ஆத்திரேலியா தேசிய காற்பந்து அணி

ஆத்திரேலியத் தேசியக் கால்பந்து அணி (Australia national association football team) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஆத்திரேலியாவில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (FFA) மேலாண்மை செய்கின்றது. இது 2006இல் ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து விலகிய பின்னர் தற்போது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பிலும் வட்டார ஆசியான் கால்பந்துக் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்து வருகின்றது. இந்த அணியை இரசிகர்கள் சாக்கரூசு எனச் செல்லமாக அழைக்கின்றனர்.

ஆத்திரேலியா
அடைபெயர்சாக்கரூசு
கூட்டமைப்புஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புAFF (South-East Asia)
கண்ட கூட்டமைப்புஆ.கா.கூ (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்ஆங்கெ போசுடெகோக்லு
அணித் தலைவர்லூகாசு நீல்
Most capsமார்க்கு இசுவார்சர் (109)
அதிகபட்ச கோல் அடித்தவர்டாமியன் மோரி & டிம் கஹில் (29)
பீஃபா குறியீடுAUS
பீஃபா தரவரிசை56 2
அதிகபட்ச பிஃபா தரவரிசை14 (செப்டம்பர் 2009)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை92 (சூன் 2000)
எலோ தரவரிசை32
அதிகபட்ச எலோ9 (நவம்பர் 2001)
குறைந்தபட்ச எலோ75 (நவம்பர் 1965)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 நியூசிலாந்து 3–1 ஆத்திரேலியா 
(துனெதுன், நியூசிலாந்து; 17 சூன் 1922)
பெருத்த வெற்றி
 ஆத்திரேலியா 31–0 அமெரிக்க சமோவா 
(கொஃப்சு ஆர்பர், ஆத்திரேலியா; 11 ஏப்ரல் 2001)
(World Record for international matches)[1]
பெருத்த தோல்வி
 ஆத்திரேலியா 0–8 தென்னாப்பிரிக்கா 
(அடிலெயிட், ஆத்திரேலியா; 17 செப்டம்பர் 1955)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1974 இல்)
சிறந்த முடிவுபதினாறவர் சுற்று, 2006
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2007 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 2011
ஓசியானியா நாடுகள் கோப்பை
பங்கேற்புகள்6 (முதற்தடவையாக 1980 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1980, 1996,
2000, 2004
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1997 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 1997

ஆத்திரேலியா ஓசியானியா நாடுகள் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டில் ஆண்டின் ஏஃப்சி தேசிய அணி விருது பெற்றுள்ளது. உலகக்கோப்பைகளில் மூன்றுமுறை, 1974, 2006 மற்றும் 2010 ஆண்டுகளில், விளையாடியுள்ளது. 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் மூன்று முறை ஆடியுள்ளது.

மேற்சான்றுகள்

  1. "Aussie footballers smash world record". BBC Sport. 11 ஏப்ரல் 2001. http://news.bbc.co.uk/sport1/hi/football/world_cup_2002/1271854.stm. பார்த்த நாள்: 10 சூன் 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.