2014 உலகக்கோப்பை காற்பந்து

2014 உலகக்கோப்பை காற்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20 ஆவது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெற்றன.

2014 உலகக்கோப்பை கால்பந்து
Copa do Mundo da FIFA
பிரேசில் 2014
2014 பீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்:
Juntos num só ritmo
(All in one rhythm)
(எல்லோரும் ஒரே தாளத்தில்)
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு பிரேசில்
நாட்கள்12 சூன் – 13 சூலை
அணிகள்32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்12 (12 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் செருமனி (4-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அர்கெந்தீனா
மூன்றாம் இடம் நெதர்லாந்து
நான்காம் இடம் பிரேசில்
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்64
எடுக்கப்பட்ட கோல்கள்171 (2.67 /ஆட்டம்)
பார்வையாளர்கள்34,29,873 (53,592/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) ஜேம்சு ரொட்ரீகசு
(6 கோல்கள்)[1]
சிறந்த ஆட்டக்காரர் லியோனல் மெசி[2]
சிறந்த இளம் ஆட்டக்காரர் பவுல் பொக்பா[3]
சிறந்த கோல்காப்பாளர் மானுவல் நொயார்[4]
2010
2018

இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது. 2007 இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.

சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்தன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதின. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற்றன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்பட்டன. இம்முறையே முதன்முதலாகப் புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது.[5]

1930 இலிருந்து உலகக்கோப்பையை வென்ற உலக வாகையாளர்களான உருகுவை, பிரேசில், இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா ஆகியன 2014 போட்டிகளில் பங்கேற்றன. 2010 உலகக்கோப்பை வாகையாளரான எசுப்பானியா அணி, மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகியன குழுநிலை ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறின. உருகுவாய் 16 அணிகளின் சுற்றிலும், பிரான்சு காலிறுதியிலும் தோல்வியுற்று வெளியேறின. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும், செருமனியும் போட்டியிட்டன. இதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இடம்பெற்ற ஏழு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[6] இறுதியாட்டத்தில் செருமனி அர்கெந்தீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் பெற்றது.[7]

போட்டி நடத்தும் நாடு தேர்வு

செப் பிளாட்டர் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக பிரேசிலை அறிவித்தல்

மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[8][9] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.

சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது.[10] ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன.[11]

இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[12] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[13] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[14] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[15] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[16]

தகுதிநிலை

இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப் போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[17] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[18][19] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.

208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர்.[20] பிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது.[21] 2002க்குப் பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை.

தகுதிபெற்ற அணிகள்

கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு பிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[22]

ஆசி.காகூ (4)
ஆப்.காகூ (5)
ஓகாகூ (0)
  • தகுதி பெறவில்லை
வமஅககாகூ (4)
தெஅகாகூ (6)
ஐகாசகூ (13)
  உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நாடு
  தகுதி பெறாத நாடு
  போட்டியிடாத நாடு
  பிஃபா உறுப்பினரல்லாத நாடு

இடம்

பனிரெண்டு இடங்கள் (ஏழு புதிய மற்றும் ஐந்து புணரமைக்கப்பட்ட இடங்கள்) பனிரெண்டு நகர்களில் இருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இரியோ டி செனீரோ, ரிசெ பிரசிலியா, கூமா சாவோ பாவுலோ, சாபா போர்த்தலேசா, சியா
எசுடேடியோ டொ மரக்கானா எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா[23] கொரிந்தியன்சு அரங்கம் எசுடேடியோ கேஸ்தலோவ்

22°54′43.8″S 43°13′48.59″W

15°47′0.6″S 47°53′56.99″W

23°32′43.91″S 46°28′24.14″W

3°48′26.16″S 38°31′20.93″W

கொள்ளளவு: 76,935[24]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளளவு: 70,042[25]

(புதிய அரங்கு)

கொள்ளளவு: 68,000
(புதிய அரங்கு)
கொள்ளளவு: 64,846[26]

(புதுப்பிக்கப்பட்டது)

பெலோ அரிசாஞ்ச், மிஜெ போர்ட்டோ அலெக்ரி, ரிசு
மினெய்ரோ விளையாட்டரங்கம் எசுடேடியோ பெய்ரா ரியோ

19°51′57″S 43°58′15″W

30°3′56.21″S 51°14′9.91″W

கொள்ளவு: 62,547

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 51,300[27]
(புதுப்பிக்கப்பட்டது)
சால்வடோர், பா ரெசிஃபி, பெ
அரீனா பொன்டே நோவா இட்டாய்பவா அரீனா

12°58′43″S 38°30′15″W

8°2′24″S 35°0′29″W

கொள்ளவு: 56,000[28]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 46,154

(புதிய அரங்கு)

குய்யாபா, மா மனௌசு, அமா நடால், ரி குரிடிபே,
அரீனா பன்டனல் அரீனா அமசோனியா அரீனா டஸ் டுனஸ் அரீனா ட பய்க்சாடா

15°36′11″S 56°7′14″W

3°4′59″S 60°1′41″W

5°49′44.18″S 35°12′49.91″W

25°26′54″S 49°16′37″W

கொள்ளவு: 42,968
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,374
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,086
(புதிய அரங்கு)
கொள்ளவு: 43,981[29]
(புதுப்பிக்கப்பட்டது)

இறுதி குலுக்கல்

தொட்டி 1 (மூலம்) தொட்டி 2 (ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) தொட்டி 3 (ஆசியா மற்றும் வட அமெரிக்கா) தொட்டி 4 (ஐரோப்பா)

 பிரேசில் (நடத்தும் நாடு)
 அர்கெந்தீனா
 கொலம்பியா
 உருகுவை
 பெல்ஜியம்
 செருமனி
 எசுப்பானியா
 சுவிட்சர்லாந்து

 அல்ஜீரியா
 கமரூன்
 ஐவரி கோஸ்ட்
 கானா
 நைஜீரியா
 சிலி
 எக்குவடோர்

 ஆத்திரேலியா
 சப்பான்
 ஈரான்
 தென் கொரியா
 கோஸ்ட்டா ரிக்கா
 ஒண்டுராசு
 மெக்சிக்கோ
 ஐக்கிய அமெரிக்கா

 பொசுனியா எர்செகோவினா
 குரோவாசியா
 இங்கிலாந்து
 பிரான்சு
 கிரேக்க நாடு
 இத்தாலி (தொட்டி 2க்கு)
 நெதர்லாந்து
 போர்த்துகல்
 உருசியா

ஆட்ட நடுவர்கள்

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[30] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[31][32]

கோல்-கோடு தொழினுட்பம்

உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[33] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[34] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[35] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[36]

இந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோபை காற்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி மற்றும் ஹாண்டூரஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் பென்சமா அடித்த கோல் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பும் வேளையில், அந்த கோலைத் தடுக்க முயற்சித்த ஹாண்டூரஸ் அணியின் கோல் கீப்பர் நோயல் வெலாட்ரஸின் கைகளில் உரசி கோல் எல்லைக் கோட்டைக் கடந்தது என்று முறைப்பாடு எழ, 'கோல்-கோடு தொழினுட்பம்' மூலம் பந்து கோல் வலையின் கோட்டைக் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டது.[37]

மறைகின்ற தெளிப்பு

உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[38]

போட்டிகள்

குழு நிலை

குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[39]

  வாகையாளர்
  இரண்டாமிடம்
  மூன்றாமிடம்
  நான்காமிடம்
  கால் இறுதி
  சுற்று 16
  குழு நிலை
சமநிலையை முறி கட்டளை விதி

குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:

  1. எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
  2. எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
  3. எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
  4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
  5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
  6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
  7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறாத அணிகள்

குழு ஏ

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பிரேசில் 3 2 1 0 7 2 +5 7
 மெக்சிக்கோ 3 2 1 0 4 1 +3 7
 குரோவாசியா 3 1 0 2 6 6 0 3
 கமரூன் 3 0 0 3 1 9 8 0

12 சூன் 2014
17:00
பிரேசில்  3-1  குரோவாசியா
நெய்மார்  29', 71' (தண்ட உதை)
ஒஸ்கார்  90+1'
அறிக்கை மாசெலோ  11' (சுய கோல்)[nb 1]
கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ
பார்வையாளர்கள்: 62,103[41]
நடுவர்: யூச்சி நிசிமுரா (ஜப்பான்)[42]

13 சூன் 2014
13:00
மெக்சிக்கோ  1-0  கமரூன்
பெரல்டா  61' அறிக்கை
அரீனா டஸ் டுனஸ், நடால்
பார்வையாளர்கள்: 39,216
நடுவர்: வில்மர் ரொல்டன் (கொலம்பியா)

17 சூன் 2014
16:00
பிரேசில்  0-0  மெக்சிக்கோ
அறிக்கை
எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா
பார்வையாளர்கள்: 60,342
நடுவர்: கூனெய்த் சாகிர் (துருக்கி)

18 சூன் 2014
19:00
கமரூன்  0-4  குரோவாசியா
அறிக்கை ஒலிக்  11'
பெரிசிக் 48'
மான்சுகிக் 61'  73'
அரீனா அமசோனியா, மனௌசு
பார்வையாளர்கள்: 39,982
நடுவர்: பெட்ரோ புரொவென்கா (போர்த்துக்கல்)

23 சூன் 2014
17:00
கமரூன்  1–4  பிரேசில்
மட்டிப்  26' அறிக்கை நெய்மர்  17', 35'
பிரட்  49'
பெர்னாண்டினோ  84'
எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா
பார்வையாளர்கள்: 69,112
நடுவர்: ஜோன்ஸ் எரிக்சன் (சுவீடன்)

23 சூன் 2014
17:00
குரோவாசியா  1–3  மெக்சிக்கோ
ஐவன் பெரிசிக்  87' அறிக்கை மார்க்குயிஸ்  72'
குராடோ  75'
கெர்னாட்ஸ்  82'
அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி
பார்வையாளர்கள்: 41,212
நடுவர்: ரவ்சான் இர்மடோவ் (உஸ்பெகிஸ்தான்)

குழு பி

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 நெதர்லாந்து 3 3 0 0 10 3 +7 9
 சிலி 3 2 0 1 5 3 +2 6
 எசுப்பானியா 3 1 0 2 4 7 3 3
 ஆத்திரேலியா 3 0 0 3 3 9 6 0

13 சூன் 2014
16:00
எசுப்பானியா  1–5  நெதர்லாந்து
அலன்சோ  27' (தண்ட உதை) அறிக்கை வான் பெர்சீ  44', 72'
ரொபென்  53', 80'
டெ விரிச்  65'
இட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம், சால்வதோர்
பார்வையாளர்கள்: 48,173
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

13 சூன் 2014
19:00
சிலி  3-1  ஆத்திரேலியா
சான்செசு  12'
வால்தீவியா  14'
போசெசோர்  90+2'
அறிக்கை காகில்  35'
அரீனா பன்டனல், குய்யாபா
பார்வையாளர்கள்: 40,275
நடுவர்: நுமான்டியெசு டூயே (ஐவரி கோஸ்ட்)

18 சூன் 2014
13:00
ஆத்திரேலியா  2-3  நெதர்லாந்து
டிம் காகில்  21'
ஜெடினாக்  54' (தண்ட உதை)
அறிக்கை ரொபென்  20'
வான் பெர்சி  58'
டெப்பே  68'
எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி
பார்வையாளர்கள்: 42,877
நடுவர்: ஜமெல் ஐமூடி (அல்சீரியா)

18 சூன் 2014
16:00
எசுப்பானியா  0-2  சிலி
அறிக்கை வர்கஸ்  19'
அராகிஸ்  43'
மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ
பார்வையாளர்கள்: 74,101
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

23 சூன் 2014
13:00
ஆத்திரேலியா  0-3  எசுப்பானியா
அறிக்கை டேவிட் வில்லா  36'
டொரெசு  69'
மட்டா  82'
எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே
பார்வையாளர்கள்: 39,375
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

23 சூன் 2014
13:00
நெதர்லாந்து  2-0  சிலி
ஃபெர்  77'
மெம்பிசு  90+2'
அறிக்கை
கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ
பார்வையாளர்கள்: 62,996
நடுவர்: பக்காரி கசாமா (காம்பியா)

குழு சி

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 கொலம்பியா 3 3 0 0 9 2 +7 9
 கிரேக்க நாடு 3 1 1 1 2 4 2 4
 ஐவரி கோஸ்ட் 3 1 0 2 4 5 1 3
 சப்பான் 3 0 1 2 2 6 4 1

14 சூன் 2014
13:00
கொலம்பியா  3–0  கிரேக்க நாடு
ஆர்மெரோ  5'
குடியெர்ஸ்  58'
ரொட்ரிகஸ்  90+3'
அறிக்கை
மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்
பார்வையாளர்கள்: 57,174
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

14 சூன் 2014
22:00
ஐவரி கோஸ்ட்  2-1  சப்பான்
பொனி  64'
ஜெர்வீனோ  66'
அறிக்கை ஒண்டா  16'
அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி
பார்வையாளர்கள்: 40,267
நடுவர்: என்றிக் ஓசெஸ் (சிலி)

19 சூன் 2014
13:00
கொலம்பியா  2–1  ஐவரி கோஸ்ட்
ரொட்ரீகசு  64'
குவுன்டெரோ  70'
அறிக்கை செர்வீனோ  73'
எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா
பார்வையாளர்கள்: 68,748
நடுவர்: ஹவார்ட் வெப் (இங்கிலாந்து)

19 சூன் 2014
19:00
சப்பான்  0-0  கிரேக்க நாடு
அறிக்கை
அரீனா டஸ் டுனஸ், நடால்
பார்வையாளர்கள்: 39,485
நடுவர்: ஜொயெல் அகிலார் (எல் சால்வடோர்)

24 சூன் 2014
17:00
சப்பான்  1–4  கொலம்பியா
ஓக்கசாக்கி  45+1' அறிக்கை குட்ராடோ  17' (தண்ட உதை)
மார்டினெஸ்  55', 82'
ரொட்ரிக்கஸ்  90'
அரீனா பன்டனல், குய்யாபா
பார்வையாளர்கள்: 40,340
நடுவர்: பெட்ரோ (போர்த்துக்கல்)

24 சூன் 2014
17:00
கிரேக்க நாடு  2–1  ஐவரி கோஸ்ட்
சமாரிஸ்  42'
சமராஸ்  90+3' (தண்ட உதை)
அறிக்கை பொனி  74'
எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா
பார்வையாளர்கள்: 59,095
நடுவர்: கரோல்ஸ் வேரா (ஈக்வடோர்)

குழு டி

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 கோஸ்ட்டா ரிக்கா 3 2 1 0 4 1 +3 7
 உருகுவை 3 2 0 1 4 4 0 6
 இத்தாலி 3 1 0 2 2 3 1 3
 இங்கிலாந்து 3 0 1 2 2 4 2 1

14 சூன் 2014
16:00
உருகுவை  1-3  கோஸ்ட்டா ரிக்கா
கவானி  24' (தண்ட உதை) அறிக்கை கேம்பெல்  54'
துவார்த்தே  57'
யுரேனா  84'
எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா
பார்வையாளர்கள்: 58,679
நடுவர்: பீலிக்சு பிரிக் (செருமனி)

14 சூன் 2014
19:00
இங்கிலாந்து  1-2  இத்தாலி
ஸ்டரிட்ச்  37' அறிக்கை மார்ச்சீசியோ  35'
பலொட்டெலி  50'
அரீனா அமசோனியா, மனௌசு
பார்வையாளர்கள்: 39,800
நடுவர்: பியோர்ன் கூப்பர்சு (நெதர்லாந்து)

19 சூன் 2014
16:00
உருகுவை  2-1  இங்கிலாந்து
சுவாரெசு  39', 85' அறிக்கை ரூனி  75'
கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ
பார்வையாளர்கள்: 62,575
நடுவர்: கார்லோசு கர்வாலோ (எசுப்பானியா)

20 சூன் 2014
13:00
இத்தாலி  0-1  கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை ரூயிசு  44'
அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி
பார்வையாளர்கள்: 40,285
நடுவர்: என்றிக்கே ஓசெசு (சிலி)

24 சூன் 2014
13:00
இத்தாலி  0–1  உருகுவை
அறிக்கை டிகோ கோடின்  81'
அரீனா டஸ் டுனஸ், நடால்
பார்வையாளர்கள்: 39,706
நடுவர்: மாகோ ரொட்ரிக்கஸ் (மெக்சிக்கோ)

24 சூன் 2014
13:00
கோஸ்ட்டா ரிக்கா  0–0  இங்கிலாந்து
அறிக்கை
மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்
பார்வையாளர்கள்: 57,823
நடுவர்: கைமெளடி (அல்ஜீரியா)

குழு ஈ

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பிரான்சு 3 2 1 0 8 2 +6 7
 சுவிட்சர்லாந்து 3 2 0 1 7 6 +1 6
 எக்குவடோர் 3 1 1 1 3 3 0 4
 ஒண்டுராசு 3 0 0 3 1 8 7 0

15 சூன் 2014
13:00
சுவிட்சர்லாந்து  2-1  எக்குவடோர்
மெக்மெதி  48'
செஃபெரோவிச்  90+3'
அறிக்கை எ. வலென்சியா  22'
எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா
பார்வையாளர்கள்: 68,351
நடுவர்: ராவ்சன் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)

15 சூன் 2014
16:00
பிரான்சு  3-0  ஒண்டுராசு
பென்சிமா  45' (தண்ட உதை),  72'
வலாடெரெசு  48' (சுய கோல்)
அறிக்கை
எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி
பார்வையாளர்கள்: 43,012
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

20 சூன் 2014
16:00
சுவிட்சர்லாந்து  2-5  பிரான்சு
ஜெமாய்லி  81'
ஹாக்கா  87'
அறிக்கை கிரூட்  17'
மத்தூடி  18'
வால்பூனா  40'
பென்சிமா  67'
சிசோக்கோ  73'
அரீனா பொன்டே நோவா, சால்வடோர்
பார்வையாளர்கள்: 51,003
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

20 சூன் 2014
19:00
ஒண்டுராசு  1-2  எக்குவடோர்
கோஸ்ட்லி  31' அறிக்கை எ. வலேன்சியா  34', 65'
எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே
பார்வையாளர்கள்: 39,224
நடுவர்: பென் வில்லியம்சு (ஆத்திரேலியா)

25 சூன் 2014
17:00
ஒண்டுராசு  0-3  சுவிட்சர்லாந்து
அறிக்கை சக்கிரி  6', 31', 71'
அரீனா அமசோனியா, மனௌசு
பார்வையாளர்கள்: 40,322
நடுவர்: நெஸ்டர் (ஆர்ஜெந்தீனா)

25 சூன் 2014
17:00
எக்குவடோர்  0–0  பிரான்சு
அறிக்கை
மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ
பார்வையாளர்கள்: 73,749
நடுவர்: நெளமன்டிஸ் (ஐவரி கோஸ்ட்)

குழு எப்

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 அர்கெந்தீனா 3 3 0 0 6 3 +3 9
 நைஜீரியா 3 1 1 1 3 3 0 4
 பொசுனியா எர்செகோவினா 3 1 0 2 4 4 0 3
 ஈரான் 3 0 1 2 1 4 3 1

15 சூன் 2014
19:00
அர்கெந்தீனா  2-1  பொசுனியா எர்செகோவினா
கோலசினாக்  3' (சுய கோல்)
மெஸ்ஸி  65'
அறிக்கை இபிசெவிக்  84'
மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ
பார்வையாளர்கள்: 74,738
நடுவர்: யோயல் ஆக்குய்லர் (எல் சல்வடோர்)

16 சூன் 2014
16:00
ஈரான்  0 – 0  நைஜீரியா
அறிக்கை
எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே
பார்வையாளர்கள்: 39,081
நடுவர்: கார்லோசு வீரா எக்குவடோர்

21 சூன் 2014
13:00
அர்கெந்தீனா  1-0  ஈரான்
மெசி  90+1' அறிக்கை
மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்
பார்வையாளர்கள்: 57,698
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

21 சூன் 2014
19:00
நைஜீரியா  1-0  பொசுனியா எர்செகோவினா
ஓடெம்விங்கி  29' அறிக்கை
அரீனா பன்டனல், குய்யாபா
பார்வையாளர்கள்: 40,499
நடுவர்: பீட்டர் ஓ'லியரி (நியூசிலாந்து)

25 சூன் 2014
13:00
 நைஜீரியா 2-3  அர்கெந்தீனா
மூசா  4', 47' அறிக்கை மெசி  3', 45+1'
ரோஜோ  50'
பெய்ரா ரியோ விளையாட்டரங்கம், போர்ட்டோ அலெக்ரி
பார்வையாளர்கள்: 43,285
நடுவர்: நிக்கொலா ரிசோலி (இத்தாலி)

25 சூன் 2014
13:00
பொசுனியா எர்செகோவினா  3-1  ஈரான்
சேக்கோ  23'
பிஜானிச்  59'
விரிசஜேவிச்  83'
அறிக்கை கூசனெஜாத்  82'
அரீனா பொன்டே நோவா, சால்வடோர்
பார்வையாளர்கள்: 48,011
நடுவர்: கார்லொசு கார்பாலோ (எசுப்பானியா)

குழு ஜி

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 செருமனி 3 2 1 0 7 2 +5 7
 ஐக்கிய அமெரிக்கா 3 1 1 1 4 4 0 4
 போர்த்துகல் 3 1 1 1 4 7 3 4
 கானா 3 0 1 2 4 6 2 1

16 சூன் 2014
13:00
செருமனி  4-0  போர்த்துகல்
முல்லர்  12' (தண்ட உதை), 45+1', 78'
அமெல்சு  32'
அறிக்கை
அரீனா பொன்டே நோவா, சால்வடோர்
பார்வையாளர்கள்: 51,081
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

16 சூன் 2014
19:00
கானா  1 – 2  ஐக்கிய அமெரிக்கா
அய்யு  82' அறிக்கை டம்செ 1'
புரூக்சு 86'
அரீனா டஸ் டுனஸ், நடால்
பார்வையாளர்கள்: 39,760
நடுவர்: ஜோனசு எரிக்சன் சுவீடன்

21 சூன் 2014
16:00
செருமனி  2-2  கானா
கோட்சி  51'
குளோசி  71'
அறிக்கை ஆயெவ்  54'
கயான்  63'
எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா
பார்வையாளர்கள்: 59,621
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

22 சூன் 2014
19:00
ஐக்கிய அமெரிக்கா  2 – 2  போர்த்துகல்
ஜோன்சு  64'
டெம்ப்சி  81'
அறிக்கை நானி  5'
வரேலா  90+5'
அரீனா அமசோனியா, மனௌசு
பார்வையாளர்கள்: 40,123
நடுவர்: நெசுட்டர் பிட்டானா (அர்கெந்தீனா)

26 சூன் 2014
13:00
ஐக்கிய அமெரிக்கா  0–1  செருமனி
அறிக்கை முல்லர்  55'
அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி
பார்வையாளர்கள்: 41,876
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உஸ்பெக்கிஸ்தான்)

26 சூன் 2014
13:00
போர்த்துகல்  2-1  கானா
போயி  31' (சுய கோல்)
ரொனால்டோ  80'
அறிக்கை கயான்  57'
எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா
பார்வையாளர்கள்: 67,540
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

குழு எச்

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பெல்ஜியம் 3 3 0 0 4 1 +3 9
 அல்ஜீரியா 3 1 1 1 6 5 +1 4
 உருசியா 3 0 2 1 2 3 1 2
 தென் கொரியா 3 0 1 2 3 6 3 1

17 சூன் 2014
13:00
பெல்ஜியம்  2-1  அல்ஜீரியா
ஃபெலானி  70'
மெர்டென்சு  80'
அறிக்கை ஃபெகோலி  25' (தண்ட உதை)
மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்
பார்வையாளர்கள்: 56,800
நடுவர்: மார்க்கோ ரொட்ரிகசு (மெக்சிக்கோ)

17 சூன் 2014
19:00
உருசியா  1-1  தென் கொரியா
கெர்சாகோவ்  74' அறிக்கை லீ கெயுன்-ஹோ  68'
அரீனா பன்டனல், குய்யாபா
பார்வையாளர்கள்: 37,603
நடுவர்: நெஸ்டோர் பிட்டானா (ஆர்ஜெண்டீனா)

22 சூன் 2014
13:00
பெல்ஜியம்  1-0  உருசியா
டிவோக் ஓரிகி  88' அறிக்கை
மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ
பார்வையாளர்கள்: 73,819
நடுவர்: பெலிக்சு பிரைக் (செருமனி)

22 சூன் 2014
16:00
தென் கொரியா  2-4  அல்ஜீரியா
சொன் ஹூங்-மின்  50'
கூ ஜா-சியோல்  72'
அறிக்கை சிலிமானி  26'
அலிச்சி  28'
ஜபூ  38'
பிராகிமி  62'
எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி
பார்வையாளர்கள்: 42,732
நடுவர்: வில்மார் ரொல்தான் (கொலம்பியா)

26 சூன் 2014
17:00
தென் கொரியா  0–1  பெல்ஜியம்
அறிக்கை வெடொங்கன்  78'
எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே
பார்வையாளர்கள்: 61,397
நடுவர்: பென் வில்லியம்ஸ் (ஆஸ்திரேலியா)

26 சூன் 2014
17:00
அல்ஜீரியா  1–1  உருசியா
சிலைமணி  60' அறிக்கை கொகோரின்  6'
எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே
பார்வையாளர்கள்: 39,311
நடுவர்: ககிர் (துருக்கி)

ஆட்டமிழக்கும் நிலை

16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
28 சூன் – பெலோ அரிசாஞ்ச்            
  பிரேசில் (ச.நீ.)  1 (3)
4 சூலை – போர்த்தலேசா
  சிலி  1 (2)  
  பிரேசில்  2
28 சூன் – இரியோ டி செனீரோ
    கொலம்பியா  1  
  கொலம்பியா  2
8 சூலை – பெலோ அரிசாஞ்ச்
  உருகுவை  0  
  பிரேசில்   1
30 சூன் – பிரசிலியா
    செருமனி  7  
  பிரான்சு  2
4 சூலை – இரியோ டி செனீரோ
  நைஜீரியா  0  
  பிரான்சு  0
30 சூன் – போர்ட்டோ அலெக்ரி
    செருமனி  1  
  செருமனி (மி.நே.)   2
13 சூலை – இரியோ டி செனீரோ
  அல்ஜீரியா   1  
  செருமனி (கூ.நே.)  1
29 சூன் – போர்த்தலேசா
    அர்கெந்தீனா  0
  நெதர்லாந்து  2
5 சூலை – சவ்வாதோர்
  மெக்சிக்கோ  1  
  நெதர்லாந்து (ச.நீ.)  0 (4)
29 சூன் – ரெசிஃபி
    கோஸ்ட்டா ரிக்கா  0 (3)  
  கோஸ்ட்டா ரிக்கா (ச.நீ.)  1 (5)
9 சூலை – சாவோ பாவுலோ
  கிரேக்க நாடு  1 (3)  
  நெதர்லாந்து  0 (2)
1 சூலை – சாவோ பாவுலோ
    அர்கெந்தீனா (ச.நீ.)  0 (4)   மூன்றாம் இடம்
  அர்கெந்தீனா (கூ.நே.)  1
5 சூலை – பிரசிலியா 12 சூலை – பிரசிலியா
  சுவிட்சர்லாந்து  0  
  அர்கெந்தீனா  1   பிரேசில்  0
1 சூலை – சவ்வாதோர்
    பெல்ஜியம்  0     நெதர்லாந்து  3
  பெல்ஜியம் (கூ.நே.)  2
  ஐக்கிய அமெரிக்கா  1  

சுற்று 16

28 சூன் 2014
13:00
பிரேசில்  1–1 (கூநே)  சிலி
டேவிட் லுயிஸ்  18' அறிக்கை அலெக்சிஸ்  32'
  சமன்நீக்கி மோதல்  
டேவிட் லுயிஸ்
வில்லியன்
மார்செலோ
அல்க்
நெய்மார்
3–2 பினிலா
சான்செசு
அராங்குயிசு
டயஸ்
ஜாரா
மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்
பார்வையாளர்கள்: 57,714
நடுவர்: கோவட் வெப் (இங்கிலாந்து)

28 சூன் 2014
17:00
கொலம்பியா  2-0  உருகுவை
ரொட்ரீகசு  28', 50' அறிக்கை
மரக்கானா, இரியோ டி செனீரோ
பார்வையாளர்கள்: 73,804
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

29 சூன் 2014
13:00
நெதர்லாந்து  2-1  மெக்சிக்கோ
சினெய்ஜர்  88'
அன்டெலார்  90+4' (தண்ட உதை)
அறிக்கை டொசு சான்டோசு  48'
கேஸ்தலோவ் அரங்கம், போர்த்தலேசா
பார்வையாளர்கள்: 58,817
நடுவர்: பெட்ரோ பிரோங்கோ (போர்த்துக்கல்)

29 சூன் 2014
17:00
கோஸ்ட்டா ரிக்கா  1-1 (கூநே)  கிரேக்க நாடு
ரூயிசு  52' அறிக்கை பப்பஸ்ததபவுலசு  90+1'
  சமன்நீக்கி மோதல்  
போர்கசு
ரூயிசு
கொன்சாலசு
கேம்பெல்
உமானா
5–3 மித்ரோகுலு
கிற்ஸ்தோடலோபவுலசு
ஒலிபாசு
கேகாசு
இட்டாய்பவா அரங்கம், ரெசிஃபி
பார்வையாளர்கள்: 41,242
நடுவர்: பென் வில்லியம்சு (ஆத்திரேலியா)

30 சூன் 2014
13:00
பிரான்சு  2-0  நைஜீரியா
போக்பா  79'
யோபோ  90+' (சுய கோல்)
அறிக்கை

30 சூன் 2014
17:00
செருமனி  2-1 (கூநே)  அல்ஜீரியா
சூருல்  92'
ஓசில்  120'
அறிக்கை ஜாபு  120+1'
பெய்ரா ரியோ விளையாட்டரங்கம், போர்ட்டோ அலெக்ரி
பார்வையாளர்கள்: 43,063
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

1 சூலை 2014
13:00
அர்கெந்தீனா  1-0 (கூநே)  சுவிட்சர்லாந்து
டி மரியா  118' அறிக்கை
கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ
பார்வையாளர்கள்: 63,255
நடுவர்: ஜோனாசு எரிக்சன் (சுவீடன்)

1 சூலை 2014
17:00
பெல்ஜியம்  2–1 (கூநே)  ஐக்கிய அமெரிக்கா
கெவின்  93'
லுக்காகு  105'
அறிக்கை யூலியன் கிரீன்  107'
அரீனா பொன்டே நோவா, சவ்வாதோர்
பார்வையாளர்கள்: 51,227
நடுவர்: கைமெளடி (அல்ஜீரியா)

கால் இறுதிகள்

4 சூலை 2014
13:00
பிரான்சு  0-1  செருமனி
அறிக்கை ஹமெல்சு  13'
மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ
பார்வையாளர்கள்: 74,240
நடுவர்: நெஸ்டோர் பித்தானா (அர்கெந்தீனா)

4 சூலை 2014
17:00
பிரேசில்  2-1  கொலம்பியா
தியேகோ சில்வா  7'
டேவிட் லூயிசு  69'
அறிக்கை ரொட்ரீகசு  80'
கேஸ்தலோவ் அரங்கு, போர்த்தலேசா
பார்வையாளர்கள்: 60,342
நடுவர்: கார்லோசு சர்பாலோ (எசுப்பானியா)

5 சூலை 2014
13:00
அர்கெந்தீனா  1–0  பெல்ஜியம்
கிகுகைன்  8' அறிக்கை
எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா
பார்வையாளர்கள்: 68,551
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

5 சூலை 2014
17:00
நெதர்லாந்து  0-0 (கூநே)  கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை
  சமன்நீக்கி மோதல்  
வான் பெர்சீ
ரொபென்
சினைடர்
குயிட்
4–3 போர்கெசு
ரூயிசு
கொன்சாலெசு
பொலானொசு
உமானா
இத்தாய்பவா அரங்கு, சவ்வாதோர்
பார்வையாளர்கள்: 51,179
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)

அரை இறுதிகள்

8 சூலை 2014
17:00
பிரேசில்  1-7  செருமனி
ஒஸ்கார்  90' அறிக்கை முல்லர்  11'
குளோசே  23'
இக்ரூசு  24', 26'
கெடிரா  29'
சுர்லெ  69', 79'
மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்
பார்வையாளர்கள்: 58,141
நடுவர்: மார்க்கோ ரோத்ரிகசு மெக்சிக்கோ

9 சூலை 2014
17:00
நெதர்லாந்து  0-0 (கூநே)  அர்கெந்தீனா
அறிக்கை
  சமன்நீக்கி மோதல்  
விளார்
ரொபென்
சினைடர்
குயிட்
2–4 மெசி
கரே
அகுவேரோ
மாக்சி ரொட்ரீகசு
கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ
பார்வையாளர்கள்: 63,267
நடுவர்: சூனெய்த் சாக்கிர் (துருக்கி)

மூன்றாமிடப் போட்டி

12 சூலை 2014
17:00
பிரேசில்  0-3  நெதர்லாந்து
அறிக்கை வான் பெர்சீ  3' (தண்ட உதை)
டாலி பிளின்ட்  17'
விச்னால்டம்  90+1'
மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம், பிரசிலியா
பார்வையாளர்கள்: 68,034
நடுவர்: ஜாமெல் ஐமூடி (அல்சீரியா)

இறுதி

13 சூலை 2014
16:00
செருமனி  1-0 (கூநே)  அர்கெந்தீனா
மரியோ கட்சே  113' அறிக்கை
மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ
பார்வையாளர்கள்: 74,738
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

புள்ளிவிபரம்

கோல் அடித்தவர்கள்

6 கோல்கள்
5 கோல்கள்
4 கோல்கள்
3 கோல்கள்
2 கோல்கள்
  • அப்தெல்மௌமீன் ஜபாவு
  • இசுலாம் சிலிமானி
  • டிம் காகில்
  • டேவிட் லூயிசு
  • ஒஸ்கார்
  • ஜாக்சன் மார்ட்டீனெசு
  • அலெக்சி சான்செசு
  • பிறையன் ரூயிசு
  • மரியோ மாந்சூக்கிச்
  • இவான் பெரிசிச்
  • மரியோ கோட்சே
  • மாத்சு ஹமெல்சு
  • மிரோசிலாவ் குளோசெ
  • டொனி குரூசு
  • அந்திரே ஆயெவ்
  • அசாமோவா கயான்
  • வில்பிரீது பொனி
  • ஜெர்வீனோ
  • மெம்பிசு டெப்பே
  • அகமது மூசா
  • கிளின்ட் டெம்ப்சி
  • சுவாரெசு
1 கோல்
  • யாசின் பிராகிமி
  • சோஃபியான் பெகூலி
  • ராஃபிக் ஹலிச்சி
  • கொன்சாலோ இகுவெயின்
  • ஏஞ்சல் டி மரியா
  • மார்கோசு ரொஜோ
  • மைல் செடினாக்
  • கெவின் டி புரூயின்
  • ஃபெலாயினி
  • ரொமேலு லுக்காகு
  • மெர்ட்டென்சு
  • திவொக் ஒரிஜி
  • சான் வெர்த்தோங்கன்
  • எதின் ஜேக்கோ
  • வெதாத் இபிசேவிச்
  • மிராலெம் பிஜானிச்
  • ஆவ்திஜா விரிசாஜேவிச்
  • பெர்னாந்தீனோ
  • பிரெட்
  • தியாகோ சில்வா
  • ஜொவெல் மாத்திப்
  • சார்ல்சு அராங்கிசு
  • சீன் போசிஜூர்
  • ஒர்சே வால்தீவியா
  • எதுவார்தோ வார்கசு
  • பாவ்லோ அர்மேரோ
  • உவான் குவாட்ராடோ
  • தியோபிலோ கிட்டேரசு
  • உவான் குவின்டேரோ
  • ஜோயெல் கேம்பெல்
  • ஓஸ்கார் துவார்த்தே
  • மார்க்கோ யுரேனா
  • இவிகா ஓலிச்
  • வேனே ரூனி
  • தானியேல் ஸ்டரிட்ச்
  • ஒலிவர் கிரூட்
  • பிளைசு மட்டூடி
  • பவுல் போக்பா
  • மூசா சிசோக்கோ
  • மெத்தியூ வாபுவேனா
  • மெசுட் ஓசிழ்
  • சொக்ரெட்டாரிசு பபஸ்தாதோபவுலசு
  • 'கியார்கியசு சமாரசு
  • அந்திரியாசு சமாரிசு
  • கார்லோ கோஸ்ட்லி
  • ரேசா கூச்சனெஜாத்
  • மரியோ பலோட்டெலி
  • குளோடியோ மார்சீசியோ
  • கெய்சூக்கி ஹொண்டா
  • சிஞ்சி ஒகசாகி
  • கூ ஜா-சியோல்
  • லீ கியூன்-ஹோ
  • சொன் ஹூங்-மின்
  • ஜியோவானி டொசு சன்டோசு
  • அந்திரேசு குவர்தாதோ
  • சேவியர் எர்னான்டசு
  • ரபாயல் மார்க்கெசு
  • ஒரிபி பெரால்ட்டா
  • டாலி பிளின்ட்
  • லெரோய் ஃபெர்
  • கிளாஸ்-சான் ஹன்டெலார்
  • உவெசுலி சினெய்ச்டர்
  • ஸ்தெபான் டி விரிச்
  • ஜோர்ஜீனியோ விச்னால்டம்
  • பீட்டர் ஓடெம்விங்கி
  • நானி
  • சில்வெஸ்டர் வரேலா
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • அலெக்சாந்தர் கெர்சக்கோவ்
  • அலெக்சாந்தர் கொக்கோரின்
  • சாபி அலொன்சோ
  • உவான் மாட்டா
  • பெர்னாண்டோ டொரெசு
  • டேவிட் வில்லா
  • பிளெரிம் ஜெமாலிலி
  • அத்மிர் மெகுமெதி
  • ஹரிசு செஃபெரோவிச்
  • கிரானித் ஹாக்கா
  • ஜோன் புரூக்ஸ்
  • ஜூலியன் கிறீன்
  • செருமயின் ஜோன்சு
  • எடின்சன் கவானி
  • தியேகோ கோதின்
சுய கோல்
  • கொலசினாக் (அர்சென்டீனாவுக்கு எதிராக)
  • மார்செலோ (குரோவாசியாவுக்கு எதிராக)
  • ஜோன் போய் (போர்த்துக்கலுக்கு எதிராக)
  • நொயல் வலடாரெசு (பிரான்சுக்கு எதிராக)
  • யோசப் யோபோ (பிரான்சுக்கு எதிராக)

மூலம்:[43]

போட்டிக்குப் பின்னரான அணி தரப்படுத்தல்

  வாகையாளர்
  இரண்டாமிடம்
  மூன்றாமிடம்
  நான்காமிடம்
  கால் இறுதி
  சுற்று 16
  குழு நிலை
அணி கு வி வெ தோ கோ.அ எ.கோ கோ.வி பு
இறுதி
1 செருமனி76101841419
2 அர்கெந்தீனா751184416
3ம், 4ம் இடம்
3 நெதர்லாந்து75201541117
4 பிரேசில்73221114-311
கால் இறுதிகளில் வெளியேறியவை
5 கொலம்பியா5401124812
6 பெல்ஜியம்540163312
7 பிரான்சு531110379
8 கோஸ்ட்டா ரிக்கா52305239
சுற்று 16 இல் வெளியேறியவை
9 சிலி42116427
10 மெக்சிக்கோ42115327
11 சுவிட்சர்லாந்து42027706
12 உருகுவை420246-26
13 கிரேக்க நாடு412135-25
14 அல்ஜீரியா41127704
15 ஐக்கிய அமெரிக்கா411256-14
16 நைஜீரியா411235-24
குழு நிலையில் வெளியேறியவை
17 எக்குவடோர்குழு ஈ31113304
18 போர்த்துகல்குழு ஜி311147−34
19 குரோவாசியாகுழு ஏ31026603
20 பொசுனியா எர்செகோவினாகுழு எப்31024403
21 ஐவரி கோஸ்ட்குழு சி310245−13
22 இத்தாலிகுழு டி310223−13
23 எசுப்பானியாகுழு பி310247−33
24 உருசியாகுழு எச்302123−12
25 கானாகுழு ஜி301246−21
26 இங்கிலாந்துகுழு டி301224−21
27 தென் கொரியாகுழு எச்301236−31
28 ஈரான்குழு எப்301214−31
29 சப்பான்குழு சி301226−41
30 ஆத்திரேலியாகுழு பி300339−60
31 ஒண்டுராசுகுழு ஈ300318−70
32 கமரூன்குழு ஏ300319−80

மூலம்: thesoccerworldcups.com[44]

பரிசுத் தொகை

இவ்விளையாட்டுப் போட்டிக்கு பீபாவினால் உறுதி செய்யப்பட்ட மொத்தத் தொகை $ 576 மில்லியனாகும். இது 2010 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கு கொடுக்கப்பட்டதிலிருந்து 37 வீதம் அதிகரித்துள்ளது.[45] போட்டிக்கு முன்பாக 32 நாட்டு அணிகளும் தலா $1.5 மில்லியனை ஆயத்த செவுக்காகப் பெறும். போட்டிக்காக பின்வரும் பரிசுத் தொகை வழங்கப்படும்:

சந்தைப்படுத்துதல்

பிரேசில் 2014 அலுவல்முறைச் சின்னம்

சின்னம்

இந்த இறுதிப் போட்டிகளின் சின்னமான "அகவெழுச்சி"யை ஆபிரிக்கா எனப்படும் பிரேசிலிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.[46] மூன்று வெற்றிக்கரங்கள் கூட்டாக உலகக்கோப்பையை தூக்குவது போன்ற ஒளிப்படத்தை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் பிரேசில் உலகநாடுகளை வரவேற்பதாக அமைந்துள்ளது. ஜோகானஸ்பேர்க்கில் நடந்த 2010 உலகக்கோப்பையின் போது ஒரு நிகழ்ச்சியில் இச்சின்னம் வெளியிடப்பட்டது.[46] இந்த வடிவமைப்பு 25 பிரேசிலிய நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[47] இத்தேர்விற்கான நடுவர் குழாமில் தொழில்முறை கணினி பக்கவடிவமைப்பாளர் எவரும் இல்லை என்றும் இச்சின்னம் முகத்தில் கையை வைத்திருப்பது போல இருப்பதாகவும் பிரேசிலின் வரைகலை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் வொல்னர் குறை கூறியுள்ளார்.[48]

பிஃபா சனவரி 2013இல் பிரேசிலிய கலைநிறுவனம் கிராமா உருவாக்கிய ஓர் அலுவல்முறை சுவரொட்டியை வெளியிட்டது.[49] அலுவல்முறை சுலோகமாக "அனைவரும் ஒரே தாளத்தில் " (போர்த்துக்கேயம்: "Juntos num só ritmo") தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.[50]

அலுவல் முறை பாடல்

1962ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் ஒரு அலுவல்முறை பாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. On 24 January 2014, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் சோனி இசை நிறுவனமும் சனவரி 24, 2014 அன்று சொல்லிசைக் கலைஞர் பிட்புல், ஜெனிஃபர் லோபஸ் மற்றும் கிளாடியா லெயிட் பாடிய "நாங்கள் ஒருவரே (ஒலே ஒலா)" என்ற பாடலை அலுவல்முறையான பாடலாக அறிவித்தனர்.[51] மேலும் சோனி உலகளவில் சூப்பர்சாங் என்றழைக்கப்படும் பாடலுக்கான போட்டியை அறிவித்தது. இது ஒரே விருப்பு, ஒரே தாளம் என்ற அலுவல்முறை இசைக்கோவையில் இடம் பெறும்.[52] பெப்ரவரி 10, 2014 அமெரிக்க எலிஜா கிங்கின் "விடா" ("வாழ்வு") என்ற பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதனை எசுப்பானியர் ரிக்கி மாட்டின் பாடியுள்ளார்.[53] வாக்கா வாக்கா (இது ஆபிரிக்காவின் நேரம்) என்ற முந்தைய உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பாடலைப் பாடிய சக்கீரா "டேர் (ல ல லா)" என்ற பாடலை இதற்கேற்ப மாற்றிப் பாடியுள்ளார். இது இரண்டாம்நிலை அலுவல்முறைப் பாடலாக கொள்ளப்படுகிறது.[54] மார்ச்சு மாத இறுதியில் பிஃபா "டர் உம் ஜெய்தோ (வழி காணுவோம்)" என்ற பாடலை 2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறைப் பண்ணாக தேர்ந்தெடுத்துள்ளது.[55]

ஆட்டப்பந்து

2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பந்தாக அடிடாசு பிராசுகா விளங்கும்.1970 முதல் உலகக்கோப்பை ஆட்டப் பந்தை வழங்கிவரும் அடிடாசு நிறுவனம், பிரேசிலின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் விதமாக மூன்று பெயர்களை குறும்பட்டியலிட்டிருந்தது. இதிலிருந்து 1 மில்லியனுக்கும் கூடுதலான பிரேசிலிய காற்பந்து விசிறிகள் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.[56]

ஊடகம்

தொடர்ந்து நான்காம் முறையாக பிஃபா உலகக்கோப்பை இறுதியாட்டங்களின் காட்சிகளை இன்பிரண்ட் இசுபோர்ட்சு & மீடியா நிறுவனத்தின் துணைநிறுவனமான ஹோஸ்ட் பிராட்காஸ்ட் சர்வீசஸ் (HBS) வழங்குகிறது.[57] இந்த விளையாட்டுக்களை திரைபிடிக்கும் கருவிகளுக்கான அதிகாரபூர்வ நிறுவனமாக சோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மீயுயர் வரையறை ஒளிதத் தயாரிப்பு திறனுள்ள பன்னிரெண்டு 40-அடி-நீள பெட்டிகளை சோனி உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆட்டக்களத்திற்கும் ஒன்றாக இவற்றில் மிகவிரிவான கருவிகள் அமைக்கப்பெற்றுள்ளன.[58][59] ஒவ்வொரு ஆட்டமும் 37 சீர்தர ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் இரண்டு மிகவிரைவு நகர்வு ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் நேர்காணல்களுக்கான பிரத்யேக ஒளிப்பிடிப்பு சாதனங்களையும் பயன்படுத்தும். மேலும் வான்வழி ஒளிப்பிடிப்புக் கருவியும் கம்பி மூலமாக ஆட்டக்களத்தில் இயங்கும் ஒளிப்பிடிப்புக் கருவியும் இவற்றில் அடங்கும்.[59] இந்தப் போட்டியைக் குறித்தான அதிகாரபூர்வ திரைப்படமும் மூன்று ஆட்டங்களும்[nb 2] மீயுயர் வரையறைத் தொலைக்காட்சித் தொழினுட்பத்தில், (4K வரையறை), படம் பிடிக்கப்படும்.[60]

பரப்புகை உரிமங்கள் – தொலைக்காட்சி, வானொலி, இணையம் மற்றும் நகர்பேசி பரப்புகை – பிஃபாவால் நேரடியாகவோ அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களாலோ தனித்தனி பகுதிகளில் விற்கப்பட்டுள்ளன.[61] உலகக்கோப்பை நடத்துவதால் பிஃபா பெரும் வருமானத்தில் இந்த விற்பனை 60% ஆக மதிப்பிடப்படுள்ளது.[62] பன்னாட்டு பரப்புகை மையம் இரியோ டி செனீரோவின் புறநகரில் பர்ரா டா டியுகாவில் ரியோசென்ட்ரோவில் அமைக்கப்பட்டுள்ளது.[63][64]

சர்ச்சைகளும் எதிர்ப்புகளும்

எதிர்ப்புகள்

ஆரம்ப நிகழ்வு தினத்தில் உலகக்கோப்பை எதிர்ப்பு
பிரேசிலியாவில் கட்டுமானப்பணியில் இறந்த ஒன்பது பேருக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக நுழைவுச்சீட்டு வாயிலருகில் எதிர்ப்பு வாசகங்களுடன்

2013ஆம் ஆண்டு பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் துவக்கவிழாவிற்கு முன்னதாகவே பிரேசிலியா தேசிய விளையாட்டரங்கத்தின் முன்பாக உலகக்கோப்பை ஆட்டங்களை ஏற்று நடத்த செலவிடப்படும் பொதுமக்கள் வரிப்பணத்தை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.[65] இந்த போட்டிகளின் துவக்கவிழாவில் பிரேசிலியத் தலைவர் டில்மா ரூசெஃப் மற்றும் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செப் பிளாட்டர் பேச வந்தபோது அவர்களைப் பேசவிடாது கூக்குரல் எழுப்பினர்.[66] இதன் விளைவாக 2014 உலகக் கோப்பை திறப்புவிழாவில் எந்தவித உரையாற்றலும் இருக்காது என பிஃபா அறிவித்துள்ளது.[67]

இந்த ஆர்பாட்டங்களும் மனக்குறைகளும் பிரேசில் அரசின் பொருளியல் மேலாண்மையை எதிர்த்து எழுந்த பரந்த ஆர்பாட்டங்களின் அங்கங்களாகும். பொது போக்குவரத்தில் உயர்த்தப்பட்ட கட்டணங்களும் இவற்றிற்கு காரணமாயின.[65][68] மேலும் கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் மற்ற ஆட்டங்களின்போதும் அரங்கங்களுக்கு வெளியே இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தன.[69][70]

பிளாட்டர் "தங்கள் மனக்குறைகளை வெளிப்படுத்த காற்பந்தை பயன்படுத்தக் கூடாது" எனவும்[71] இந்த விளையாட்டுகளுக்காக செலவிடப்படும் பொதுப்பணம் "உலகக்கோப்பைக்கானது மட்டுமல்ல, வருங்காலத்திற்கானவை" எனவும் கூறினார்.[71] பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் ரூசெஃப் கூறினார்: "இந்த விளையாட்டரங்கங்களுக்காக அரசு செலவழித்த பணம் ஓர் நிதி முதலீடு; இவற்றைப் பயன்படுத்தும் பின்னாள் அரசுகளும் நிறுவனங்களும் செலுத்தும் கட்டணங்களால் இது முறையே மீட்கப்படும்".[72]

விளையாட்டரங்கினுள் அத்துமீறல்

சூன் 18 அன்று எசுப்பானியாவிற்கும் சிலிக்கும் நடந்த பி குழு ஆட்டத்தின்போது 100 சிலியின் ஆதரவாளர்கள் மரக்கானா விளையாட்டரங்கதினுள் அத்துமீறி உட்புகுந்தார்கள். ஒருவர் உடல்நலக்கேடுடன் இருப்பதாக நடித்து காவலரின் கவனத்தை திசை திருப்ப, மற்றுவர்கள் இரு தடுப்புச் சுவர்களை உடைத்தும் ஊடக மையத்தின் கண்ணாடிக் கதவை உடைத்தும் விளையாட்டரங்கினுள் நுழைந்தார்கள். முன்னதாக சூன் 15 அன்றும் இத்தகைய அத்துமீறலை அர்கெந்தீனர்கள் எஃப் குழு ஆட்ட தினத்தன்று நடத்தினர்.[73][74]

லூயிசு சுவாரெசு கடி நிகழ்வு

2014 உலகக்கோப்பை போட்டிகளில் டி குழுவில் உருகுவைக்கும் இத்தாலிக்குமான இறுதியாட்டத்தின் 79வது நிமிடத்தில் உருகுவையின் ஆட்டக்காரர் லூயிசு சுவாரெசு இத்தாலிய ஆட்டக்காரர் ஜியார்ஜியோ சில்லினியின் இடது தோள்பட்டைக் கடித்தார்; உடனேயே செல்லினி ஆட்டநடுவருக்கு தமது கடிக் காயத்தைக் காண்பித்தார். இத்தாலிக்கு தடங்கலில்லா உதை வழங்கப்பட்டபோதும் அப்போது சுவாரெசிற்கு எந்த தண்டனைச் சீட்டும் வழங்கப்படவில்லை.[75] இத்தாலிய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டிருக்கையில் உருகுவைக்கு கோண உதை வாய்ப்பு கிட்டியது. இதில் உருகுவையின் டியாகோ கோடின் கோலடித்து ஆட்டத்தை உருகுவை 1-0இல் வென்றது. இதனால் டி குழுவில் இரண்டாமிடத்தை எட்டி அடுத்த நிலைக்கு தகுதி பெற்றது. ஆட்டத்திற்குப் பின்னர் சுவாரெசு "செல்லினியின் தோள் மீது தொடர்பு ஏற்பட்டதாகவும் வேறேதும் இல்லை எனவும்" "இவை நிகழ்வது இயல்பே" என்றும் கூறினார். இவ்வாறு ஓர் எதிராளியைக் கடிப்பது சுவாரெசிற்கு மூன்றாம் முறையாகும்.[75][76][77] சூன் 26 அன்று பிஃபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சுவாரெசை ஒன்பது பன்னாட்டு ஆட்டங்களிலில் பங்கேற்பதை உடனடியாகத் தடை செய்தது. இதனால் உலகக்கோப்பையில் மேலும் பங்கேற்க இயலாது போயிற்று. மேலும் காற்பந்து தொடர்புடைய, விளையாட்டரங்கினுள் நுழைவது உட்பட, எந்தவொரு செயற்பாட்டிலும் நான்கு மாதங்கள் அவர் பங்கேற்க தடை விதித்தது. இக்குழு அபராதத் தொகையாகவும் சுவிசு பிராங்க்100,000 (ஏறத்தாழ. US$112,000 அல்லது £65,700) விதித்தது.[78] இந்தத் தீர்ப்பு அவர் கழக மாற்றலுக்கு இடையூறாக இருக்காது.[79] இந்தத் தீர்ப்பை எதிர்த்து உருகுவை கால்பந்துச் சங்கம் (AUF) மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது.[80][81]

நெய்மார் எலும்பு முறிவு

கொலம்பியாவுடனான காலிறுதிப் போட்டியில் பந்தைத் தடுக்க முயலும்போது நெய்மாரின் முதுகில் பின்னாலிருந்து கொலம்பிய ஆட்டக்காரர் யுவான் கேமிலோ சுனிகா காலால் முட்டினார்; இதனால் காயமடைந்த நெய்மாரை தூக்குப் படுக்கையில் களத்தை விட்டு எடுத்துவர வேண்டியதாயிற்று. மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு நெய்மாரின் முதுகுத்தண்டில் ஓர் முள்ளெலும்பு உடைந்துள்ளதாகவும் அதனால் அவரால் மேற்கொண்டு உலகக்கோப்பை ஆட்டங்களில் பங்கேற்க இயலாது என்றும் அறிவிக்கப்பட்டது.[82]

மேற்சான்றுகள்

  1. உலகக்கோப்பை வரலாற்றிலேயே பிரேசில் அணி இட்ட முதல் சுயகோல்[40]
  2. மீயுயர் வரையறைத் தொலைக்காட்சியாக பிடிக்கப்படவிருக்கும் ஆட்டங்கள்:பதின்மச் சுற்றில் ஒன்று (28 சூன்), காலிறுதியில் ஒன்று (4 சூலை) மற்றும் இறுதியாட்டம்
  1. "Players – Top goals". FIFA.com.
  2. "Messi wins golden ball.".
  3. "Paul Pogba wins young player award.".
  4. "Manuel Neuer wins golden glove award.".
  5. "FIFA launch GLT tender for Brazil 2013/14". FIFA.com (19 February 2013).
  6. "If the World Cup started tomorrow". ESPN (12 June 2013).
  7. "If the World Cup started tomorrow". ESPN (12 சூன் 2013).
  8. "2014 FIFA World Cup to be held in South America". FIFA.com (7 மார்ச் 2003).
  9. "Rotation ends in 2018". FIFA.com (29 அக்டோபர் 2007).
  10. "Argentina, Brazil and Colombia want 2014 World Cup". People's Daily (19 சனவரி 2003).
  11. "Brazil set to host World Cup". BBC. 18 மார்ச் 2003. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/2858989.stm.
  12. "Colombia bids for 2014 World Cup". BBC. 17 சூலை 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/5187170.stm.
  13. "Colombia join 2014 World Cup race". BBC. 19 திசம்பர் 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/6191981.stm.
  14. "Brazil to make 2014 World Cup bid". BBC. 13 திசம்பர் 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/6173775.stm.
  15. "Brazil confirms bid – Colombia withdraws". Fifa.com (13 ஏப்ரல் 2007).
  16. "Brazil confirmed as 2014 hosts". FIFA (30 அக்டோபர் 2007). மூல முகவரியிலிருந்து 31 அக்டோபர் 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 அக்டோபர் 2007.
  17. "Financial report presented, Brazil 2014 slots & host countries decided". Fifa.com (3 மார்ச் 2011).
  18. "Rio draw pits Spain against France". FIFA.com (30 சூலை 2011). பார்த்த நாள் 28 மார்ச் 2013.
  19. "Draw for World Cup qualifiers at Marina da Glória in Rio" (Portuguese). globoesporte.com (8 திசம்பர் 2010). பார்த்த நாள் 21 சனவரி 2011.
  20. "Barbarez: The World Cup is priceless". Fifa.com (16 அக்டோபர் 2013).
  21. "Portugal climbs to 5th in FIFA Ranking". Goal.com (28 நவம்பர் 2013).
  22. "FIFA/Coca-Cola Rankings". FIFA.com (Fédération Internationale de Football Association) (5 June 2014). பார்த்த நாள் 11 June 2014.
  23. "Estádio Nacional Mané Garrincha". FIFA.com. பார்த்த நாள் 14 June 2013.
  24. "Estadio do Maracana – Rio De Janeiro". fifa.com. பார்த்த நாள் 2 June 2013.
  25. "Fifa admite adotar nome Mané Garrincha em estádio de Brasília na Copa". Copadomundo.uol.com.br (6 May 2013). பார்த்த நாள் 20 June 2013.
  26. "Estadio Castelao – Fortaleza". Fifa.com. பார்த்த நாள் 20 June 2013.
  27. "Site oficial do Sport Club Internacional – Projeto Gigante Para Sempre". Internacional.com.br. பார்த்த நாள் 25 May 2013.
  28. "Arena Fonte Nova – Salvador Stadium". Fifa.com (28 January 1951). பார்த்த நாள் 20 June 2013.
  29. "Arena da Baixada's capacity". Globoesporte.globo.com (30 July 2013). பார்த்த நாள் 16 September 2013.
  30. "Open list of prospective referees & assistant referees for the 2014 FIFA World Cup" (PDF). FIFA (7 March 2013).
  31. "Referee trios and support duos appointed for 2014 FIFA World Cup". FIFA (15 January 2014).
  32. "Referees & Assistant referees for the 2014 FIFA World Cup". FIFA (14 January 2014).
  33. "England v Germany: Frank Lampard denied goal by Uruguayan linesman – in pictures". The Daily Telegraph. 27 June 2010. http://www.telegraph.co.uk/sport/football/world-cup/pictures/7857609/England-v-Germany-Frank-Lampard-denied-goal-by-Uruguayan-linesman-in-pictures.html.
  34. "World Cup 2010: Blatter apologises for disallowed goal". BBC Sport. 29 June 2010. http://news.bbc.co.uk/sport1/hi/football/world_cup_2010/8771294.stm.
  35. "IFAB gives the green light to goal-line technology". FIFA (5 July 2012).
  36. "GoalControl confirmed as goal-line technology provider for Brazil 2014". FIFA (10 October 2013).
  37. http://www.bbc.co.uk/tamil/sport/2014/06/140615_wc2014_france_honduras.shtml
  38. "Vanishing spray set for World Cup". eurosport.com (21 November 2013).
  39. "Regulations – FIFA World Cup Brazil 2014". FIFA.
  40. "Neymar fires Brazil to comeback victory". FIFA. பார்த்த நாள் 12 June 2014.
  41. "Match report – Brazil–Croatia" (PDF). FIFA.com (12 June 2014). பார்த்த நாள் 12 June 2014.
  42. "Referee designations for matches 1-4". fifa.com (2014-06-10).
  43. "adidas Golden Boot". FIFA.com. பார்த்த நாள் 13 சூன் 2014.
  44. "2014 Soccer World Cup Final Standings". thesoccerworldcups.com. பார்த்த நாள் 27 June 2014.
  45. "World Cup money pot increased to $576m". reuters.com. பார்த்த நாள் 25 April 2014.
  46. "Re-live the Brazil 2014 Emblem Launch". FIFA (7 July 2010).
  47. Shanahan, Mark; Goldstein, Meredith (10 July 2010). "Gisele picks logo, shops with Tom". Boston Globe. Archived from the original on 11 July 2010. http://www.boston.com/ae/celebrity/articles/2010/07/10/gisele_picks_logo_shops_with_tom/. பார்த்த நாள்: 11 July 2010.
  48. "Designer critica logo da Copa 2014: "É uma porcaria" – Terra – Esportes". deportesus.terra.com.br (9 July 2010). மூல முகவரியிலிருந்து 9 July 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 December 2013.
  49. "2014 Ambassadors unveil Official Poster". FIFA (30 January 2013).
  50. "Brazil 2014 slogan presented: All in one rhythm™ / Juntos num só ritmo". FIFA (30 May 2012).
  51. Rusu, Dragos (24 January 2014). "Pitbull's "We Are One" Collaboration Named as Official 2014 World Cup song". Softpedia. http://news.softpedia.com/news/Pitbull-s-We-Are-One-Collaboration-Named-as-Official-2014-World-Cup-Anthem-420390.shtml. பார்த்த நாள்: 24 January 2014.
  52. "Music hopefuls invited to add to the rhythm of the 2014 FIFA World Cup". FIFA (15 November 2013).
  53. "ricky-martin's World Cup Song Written By Elijah King; Salaam Remi to Produce". பில்போர்டு (10 February 2014). பார்த்த நாள் 11 February 2014.
  54. Kwesi, Marcus (2014-03-24). "Shakira Releases ‘La La La,’ Official 2014 World Cup Song (Video) | World Cup". NESN.com. பார்த்த நாள் 2014-05-11.
  55. "Listen: Avicii, Carlos Santana, Wyclef Jean & Alexandre Pires Unite on 2014 World Cup Anthem, ‘Dar um Jeito (We Will Find a Way)’ «". Radio.com (2014-04-29). பார்த்த நாள் 2014-05-11.
  56. "adidas Brazuca – Name of Official Match Ball decided by Brazilian fans". FIFA. 2 September 2012. http://www.fifa.com/worldcup/news/newsid=1693277/. பார்த்த நாள்: 3 September 2012.
  57. "Host Broadcasting". FIFA. பார்த்த நாள் 4 December 2013.
  58. "Sony Professional awarded 2014 FIFA World Cup Broadcast Production Contract". Live-production.tv (13 September 2012).
  59. "Sony's astonishing World Cup statistics". RedShark News (22 May 2014).
  60. "Sony and FIFA announce further 4K coverage of the 2014 FIFA World Cup". FIFA (3 April 2014).
  61. "2014 FIFA World Cup BrazilTM Media Rights Licensees". FIFA. 7 November 2013. http://www.fifa.com/mm/document/affederation/tv/01/47/76/00/2014fifaworldcupbrazil%28tm%29mediarightslicenseelist110414_neutral.pdf.
  62. "FIFA revenue estimated to be 4 billion dollars at the close of the 2014 World Cup". CONMEBOL.com (17 May 2013).
  63. "International Broadcast Centre to be hosted in Rio de Janeiro". FIFA. 27 May 2011. http://www.fifa.com/worldcup/media/newsid=1442394/.
  64. "Nerve centre for World Cup TV production opens in Rio". FIFA. 2 June 2014. http://www.fifa.com/worldcup/news/y=2014/m=6/news=nerve-centre-for-world-cup-tv-production-opens-in-rio-2353342.html.
  65. ராய்ட்டர்ஸ் (15 June 2013). "Brazil Beats Japan, Protests Spoil Confederations Cup Opening Day". வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா. பிரசிலியா: ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு. பார்த்த நாள் 16 June 2013.
  66. Peck, Brooks (29 May 2013). "Sepp Blatter, Brazil president Dilma booed at Confederations Cup opening ceremony". Sports.yahoo.com. பார்த்த நாள் 16 June 2013.
  67. "Fifa scraps speeches to avoid protest". BBC (12 March 2014).
  68. "Brazil despair: Protests over transport, inflation gain intl support (PHOTOS) — RT News". Rt.com. பார்த்த நாள் 18 June 2013.
  69. "Confed Cup protests continue". ESPN (17 June 2013).
  70. "Police clashes at start of Brazil Confederations Cup final". BBC (1 July 2013).
  71. "Brazil protests continue". ESPN (19 June 2013).
  72. "Brazil president Rousseff defends public spending on World Cup as protests continue". Daily Mail (22 June 2013).
  73. Wilson, Jonathan (18 June 2014). "World Cup 2014: Chile fans invade Maracanã before Spain game.". The Guardian. http://www.theguardian.com/football/2014/jun/18/world-cup-2014-chile-fans-maracana-spain.
  74. "World Cup Chile Fans Storm Rio Stadium And 85 Detained".
  75. Borden, Sam (24 June 2014). "Apparent Bite by Luis Suárez Mars Uruguay’s Victory Over Italy". The New York Times. http://www.nytimes.com/2014/06/25/sports/worldcup/apparent-bite-by-luis-suarez-mars-uruguays-victory-over-italy.html. பார்த்த நாள்: 24 June 2014.
  76. "Suarez claims 'these things happen' in biting row". ஈஎஸ்பிஎன். பார்த்த நாள் 27 June 2014.
  77. Ogden, Mark (24 June 2014). "Italy 0 Uruguay 1". BBC Sport. பார்த்த நாள் 25 June 2014.
  78. "Luis Suárez suspended for nine matches and banned for four months from any football-related activity". பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (26 June 2014). பார்த்த நாள் 26 June 2014.
  79. "Liverpool keep counsel over Suarez ban reaction". ITV News (26 June 2014). பார்த்த நாள் 26 June 2014.
  80. "Uruguay to appeal Suarez ban for biting". Deutsche Welle. 26 June 2014. http://www.dw.de/uruguay-to-appeal-suarez-ban-for-biting/a-17739744. பார்த்த நாள்: 26 June 2014.
  81. Castaldi, Malena. "Uruguay to appeal Suarez ban, calls it excessive | Reuters". Uk.reuters.com. பார்த்த நாள் 26 June 2014.
  82. "Neymar: Injured Brazil forward ruled out of World Cup". BBC Sport. 4 July 2014. http://www.bbc.com/sport/0/football/28173132. பார்த்த நாள்: 5 July 2014.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.