றோட் தீவு

ரோட் தீவு (State of Rhode Island and Providence Plantations[2], பொதுவாக Rhode Island (/ˌroʊd ˈaɪlɨnd/ (listen)), என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.

றோட் தீவு மாநிலமும்

பிராவிடென்ஸ் தோட்டங்களும்

றோட் தீவின் கொடி றோட் தீவு மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பெருங்கடல் மாநிலம்
குறிக்கோள்(கள்): நம்பிக்கை
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்பிராவிடென்ஸ்
பெரிய நகரம்பிராவிடென்ஸ்
பரப்பளவு  50வது
 - மொத்தம்1,545* சதுர மைல்
(4,002* கிமீ²)
 - அகலம்37 மைல் (60 கிமீ)
 - நீளம்48 மைல் (77 கிமீ)
 - % நீர்32.4
 - அகலாங்கு41° 09' வ - 42° 01' வ
 - நெட்டாங்கு71° 07' மே - 71° 53' மே
மக்கள் தொகை 43வது
 - மொத்தம் (2000)1,048,319
 - மக்களடர்த்தி691.0/சதுர மைல் 
387.35/கிமீ² (2வது)
 - சராசரி வருமானம் $44,619 (17வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஜெரிமொத் மலை[1]
812 அடி  (247 மீ)
 - சராசரி உயரம்200 அடி  (60 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மே 29, 1790 (13வது)
ஆளுனர்டானல்ட் கார்சியேரி (R)
செனட்டர்கள் ஜாக் ரீட் (D)
ஷெல்டன் வைட்ஹவுஸ் (D)
நேரவலயம் கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள் RI US-RI
இணையத்தளம் www.ri.gov

ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்[3][4]. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.

ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.
  2. "Constitution of the State of Rhode Island and Providence Plantations". State of Rhode Island General Assembly. பார்த்த நாள் செப்டம்பர் 9, 2007.
  3. Jensen, Founding, 679; Friedenwald, Interpretation, 92–93. retrieved on ஏப்ரல் 12, 2009.
  4. US constitution Ratification: RI retrieved on ஏப்ரல் 12, 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.