ஆனந்த நிலையம்

திருமலையில் திருவேங்கடவன் கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது.இது முழுதும் கல்லால் வேயப்பட்டு பொன்னால் போர்த்தப்பட்டதாகும்.

ஆனந்த நிலையம் - பொற்கூரை

பொதுவாக இறைவன் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை "விமானம்" என அழைக்கப்படும்.அவ்விமானத்திற்கு பெயரிட்டு பெருமையோடு அழைப்பது வைணவ ஆகமம்.

கீழ்க்கண்ட கோயில்களின் விமானங்கள் வெகுப்பிரசித்திம்:

திருவரங்கம் அரங்கநாதர் கோயில் - பிரவணாகார விமானம்

திருக்கச்சி(காஞ்சி) வரதராசப் பெருமாள் கோயில் - புண்யக்கோடி விமானம்

ஆரம்பகால கட்டுமானம்

சடாவர்மன் சுந்தர பாண்டிய மன்னனால் கிபி 12ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பட்டதாக கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.வீரநரசிங்கராயர் எனும் மன்னன் தன்னுடைய எடைக்கு இணையாக கொடுத்த பொன்னால் இவ்விமானம் வேயப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது.

நவீனகால கட்டுமானம்

காலக்கிரமத்தில் விமானத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 1950-களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் ஒருமுறை விமானத்தில் மராமத்து பணிகளோடு புதிய பொன்னாலான கூறையும் வேய்ந்தது.இப்பணியின் காரணமாக 1960களின் மத்தியில் கோவிலின் மூலவருக்கு எவ்வித வழிபாடுகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

விமான வேங்கடேஸ்வரன்

விமான வேங்கடேஸ்வரன்

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வாசாரியாரான வியாசராய தீர்த்தர், விமானத்தின் வடகிழக்கு திசையில் இருந்த இறைவனின் சிறுபிரதிமை மீது தியானத்தில் மூழ்கி முக்தியடைந்தார். அன்றிலிருந்து அப்பிரதிமை விமான வேங்கடேசர் என பக்தர்களால் வணங்கப்பட்டுவருகிறது.விமானத்தின் வடகிழக்கு மூலையில் இன்றும் அடியவர்கள் காணும் வண்ணம் அப்பிரதிமைக்கு மட்டும் வெள்ளியினால் வேயப்பட்ட திருவாசியோடு காட்சியளிக்கிறார் விமான வேங்கடேசர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.