என்னர் வலென்சியா

என்னர் ரெம்பெர்டோ வலென்சியா இலாசுத்ரா (Enner Remberto Valencia Lastra, ஏப்ரல் 11, 1989) எக்குவடோரைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் தற்போது எக்குவடோர் தேசிய அணியில் பக்கவாட்டு முன்னணி வீரராக (தாக்குபவராக) விளையாடி வருகிறார். லிகா எம் எக்சு கூட்டிணைவில் பச்சுகா காற்பந்துக் கழகத்திற்காக ஆடி வருகிறார்.[1]

என்னர் வலென்சியா
சுய விவரம்
முழுப்பெயர்என்னர் ரெம்பெர்டோ
வலென்சியா இலாசுத்ரா
பிறந்த தேதிஏப்ரல் 11, 1989 (1989-04-11)
பிறந்த இடம்சான் லொரென்சோ,
எசுமெரால்தாசு மாநிலம்,
எக்குவடோர்
உயரம்1.74 m (5 ft 8 12 in)
ஆடும் நிலைமுன்னணி/நடுக்கள வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்பச்சுகா
எண்14
இளநிலை வாழ்வழி
2005–2008கரீபெ ஜூனியர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2008–2013எமெலெக்131(27)
2014–பச்சுகா23(18)
தேசிய அணி
2012–எக்குவடோர்12(7)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 15 மே 2014.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 20 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

பன்னாட்டு விளையாட்டு

என்னர் தமது தேசிய அணிக்காக பெப்ரவரி 12, 2012இல் ஹொண்டுராசிற்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் முதன்முதலாக ஆடினார்.

கிறிஸ்டியன் பெனிடெசின் அகால மரணத்தை அடுத்து, பக்கவாட்டு முன்னணி வீரராக ஆடிவந்த என்னரை எக்குவடோரின் பயிற்றுனர் ரீனால்டோ ரூடா தாக்கும் முன்னணி வீரராகப் பயன்படுத்தலானார்.

2014 உலகக்கோப்பையில் சுவிட்சர்லாந்துடனான தங்கள் முதல் ஆட்டத்தில் எக்குவடோர் 2-1 என்ற கணக்கில் தோற்றது; இந்த ஆட்டத்தில் எக்குவடோரின் ஒரே கோலை தலையால் முட்டி என்னர் அடித்தார்.[2] இந்தப் போட்டியின் அடுத்த ஆட்டத்தில் எக்குவடோர் ஹொண்டுராசை 2-1 கணக்கில் வென்றது; இந்த ஆட்டத்தில் 34வது நிமிடத்திலும் 66வது நிமிடத்திலும் கோலடித்து வெற்றி பெற உதவினார்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.