1950 உலகக்கோப்பை கால்பந்து

1950 ஃபிஃபா உலகக்கோப்பை, 1950ஆம் ஆண்டு சூன் 24 முதல் சூலை 16 வரை பிரேசிலில் நடைபெற்ற நான்காவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியாகும். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாம் உலகப் போரால் 1942இலும் 1946இலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. எனவே 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டியாக இது அமைந்தது. இந்தப் போட்டியில் உருகுவே கால்பந்தாட்ட அணி இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் போட்டி நடத்திய பிரேசில் நாட்டு அணியை வென்று கோப்பையை கைப்பற்றிது. இந்தப் போட்டியின்போது தான் உலகக்கோப்பை போட்டி வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பைக்கு ஃபிஃபா தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றியதைப் பாராட்டும் விதமாக ஜூல்சு ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.

1950 ஃபிஃபா உலகக்கோப்பை
IV Campeonato Mundial de Futebol[1]
1950 FIFA World Cup official logo
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு பிரேசில்
நாட்கள்24 சூன் – 16 சூலை
அணிகள்13 (3 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்6 (6 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் உருகுவை (2-ஆம் தடவை)
இரண்டாம் இடம் பிரேசில்
மூன்றாம் இடம் சுவீடன்
நான்காம் இடம் எசுப்பானியா
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்22
எடுக்கப்பட்ட கோல்கள்88 (4 /ஆட்டம்)
பார்வையாளர்கள்10,43,500 (47,432/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) ஆடெமிர் (8 கோல்கள்)
1938
1954

பங்கேற்பாளர்கள்

ஐரோப்பா

வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா

தென் அமெரிக்கா

முடிவுகள்

சுற்று 1

குழு A

இடம்அணிபிரேயூகோசுவிமெக்வெதோஅடித்த கோல்எதிரான கோல்புள்ளிகள்குறிப்பு
1பிரேசில்-2-02-24-03210825சுற்று 2
2யுகோசுலாவியா0-2-3-04-13201734
3சுவிட்சர்லாந்து2-20-3-2-13111463
4மெக்சிக்கோ0-41-41-2-30032100

குழு B

இடம்Teamஎசுஇங்சிலிஐ.அவெதோஅடித்த கோல்எதிரான கோல்புள்ளிகள்குறிப்பு
1எசுப்பானியா-1-02-03-13300616சுற்று 2
2இங்கிலாந்து0-1-2-00-13102222
3சிலி0-20-2-5-23102562
4அமெரிக்க ஐக்கிய நாடு1-31-02-5-3102482

குழு C

இடம்அணிசுவீஇதாபராவெதோஅடித்த கோல்எதிரான கோல்புள்ளிகள்குறிப்பு
1சுவீடன்-3-22-22110543சுற்று 2
2இத்தாலி2-3-2-02101432
3பரகுவை2-20-2-2011241

குழு D

இடம்அணிஉருபோலிவெதோஅடித்த கோல்எதிரான கோல்புள்ளிகள்குறிப்பு
1உருகுவை-8-01100802சுற்று 2
2பொலிவியா0-8-1001080

சுற்று 2

இடம்அணிஉருபிரேசுவீஎசுவெதோஅடித்த கோல்எதிரான கோல்புள்ளிகள்குறிப்பு
1உருகுவை-2-13-22-23210755போட்டியில் வெற்றி
2பிரேசில்1-2-7-16-132011444
3சுவீடன்2-31-7-3-131026112
4எசுப்பானியா2-21-61-3-30124111

மேற்சான்றுகள்

  1. போர்த்துக்கேய உச்சரிப்பில் [ˈkwaʁtu kɐ̃pjoˈnatu mũdʒiˈaw dʒi ˌfutʃiˈbɔw], தற்கால பிரேசிலிய உச்சரிப்பில்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.