பிலடெல்பியா

பிலடெல்பியா (Philadelphia) ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரமும் அந்நாட்டின் ஏழாவது பெரிய மக்கள்தொகை அடர்த்தி கொண்ட நகரமும் ஆகும். இது பிலடெல்பியா கவுண்டியின் தலைமை இடமாகவும் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 1.44 மில்லியன் மக்களுக்கு மேல் இங்கே வாழ்கிறார்கள். இதனையும் உள்ளடக்கிய டெலாவெயர் பள்ளத்தாக்கு மெட்ரோபாலிட்டன் பகுதியின் மக்கள்தொகை 5.8 மில்லியன்களாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் 5 ஆவது பெரியதும் உலக நகரங்களின் வரிசையில் 45 ஆவது மக்கள்தொகையும் ஆகும். ஒரு காலத்தில் இது இலண்டனுக்கு அடுத்தபடியாக, பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டில், அரசியல் மற்றும் சமூக அடிப்படையில் இந்நகரின் முக்கியத்துவம் நியூ யார்க் நகரினதைக் காட்டிலும் மேலோங்கியிருந்தது. அமெரிக்கப் புரட்சி தொடர்பான எண்ணக்கருக்களும், தொடர்பான செயற்பாடுகளும் இங்கேயே உருவானதன் காரணமாக தொடக்ககால அமெரிக்க வரலாற்றின் மையமாக இந்நகரம் விளங்கியது எனலாம்.

பிலடெல்பியா
Philadelphia
City
பிலடெல்பியா நகரம்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): "சகோதரத்துவ நகரம்", "ஃபிலி"
குறிக்கோளுரை: "Philadelphia maneto" - "சகோதரத்துவம் நீடித்திருக்கவும்"
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் பென்சில்வேனியா
மாவட்டம்பிலடெல்பியா
தோற்றம்அக்டோபர் 27 1682
Incorporatedஅக்டோபர் 25 1701
அரசு
  மாநகராட்சித் தலைவர்மைக்கேல் நட்டர் (D)
பரப்பளவு
  City[.4
  நிலம்349.9
  நீர்19.6
  நகர்ப்புறம்4,660.7
  Metro11,989
ஏற்றம்12
மக்கள்தொகை (2006)
  City14,48,394
  அடர்த்தி4,201.8
  நகர்ப்புறம்53,25,000
  பெருநகர்58,23,233
நேர வலயம்EST (ஒசநே-5)
  கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு215, 267
இணையதளம்http://www.phila.gov

புவியியல்

வரலாற்றுப் பெருமை மிக்க அருங்காட்சியகங்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் முப்பது கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பெருமை உடைய நகரம் இது. அமெரிக்காவில் தொள்ளாயிரம் அடிக்கு மேல் கட்டிடங்கள் உடைய நான்கே நகரங்களில் பிலடெல்பியாவும் ஒன்றாக உள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.