பன்டனல் அரங்கம்
பன்டனல் அரங்கம் அல்லது அரீனா பன்டனல் (Arena Pantanal) பிரேசிலின் குய்யாபா நகரில் கட்டமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரங்கமாகும்.இது முன்பிருந்த ஓசே பிராகெல்லி விளையாட்டரங்கத்தை இடித்துக் கட்டப்பட்டு வருகிறது. பன்னாட்டு காற்பந்து கூட்டமைப்பு அவையின் பரிந்துரைகளுக்கேற்ப புதிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் நான்கு ஆட்டங்கள் நடக்க உள்ளன. இதன் கொள்ளளவு 42,968ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவு மதிப்பீடு அமெரிக்க டாலர் 518.9 மில்லியன்களாகும்.
பன்டனல் அரங்கம் | |
---|---|
![]() கலைஞரின் கற்பனையில் | |
முழு பெயர் | ஆளுநர் ஓசே பிராகெல்லி பன்னோக்கு அரங்கம் Arena Multiuso Governador José Fragelli |
இடம் | குய்யாபா, பிரேசில் |
எழும்பச்செயல் ஆரம்பம் | மே 2010 |
திறவு | பெப்ரவரி 25, 2014 (திட்டமிடல்) |
உரிமையாளர் | |
கட்டிட விலை | R$ 420 மில்லியன் (USD $ 210 மில்லியன்) |
குத்தகை அணி(கள்) | மிக்சுடோ விளையாட்டுக் கழகம்]] 2014 உலகக்கோப்பை காற்பந்து |
அமரக்கூடிய பேர் | 43,500 |
2014 உலகக்கோப்பை காற்பந்து
நாள் | நேரம் (ஒ.அ.நே-04) | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
சூன் 13, 2014 | 18:00 | ![]() | ஆட்டம் 4 | ![]() | குழு பி | |
சூன் 17, 2014 | 18:00 | ![]() | ஆட்டம் 16 | ![]() | குழு எச் | |
சூன் 21, 2014 | 18:00 | ![]() | ஆட்டம் 28 | ![]() | குழு எப் | |
சூன் 24, 2014 | 16:00 | ![]() | ஆட்டம் 37 | ![]() | குழு சி |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.