ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு

ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (Asian Football Federation-AFC) என்பது ஆசியாவில் சங்க கால்பந்துப் போட்டிகளை நிர்வகிக்கும் அமைப்பாகும். இதில் 46 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன, அவற்றுள் பெரும்பான்மையான நாடுகள் ஆசியாவில் இருக்கின்றன. ஆசிய மற்றும் ஐரோப்பிய எல்லையிலிருக்கும் அனைத்து எல்லைநாடுகளும் (அசர்பெய்ஜான், அர்மேனியா, ஜார்ஜியா, கசகஸ்தான், ரசியா, துருக்கி போன்றவை) யூஈஎஃப்ஏவில் உறுப்புநாடுகளாக உள்ளன. இசுரேல் முழுவதுமாக ஆசிய கண்டத்தில் அமைந்திருந்தாலும் யூஈஎஃப்ஏவில் உறுப்புநாடாக உள்ளது. முன்னர் ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்புநாடாகவிருந்த ஆஸ்திரேலியா 2006-லிருந்து ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்புநாடாக உள்ளது. அதைப்போலவே குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் ஆகியவையும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன.

ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு
சுருக்கம்ஏஎஃப்சி (AFC)
குறிக்கோள் உரைஆசியாவே எதிர்காலம் (The Future is Asia)
உருவாக்கம்8 மே 1954 (1954-05-08)
வகைவிளையாட்டு அமைப்பு
தலைமையகம் கோலாலம்பூர், மலேசியா
சேவைப் பகுதிஆசியா
உறுப்பினர்கள்
47 member associations
Acting President
Zhang Jilong
துணைத் தலைவர்
Moya Dodd[1]
பொதுச் செயலர்
Alex Soosay[2]
தாய் அமைப்புஃபிஃபா
வலைத்தளம்www.The-AFC.com

மே 8, 1954-இல் மணிலாவில், பிலிப்பைன்சு, இக்கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இது ஃபிஃபாவின் ஆறு கண்ட கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இதன் தலைமையகம் புகித் ஜலால், கோலாலம்பூர், மலேசியாவில் உள்ளது. இவ்வமைப்பின் தற்போதைய தலைவர் சீனாவைச் சேர்ந்த ழாங் சிலாங் என்பவராவார்.

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.