ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்

வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக 1800ஆம் ஆண்டிலிருந்து உள்ளது.இதனைத் தவிர எட்டு நகரங்களில் அமெரிக்க சட்டமன்றம் கூடியுள்ளது.இவையும் முன்னாள் அமெரிக்க தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. தவிர, கூட்டமைப்பில் உள்ள 50 மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் மற்றும் பிற ஆட்சிப்பகுதிகளிலும் அவற்றிற்கான சட்டமன்றம் அமையும் தலைநகரங்கள் உண்டு.

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்ற கட்டிடம்.

மாநில தலைநகரங்கள்

ஐக்கிய அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 33 மாநிலங்களில் அவற்றின் தலைநகரம் அம்மாநிலத்தின் சனத்தொகை மிகுந்த நகரமாக இல்லை. இரண்டு மாநிலத் தலைநகர்கள், இட்ரென்டன், நியூ ஜெர்சி மற்றும்கார்சன் நகரம், நெவாடா மற்ற மாநிலத்தின் எல்லையில் உள்ளன; ஜூனோ, அலாஸ்கா வின் எல்லை கனடாவின் மாநிலம் பிரித்தானிய கொலம்பியாவிற்கு அடுத்துள்ளது.[a]

கீழ்வரும் பட்டியலில் உள்ள நாட்கள் அவை எந்த நாளிலிருந்து தொடர்ந்து தலைநகராக விளங்கின என்பதை காட்டுகின்றன:

ஐக்கிய அமெரிக்காவின் மாநில தலைநகரங்கள்
மாநிலம்மாநிலம் அமைந்த நாள்தலைநகரம்எப்போதிலிருந்துகூடுதல் மக்கள்தொகை கொண்ட நகரம்?நகர மக்கள்தொகைமாநகர மக்கள்தொகைகுறிப்புகள்
அலபாமா1819மான்ட்கமரி1846இல்லை200,127469,268பர்மிங்காம் மாநிலத்தின் பெரிய நகரம்.
அலாஸ்கா1959ஜூனோ1906இல்லை30,987அங்கரேஜ் மாநிலத்தின் பெரிய நகரம். அடுத்த நாட்டின் எல்லையில் இருக்கும் ஒரே தலைநகரம்.
அரிசோனா1912பீனிக்ஸ்1889ஆம்1,512,9864,039,182பீனிக்ஸ், அமெரிக்காவிலேயே கூடுதல் மக்கள்தொகை கொண்ட தலைநகரம்.
ஆர்கன்சஸ்1836லிட்டில் ராக்1821ஆம்204,370652,834
கலிபோர்னியா1850சேக்ரமெண்டோ1854இல்லை467,3432,136,604கலிபோர்னியா உச்சநீதிமன்றம் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது.லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தின் பெரிய நகரம்.
கொலராடோ1876டென்வர்1867ஆம்566,9742,408,750
கொனெக்ரிகட்1788ஹார்ஃபோர்ட்1875இல்லை124,3971,188,241பிரிட்ஜ்ஃபோர்ட் மாநிலத்தின் பெரிய நகரம்,ஆனால் மாநகர ஹார்ஃபோர்ட் பெரிய மாநகர பரப்பு கொண்டது.
டெலவேர்1787டோவர்1777இல்லை32,135வில்மிங்டன் மாநிலத்தின் பெரிய நகரம்.
ஃபுளோரிடா1845டலஹாசி1824இல்லை168,979336,501ஜாக்சன்வில் மிகப்பெரிய நகரம், மற்றும் மியாமி பெரிய பரப்பளவு கொண்டது.
ஜார்ஜியா1788அட்லான்டா1868ஆம்486,4115,138,223அட்லான்டா, மாநகர மக்கள்தொகையில் நாட்டிலேயே முதல் மாநகரம்.
ஹவாய்1959ஹொனலுலு1845ஆம்377,357909,863
இடாகோ1890பொய்சி1865ஆம்201,287635,450
இலினாய்1818ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்)1837இல்லை116,482188,951சிகாகோ மாநிலத்தின் பெரிய நகரம்.
இன்டியானா1816இண்டியானபொலிஸ்1825ஆம்791,9261,984,664நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலத் தலைநகராக இருப்பதுடன் மிஸ்ஸிசிப்பி ஆற்றின் கிழக்கே உள்ள மிகப்பெரிய மாநிலத் தலைநகராகும்.
ஐயோவா1846டி மொயின்1857ஆம்209,124625,384
கன்சாஸ்1861டொபீகா1856இல்லை122,327228,894விசிதா மாநிலத்தின் பெரிய நகரம்.
கென்டகி1792பிராங்போர்ட் (கென்டக்கி)1792இல்லை27,74169,670லூயிவில் மாநில பெரும் நகர்.
லூசியானா1812பாடன் ரூஜ்1880இல்லை224,097751,965நியூ ஓர்லியன்ஸ் மநில பெரும் நகர் மற்றும் உச்சநீதிமன்றம் அமரும் இடம்.
மேய்ன்1820அகஸ்தா1832இல்லை18,560117,114அகஸ்தா 1827ஆம் ஆண்டு தலைநகரானது,ஆனால் சட்டமன்றம் 1832 வரை அங்கு அமரவில்லை.போர்ட்லாந்து மாநிலத்தின் பெரிய நகரம்.
மேரிலண்ட்1788அனாபொலிஸ்1694இல்லை36,217சான்டா ஃபே,பாஸ்டன் அடுத்து அனாபொலிஸ் நாட்டின் மிகப்பழமையான தலைநகரங்களில் மூன்றாவதாக உள்ளது. இங்குள்ள சட்டமன்றக் கட்டிடம் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான கட்டிடம். பால்டிமோர் மாநில பெரும் நகர்.
மசாசுசெட்ஸ்1788பாஸ்டன்1630ஆம்590,7634,455,217அமெரிக்காவில் தொடர்ந்து தலைநகராக இருந்துவரும் பழைமையான தலைநகர். பெருநகர பாஸ்டன் மசாசுசெற்ஸ்,நியூ ஹாம்சயர் மற்றும் றோட் தீவு மாநிலத் தலைநகர்களை உள்ளடக்கியது.
மிஷிகன்1837லான்சிங்1847இல்லை119,128454,044டெட்ராயிட் மாநிலத்தின் பெரிய நகரம்.
மினசோட்டா1858செயின்ட் பால்1849இல்லை287,1513,502,891மின்னியாபொலிஸ் மாநிலத்தின் பெரிய நகரம்; அதுவும் செயின்ட் பாலும் இணைந்து மின்னியாபொலிஸ்-செயின்ட் பால் மாநகர பெருநகரமாக உள்ளது.
மிசிசிப்பி1817ஜாக்சன்1821ஆம்184,256529,456
மிசெளரி1821ஜெபர்சன் நகரம்1826இல்லை39,636146,363கன்சஸ் நகரம் மாநிலத்தின் பெரிய நகரம், பெருநகர செயின்ட் லூயி மிகப்பெரும் மாநகரபகுதி.
மான்டனா1889ஹெலேனா1875இல்லை25,78067,636பில்லிங்ஸ் மாநிலத்தின் பெரிய நகரம்.
நெப்ராஸ்கா1867லிங்கன்1867இல்லை225,581283,970ஓமாகா மாநில பெரிய நகரம்.
நெவாடா1864கார்சன் நகரம்1861இல்லை57,701லாஸ் வேகாஸ் மாநில பெரிய நகரம்.
நியூ ஹாம்ஷயர்1788காங்கர்ட் (நியூ ஹாம்சயர்)1808இல்லை42,221மான்செஸ்டர் மாநிலப் பெரிய நகரம்.
நியூ ஜெர்சி1787இட்ரென்டன்1784இல்லை84,639367,605நெவார்க் மாநில பெரிய நகரம்.
நியூ மெக்சிகோ1912சான்டா ஃபே1610இல்லை70,631142,407சான்டா ஃபே மிகப் பழமையான தொடர்ந்து தலைநகராக இருக்கும் நகராகும். அல்புகர்க் மாநிலத்தின் பெரிய நகர்.
நியூ யார்க்1788ஆல்பெனி1797இல்லை95,9931,147,850நியூ யார்க் நகரம் மிகப் பெரிய நகரம்.
வட கரோலினா1789ராலீ1794இல்லை380,1731,635,974சார்லோட் மாநில பெரிய நகரம்.
வட டகோட்டா1889பிஸ்மார்க்1883இல்லை55,533101,138பார்கோ மாநில பெரிய நகரம்.
ஒஹாயோ1803கொலம்பஸ்1816ஆம்733,2031,725,570கொலம்பஸ் ஒகைய்யோவின் பெரிய நகரம் ஆனால் பெருநகர கிளீவ்லாந்து மற்றும் சின்சினாட்டி-வட கென்டகி மாநகரப் பகுதி இரண்டும் பெரியவை.
ஒக்லஹாமா1907ஓக்லஹோமா நகரம்1910ஆம்541,5001,266,445
ஒரிகன்1859சேலம்1855இல்லை149,305539,203போர்ட்லாந்து மாநிலத்தில் பெரிய நகரம்.
பென்சில்வேனியா1786ஹாரிஸ்பர்க்1812இல்லை48,950384,600பிலடெல்பியா மாநிலத்தில் பெரிய நகரம்.
இறோட் தீவு1790பிராவிடென்ஸ்1900ஆம்176,8621,612,989
தென் கரோலினா1788கொலம்பியா1786ஆம்122,819703,771
தென் டகோட்டா1889பியேர்1889இல்லை13,876சியோ ஃபால்ஸ் மாநிலத்தில் பெரிய நகரம்.
டென்னசி1796நாஷ்வில்1826இல்லை607,4131,455,097மெம்பிஸ் மாநிலத்தில் பெரிய நகரம் ஆனால் நாஷ்வில் மாநகரப்பகுதி பெரிய மாநகரம்.
டெக்சஸ்1845ஆஸ்டின்1839இல்லை709,8931,513,565ஹூஸ்டன் மாநிலத்தில் பெரிய நகரம் , மற்றும் டல்லஸ்-ஃபோர்ட்வொர்த் மாநகரப்பகுதி பெரிய மாநகரம்.
உட்டா1896சால்ட் லேக் நகரம்1858ஆம்181,7431,115,692
வேர்மான்ட்1791மான்ட்பீலியர்1805இல்லை8,035மான்ட்பீலியர் அமெரிக்கத் தலைநகர்களிலேயே குறைந்த மக்கள்தொகை கொண்டது. பர்லிங்டன மாநிலத்தில் பெரிய நகரம்.
வெர்ஜீனியா1788ரிச்மன்ட்1780இல்லை195,2511,194,008வெர்ஜீனியா கடற்கரை மாநிலத்தில் பெரிய நகரம், மற்றும் வடக்கு வெர்ஜீனியா மாநிலத்தின் பெரிய மாநகரப்பகுதி.
வாஷிங்டன் மாநிலம்1889ஒலிம்பியா1853இல்லை42,514234,670சியாட்டில் மாநிலத்தில் பெரிய நகரம்.
மேற்கு வெர்ஜீனியா1863சார்ல்ஸ்டன்1885ஆம்52,700305,526
விஸ்கொன்சின்1848மேடிசன்1838இல்லை221,551543,022மில்வாக்கி மாநிலத்தில் பெரிய நகரம்.
வயோமிங்1890செயென்1869ஆம்55,36285,384

தனித்த பகுதிகளின் தலைநகரங்கள்

ஐம்பது மாநிலங்களிலிலோ நாட்டின் கூட்டாட்சி மாவட்டமான கொலம்பியா மாவட்டத்திலோ அடங்கியில்லாத ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பகுதிகள் தனித்தப் பகுதி (Insular Areas) என்று அழைக்கப்படுகின்றன.அவற்றின் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

ஐக்கிய அமெரிக்காவின் தனித்த பகுதிகளின் தலைநகரங்கள்
தனித்தப் பகுதிநாள்தலைநகர்குறிப்புகள்
அமெரிக்க சமோவா1899பாகோ பாகோநடப்பில் உண்மையான தலைநகர்.
1967ஃபாகடோகோஅமெரிக்கன் சமோவா அரசியல் சட்டப்படியான அலுவல்முறை தலைநகரம்.
குவாம்1898ஹகாத்னாடெடெடோ இப்பகுதியில் உள்ள பெரிய கிராமமாகும்.
வடக்கு மரியானா தீவுகள்1947சைப்பேன்
புவேர்ட்டோ ரிக்கோ1898சான் யுவான்தலைநகர் முன்பு போர்டோ ரிகோ என அழைக்கப்பட்டது.
அமெரிக்க கன்னித் தீவுகள்1917சார்லொட் அமலீ

மேற்கோள்கள்

    புற இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.