யாக்யவல்க்கியர்

யாக்யவல்க்கியர் என்பவர் வேதகாலத்தில் மிதிலை நகரத்தில் வாழ்ந்த ஒரு முனிவர். இவர் பிற்காலத்தில் இராமாயணத்தில் வரும் சீதையின் தந்தையான ஜனகனின் குரு ஆவார்.இவர் வேறு ஜனக மன்னர் எனவும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அறியலாம்.

யாக்யவல்க்கிய முனிவருடன் மன்னர் ஜனகர்

வாழ்க்கை

யாக்யவல்க்கியர் தேவராதனுடைய பிள்ளை. இவருடைய குரு வைசம்பாயனர். யாக்யவல்க்யர் இயசுர் வேதத்தில் அன்றைய காலங்களில் புகுத்தபட்ட சில திருத்தங்களை எதிர்த்தார். இதனால் வைசம்பாயனருக்கும் இவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கோபமடைந்த வைசம்பாயனர், அவர் சொல்லி கொடுத்த வேதங்களையும் அதனால் பெற்ற அறிவையும் திருப்பித்தருமாறு ஆணையிட்டார். இயாக்யவல்க்கியரும் குருவின் ஆணைப்படி அனைத்தையும் செரித்த உணவாக உமிழ்ந்தார்.

பிறகு யாக்யவல்க்கியர் சூரியக் கடவுளிடமிரிந்து வைசம்பாயனரும் அறியாத சுக்கில இயசுர்வேதத்தை கற்றரிந்தார். இதன் காரணத்தால் இயசுர்வேதம், கிருட்டிண இயசுர் வேதம் என்றும் சுக்கில இயசுர் வேதம் என்றும் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டது.

யாக்யவல்க்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என்ற இரு மனைவியர் இருந்தனர். யாக்யவல்க்யர் தன் மனைவியருக்கு தன் சொத்தை பிரித்துக் கொடுக்கும்போது, மைத்ரேயி தனக்கு இவற்றால் அழிவற்ற தன்மை கிடைக்குமா? என்று யாக்யவல்க்யரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே எற்பட்ட உரையாடல்கள் பிரகரதானிய உபநிடத்தில் பதிவு செய்யபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பங்களிப்பு

யாக்யவல்க்கியர் சதபத பிராம்மணம், பிரகதாரண்யக உபநிடதம், யாக்யவல்க்ய சம்கிதா, யாக்யவல்க்கிய சுமிருதி என்ற பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் வானியல் கலையிலும் பெரிய பங்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.