புன்னிலம்
புவியலில் புல்நிலம் அல்லது முல்லை நிலக் காடு[1] (Savanna அல்லது Savannah, சவன்னா) என்பது வெப்பப் புல்வெளிச் சூழல் மண்டலத்தைக் குறிக்கிறது. மிகுந்த இடைவெளி கொண்டு விரவிக் காணப்படும் மரங்களும், புல் படர்ந்த தரையும் இந்நிலத்தின் தகைவுகள். தாவர வகைகள் நெருக்கமற்று உள்ளதால் சூரிய ஒளி, நிலத்தில் வெகுவாகப் படர்கிறது. காலம் சார் நீர் இருப்பும், குறிப்பிட்ட சிறு கால அளவில் கிடைக்கும் மழையும் இந்நிலத்தின் தகைவுகளே. உலகின் 2௦% நிலப்பரப்பு புல்நிலமாகும். உலகின் மிகப்பரந்த புல்நிலம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் சகாராப் பாலைநிலத்துக்குத் தெற்கே உள்ளது. நகரமயமாக்கலும், கட்டற்ற தொழில்மயமாக்கலும் இயற்கையான புல்நிலச் சூழல் மண்டலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.[2][3]

புர்கினா பாசோவில் உள்ள அக்காசியா புல்நிலம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- கு.வி.கிருஷ்ணமூர்த்தி (2018 நவம்பர் 10). "அழிந்துபோன முல்லைக் காடுகள்!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 11 நவம்பர் 2018.
- Savannah grassland
- TROPICAL GRASSLANDS (SAVANNAS)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.