மடோ குரோசோ
மடோ குரோசோ (Mato Grosso,போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈmatu ˈɡɾosu] – பொருள். "அடர்த்தியான புதர்கள்") பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும்.நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது.[2]
மடோ குரோசோ மாநிலம் | |||
---|---|---|---|
மாநிலம் | |||
| |||
![]() பிரேசிலில் மடோ குரோசோவின் அமைவிடம் | |||
நாடு | ![]() | ||
தலைநகரும் பெரிய நகரும் | குய்யாபா | ||
அரசு | |||
• ஆளுநர் | சில்வால் டா குன்ஹா பர்போசா | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | [ | ||
பரப்பளவு தரவரிசை | 3rd | ||
மக்கள்தொகை (2012)[1] | |||
• மொத்தம் | 3 | ||
• தரவரிசை | 19th | ||
• அடர்த்தி | 3.4 | ||
• அடர்த்தி தரவரிசை | 25th | ||
இனங்கள் | Mato-grossense | ||
GDP | |||
• Year | 2006 estimate | ||
• Total | R$ 35,284,000,000 (15th) | ||
• Per capita | R$ 12,350 (8th) | ||
HDI | |||
• Year | 2005 | ||
• பகுப்பு | 0.801 – medium (11th) | ||
நேர வலயம் | BRT-1 (ஒசநே-4) | ||
• கோடை (பசேநே) | BRST-1 (ஒசநே-3) | ||
அஞ்சல் குறியீடு | 78000-000 to 78890-000 | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | BR-MT |
இதனைச் சூழ்ந்துள்ள மாநிலங்களாக, (மேற்கிலிருந்து வலஞ்சுழியாக) ரோன்டோனியா, அமேசோனாசு, பாரா, தோகான்ச்சீசு, கோயாசு மற்றும் மடோ குரோசோ டொ சுல். தென்மேற்கு எல்லையில் பொலிவியா நாடுள்ளது. சமவெளிப் பிரதேசமான இந்த மாநிலத்தில் அமேசான் மழைக்காடுகள், செர்ராது புன்னிலங்கள், பந்தனால் சதுப்புக் காடுகள் அமைந்துள்ளன. மாநிலத்தின் 40% பரப்பளவு திறந்தவெளித் தாவரங்களால் நிறைந்துள்ளன. இங்குள்ள சப்படா டோசு குய்மரேசு தேசியப் பூங்காவில் பல குகைகளும் அருவிகளும் நடைத்தளங்களும் உள்ளதால் அது பெரும் சுற்றுலா மையமாக உள்ளது. வடக்கில் அமேசான் காடுகள் அமைந்துள்ளன; மாநிலத்தின் பாதிக்கும் மேலே உயிரியற் பல்வகைமையால் நிறைந்துள்ளது. சிங்கு தேசியப் பூங்காவும் அராகுயா ஆறும் இங்குள்ளன. தெற்கிலுள்ள பந்தனால் உலகின் மிகப் பெரும் தண்ணீர்நிலமாக உள்ளது. இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் நீர்வாழ் பறவை இனங்களின் வாழ்விடமாக உள்ளது.