குய்யாபா

குய்யாபா (Cuiabá) பிரேசிலின் மாதொ குரோசொ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது தென் அமெரிக்காவின் சிகச்சரியான நடுமையத்தில் அமைந்துள்ளது. இதுவும் அடுத்துள்ள நகரமான வார்சியா கிராண்டும் இணைந்து மாநிலத்தின் பெருநகரப் பகுதியாக அமைந்துள்ளன. [2]

குய்யாபா
நகராட்சி
குய்யாபா நகராட்சி

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): சிடாடெ வெர்டெ ("பசுமை நகரம்")
குறிக்கோளுரை: கேபிடல் டா அமேசோனியா மெரிடியோனல் (தென் அமேசானின் தலைநகரம்)

மாதொ குரோசொவில் அமைவிடம்
நாடு பிரேசில்
மண்டலம்நடு-மேற்கு
மாநிலம் மாதொ குரோசொ
நிறுவப்பட்டதுசனவரி 1, 1727[1]
அரசு
  மேயர்பிரான்சிஸ்கோ பெல்லோ கலின்டோ பில்ஹோ (பிரேசிலிய சோசலிச சனநாயக கட்சி)
பரப்பளவு
  மொத்தம்3
ஏற்றம்165
மக்கள்தொகை (2010)
  மொத்தம்9,42,861
  அடர்த்தி153.4
நேர வலயம்UTC-4 (ஒசநே-4)
  கோடை (பசேநே)UTC-3 (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு78000-000
தொலைபேசி குறியீடு+55 65
வாழ்வோர் பெயர்குய்யாபனோ
இணையதளம்குய்யாபா, மாதொ குரோசொ

1719இல் தங்க வேட்டையின்போது நிறுவப்பட்ட இந்த நகரம்,[3] மாதொ குரோசொ மாநிலத் தலைநகரமாக 1818 முதல் இருந்து வருகிறது. கால்நடை மற்றும் வேளாண் பொருட்களுக்கான வணிக மையமாக திகழ்கிறது. குய்யாபாவின் தனிமைச் சூழலாலும் தொழிலாளர் குறைவாலும் பொருளியல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஆற்றுப்படகுகள் இன்னமும் முதன்மையான போக்குவரத்தாக விளங்குகிறது.[4]

அனல்மின் மற்றும் புனல்மின் நிலையங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன; 2000இல் பொலிவியாவிலிருந்து இயற்கை வளிமக் குழாய்கள் இட்டபின்னர் இவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மாதொ குரோசொ கூட்டரசு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய காற்பந்து மைதானம் அரீனா பன்டனல் இங்குள்ளது.[5]

இங்குள்ள பல அருங்காட்சியகங்கள் ஐரோப்பிய, ஆபிரிக்க, உள்நாட்டு அமெரிக்க பண்பாடுகளின் தாக்கத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த நகரம் தனது சமையல்பாணி, நடனம், இசை மற்றும் கைவினைப் பொருட்களுக்காக பெயர்பெற்றது. "அமேசானுக்கான தெற்கு வாயில்" என அறியப்படும் குய்யாபா வெப்பமான அயனமண்டல வானிலையைக் கொண்டுள்ளது. 2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக உள்ளது.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.