கலிபோர்னியா

கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு பசிபிக் மாக்கடலுக்கு அடுத்து இருக்கும் ஒரு பெரிய மாநிலமாகும். இதற்கு வடக்குத் திசையில் ஒரிகன் மாநிலமும், கிழக்குத் திசையில் நெவாடா மாநிலமும், அரிசோனா மாநிலமும், தெற்குத் திசையில் மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியாவும் உள்ளன. இங்கே 37 மில்லியன் மக்கள் 423.970 சதுர கி.மீ (163,696 சதுர மைல்) பரப்பில் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இம்மாநிலமே ஐக்கிய அமெரிக்காவில் முதலிடம் வகிக்கின்றது. நிலப்பரப்பிலும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். சேக்ரமெண்டோ இதன் தலைநகரம் ஆகும்.

கலிபோர்னியா மாநிலம்
கலிபோர்னியா மாநிலக்
கொடி
கலிபோர்னியா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தங்க மாநிலம்
குறிக்கோள்(கள்): Eureka
யூரீக்கா
கலிபோர்னியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்சேக்ரமெண்டோ
பெரிய நகரம்லாஸ் ஏஞ்சல்ஸ்
பரப்பளவு  3வது
 - மொத்தம்163,696 சதுர மைல்
(423,970 கிமீ²)
 - அகலம்250 மைல் (400 கிமீ)
 - நீளம்770 மைல் (1,240 கிமீ)
 - % நீர்4.7
 - அகலாங்கு32°30' வ - 42° வ
 - நெட்டாங்கு114°8' மே - 124°24' மே
மக்கள் தொகை 1வது
 - மொத்தம் (2000)33,871,648
 - மக்களடர்த்தி217.2/சதுர மைல் 
83.85/கிமீ² (12வது)
 - சராசரி வருமானம் $49,894 (13வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி விட்னி மலை
14,505 அடி  (4421 மீ)
 - சராசரி உயரம்2,900 அடி  (884 மீ)
 - தாழ்ந்த புள்ளிபாட்வாட்டர்
-282 அடி  (-86 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
செப்டம்பர் 9, 1850 (31வது)
ஆளுனர்ஆர்னோல்ட்
ஸ்வார்செனேகர்
(R)
செனட்டர்கள் டயான் ஃபைன்ஸ்டைன் (D)
பார்பரா பாக்சர் (D)
நேரவலயம் பசிபிக் நேர வலயம் (வட அமெரிக்கா)
சுருக்கங்கள் CA Calif. US-CA
இணையத்தளம் www.ca.gov

வரலாறு

கலிபோர்னியாவில் 10,000 ஆண்டுகளுக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.

ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன் இங்கிருந்த அமெரிக்க முதற்குடி மக்கள் அமெரிக்கக் கண்டத்தில் வேறு எங்குமுள்ளதைக் காட்டிலும் எண்ணிக்கையில் பல்வேறு இனங்களாகவும், மக்களடர்த்தியும் அதிகமாக இருந்தனர். 1769இல் ஸ்பெயின் நாட்டினர் தம்குடியாக்கினர். ஆனால் 1810-1821க்கு இடையே நடந்த மெக்சிக்கோவின் விடு்தலைப் போருக்குப்பின், கலிபோர்னியா மெக்சிக்கோவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1846-1848இல் நடந்த அமெரிக்க - மெக்சிக்கோ போரில் அமெரிக்கா இப்பகுதியைக் கைப்பற்றியது. 1848-1849இல் தங்கம் எடுப்பதற்காக நிகழ்ந்த பெரும் வேட்கையில் இப்பகுதிக்கு சுமார் 90,000 மக்கள் குடியேறினர். அதன்பின் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக 1850இல் மாறியது.

பொருளாதாரம்

கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவையே முன்னிழுத்துச் செல்லும் பேரியந்திரம் என்றும் கூறுவதுண்டு. கலிபோர்னியா மட்டுமே ஆண்டுக்கு (2005 ஆண்டின் கணக்குப்படி), 1.55 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருள் உற்பத்தி செய்கின்றது. உலகிலேயே ஆறு நாடுகள்தான் இம்மாநிலத்தைவிட பெரிய பொருளாதாரம் ஆகும். அமெரிக்காவின் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் ஆக்கம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.