அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில், பிளேட்டோ,சாக்கிரட்டீஸ் ஆகிய மூவரும் ஆசிரியர் , மாணவர்கள் போன்றவர்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு ஓவியம் வாட்டிகன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

உசாத்துணை

  • அடேங்கப்பா ஐரோப்பா, விகடன் பிரசுரம்.
  • உன்னால் முடியும், என். ஜி. பி. ஹச் பதிப்பகம்.

மேலும் படிக்க

  • J. L. Ackrill (1997). Essays on Plato and Aristotle, Oxford University Press, USA.
  • Ackrill, J. L. (1981). Aristotle the Philosopher. Oxford and New York: Oxford University Press.
  • Mortimer Adler (1978). Aristotle for Everybody. New York: Macmillan. A popular exposition for the general reader.
  • Ammonius (1991). Cohen, S. Marc; Matthews, Gareth B. eds. On Aristotle's Categories. Ithaca, NY: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-2688-X.
  • Aristotle (1908–1952). The Works of Aristotle Translated into English Under the Editorship of W. D. Ross, 12 vols. Oxford: Clarendon Press. }} These translations are available in several places online; see External links.
  • Bakalis Nikolaos. (2005). Handbook of Greek Philosophy: From Thales to the Stoics Analysis and Fragments, Trafford Publishing ISBN 1-4120-4843-5
  • Barnes J. (1995). The Cambridge Companion to Aristotle, Cambridge University Press.
  • Bocheński, I. M. (1951). Ancient Formal Logic. Amsterdam: North-Holland Publishing Company.
  • Bolotin, David (1998). An Approach to Aristotle's Physics: With Particular Attention to the Role of His Manner of Writing. Albany: SUNY Press. A contribution to our understanding of how to read Aristotle's scientific works.
  • Myles Burnyeat|Burnyeat, M. F. et al. (1979). Notes on Book Zeta of Aristotle's Metaphysics. Oxford: Sub-faculty of Philosophy.
  • Cantor, Norman F.; Klein, Peter L., தொகுப்பாசிரியர்கள் (1969). Ancient Thought: Plato and Aristotle. Monuments of Western Thought. 1. Waltham, Mass: Blaisdell Publishing Co..
  • Chappell, V. (1973). Aristotle's Conception of Matter, Journal of Philosophy 70: 679–696.
  • Code, Alan. (1995). Potentiality in Aristotle's Science and Metaphysics, Pacific Philosophical Quarterly 76.
  • Ferguson, John (1972). Aristotle. New York: Twayne Publishers.
  • Frede, Michael. (1987). Essays in Ancient Philosophy. Minneapolis: University of Minnesota Press.
  • Benjamin_Apthorp_Gould_Fuller (1923). Aristotle. History of Greek Philosophy. 3. London: Cape.
  • Eugene Gendlin (2012). Line by Line Commentary on Aristotle's De Anima, Volume 1: Books I & II; Volume 2: Book III. Spring Valley, New York: The Focusing Institute. Available online in PDF.
  • Gill, Mary Louise. (1989). Aristotle on Substance: The Paradox of Unity. Princeton: Princeton University Press.
  • Guthrie, W. K. C. (1981). A History of Greek Philosophy, Vol. 6. Cambridge University Press.
  • Halper, Edward C. (2007). One and Many in Aristotle's Metaphysics, Volume 1: Books Alpha — Delta, Parmenides Publishing, ISBN 978-1-930972-21-6.
  • Halper, Edward C. (2005). One and Many in Aristotle's Metaphysics, Volume 2: The Central Books, Parmenides Publishing, ISBN 978-1-930972-05-6.
  • Terence Irwin (1988). Aristotle's First Principles. Oxford: Clarendon Press, ISBN 0-19-824290-5.
  • Jaeger, Werner (1948). Robinson, Richard. ed. Aristotle: Fundamentals of the History of His Development (2nd ). Oxford: Clarendon Press.
  • Alberto Jori. (2003). Aristotele, Milano: Bruno Mondadori Editore (Prize 2003 of the "International Academy of the History of Science") ISBN 88-424-9737-1.
  • Kiernan, Thomas P., தொகுப்பாசிரியர் (1962). Aristotle Dictionary. New York: Philosophical Library.
  • Knight, Kelvin. (2007). Aristotelian Philosophy: Ethics and Politics from Aristotle to MacIntyre, Polity Press.
  • Lewis, Frank A. (1991). Substance and Predication in Aristotle. Cambridge: Cambridge University Press.
  • G. E. R. Lloyd (1968). Aristotle: The Growth and Structure of his Thought. Cambridge: Cambridge Univ. Pr., ISBN 0-521-09456-9.
  • Lord, Carnes. (1984). Introduction to The Politics, by Aristotle. Chicago: Chicago University Press.
  • Loux, Michael J. (1991). Primary Ousia: An Essay on Aristotle's Metaphysics Ζ and Η. Ithaca, NY: Cornell University Press.
  • McKeon, Richard (1973). Introduction to Aristotle (2d ). Chicago: University of Chicago Press.
  • Owen, G. E. L. (1965c). "The Platonism of Aristotle". Proceedings of the British Academy 50: 125–150. [Reprinted in J. Barnes, M. Schofield, and R. R. K. Sorabji, eds.(1975). Articles on Aristotle Vol 1. Science. London: Duckworth 14–34.]
  • Pangle, Lorraine Smith (2003). Aristotle and the Philosophy of Friendship. Cambridge: Cambridge University Press. Aristotle's conception of the deepest human relationship viewed in the light of the history of philosophic thought on friendship.
  • Plato (1979). Allen, Harold Joseph; Wilbur, James B. eds. The Worlds of Plato and Aristotle. Buffalo: Prometheus Books.
  • Reeve, C. D. C. (2000). Substantial Knowledge: Aristotle's Metaphysics. Indianapolis: Hackett.
  • Rose, Lynn E. (1968). Aristotle's Syllogistic. Springfield: Charles C Thomas Publisher.
  • W. D. Ross (1995). Aristotle (6th ). London: Routledge. A classic overview by one of Aristotle's most prominent English translators, in print since 1923.
  • Scaltsas, T. (1994). Substances and Universals in Aristotle's Metaphysics. Ithaca: Cornell University Press.
  • Strauss, Leo (1964). "On Aristotle's Politics", in The City and Man, Chicago; Rand McNally.
  • Swanson, Judith (1992). The Public and the Private in Aristotle's Political Philosophy. Ithaca: Cornell University Press.
  • Taylor, Henry Osborn (1922). "Chapter 3: Aristotle's Biology". Greek Biology and Medicine. Archived from the original on 11 February 2006. http://web.archive.org/web/20060327222953/http://www.ancientlibrary.com/medicine/0051.html.
  • Henry Babcock Veatch (1974). Aristotle: A Contemporary Appreciation. Bloomington: Indiana U. Press. For the general reader.
  • Woods, M. J. (1991b). "Universals and Particular Forms in Aristotle's Metaphysics". Aristotle and the Later Tradition. Oxford Studies in Ancient Philosophy. Suppl. பக். 41–56.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.