திருவாய்மொழி விரிவுரைகள்

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.

திருவாய்மொழி உரைகள்

  1. திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய ஆறாயிரப்படி
  2. நஞ்சீயர் எழுதிய ஒன்பதினாயிரப்படி
  3. வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் எழுதிய பன்னிரண்டாயிரப்படி
  4. பெரியவாச்சான்பிள்ளை இருபத்தி நாலாயிரப்படி
  5. நம்பிள்ளை காலட்சேபமாகச் சொல்ல வடக்கு திருவீதி பிள்ளை பட்டோலை கொண்டு அருளியது ஈடு முப்பத்தாறாயிரப்படி
  • இந்த ஐந்தில் நம்பிள்ளை சொல்ல திருவீதிப்பிள்ளை எழுதிய உரைக்கு மட்டும் 'ஈடு' என்னும் சிறப்பு அடைமொழி உண்டு.

இவற்றில் 'ஈடு' என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.

இதன் காலமும் குறிப்பும்

நூல்காலம் (நூற்றாண்டு)குறிப்பு
ஆறாயிரப்படி12 தொடக்கம்இராமானுசர் எழுதச் சொன்னார்
ஒன்பதினாயிரப்படி13நம்பிள்ளை இதனைக் காவேரியில் போக விட்டுப் புதிதாக எழுதிக் கொடுத்தார்
பன்னீராயிப்படி14 தொடக்கம்வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர், பெரியவாச்சான் பிள்ளையின் சீடர்
இருபத்து நாலாயிரப்படி13 இறுதிநம்பிள்ளை கட்டளையிட்டதன் பேரில் எழுதினார்
முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு13 இறுதிநம்பிள்ளை அருளால் வடக்கு திருவீதி பிள்ளை எழுதியது.

நம்மாழ்வாரின் பிற நூல்களுக்கு உரை

ஈடு உரை கண்ட நம்பிள்ளை பெரிய திருமொழி, திருப்பள்ளியெழுச்சி, திருவிருத்தம் ஆகிய பிரபந்தங்களுக்கும் உரை அருளினார்.

உரை வரலாறு

திருவாய்மொழிக்கு முதல் உரையாசிரியர் ஆளவந்தார் என்பதை ஈடு உரை வழி அறியலாம்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களின் பொருளை, பக்தி உலகில் பரவச் செய்த பெருமைக்குரியவர் நாதமுனிகள். அவரை முதல் உரையாசிரியராகக் கொள்ளலாம்.

நாதமுனிகள் முதல் எம்பெருமானார் காலம் வரை

உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி,
நாதமுனிகள் பேரன ஆளவந்தார்,
பெரிய நம்பி (திருமாலை ஆண்டான்)
இராமானுசர்

போன்றோர் கேள்வி வாயிலாக (நினைவாற்றல்) உரைகளைப் பாதுகாத்தனர்.
எம்பெருமானார் காலத்தில் வியாக்கியானம் என்னும் பெயரில் உரைகள் வரி வடிவம் பெறத் தொடங்கின.

இவற்றையும் காண்க

கருவிநூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.