மணற்குன்று அரங்கம்

மணற்குன்று அரங்கம் அல்லது டுனாசு அரங்கம் ("Arena das Dunas") பிரேசிலின் நத்தால் நகரில் காற்பந்தாட்டங்களுக்கெனவே போப்புலசு நிறுவனத்தின்[2] முன்னணி விளையாட்டிட வடிவமைப்பாளர் கிறித்தோபர் லீ வடிவமைத்துள்ள[3] விளையாட்டரங்கமாகும். சனவரி 2011[4] முதல் கட்டப்பட்டு வரும் இந்த விளையாட்டரங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டங்களை ஏற்று நடத்தவிருக்கிறது. ஏற்கனவே இருந்த மக்காடோவ் விளையாட்டரங்கை இடித்து புதியதாக இது கட்டப்பட்டு வருகிறது.[5]

மணற்குன்று அரங்கம்
Arena das Dunas
முழு பெயர் அரீனா டாசு டுனாசு
இடம் லாகோவா நோவா,
நதால், பிரேசில்
எழும்புச்செயல் முடிவு 2011 - 2014
திறவு 26 சனவரி 2014
உரிமையாளர் பொதுத்துறை-தனியார் கூட்டுறவு
கட்டிட விலை R$ 400 மில்லியன்
கட்டிடக்கலைஞர் போப்புலசு[1]
குத்தகை அணி(கள்) அமெரிக்க காற்பந்துக் கழகம் (RN)
ஏபிசி காற்பந்துக் கழகம்
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 45,000

புதிய அரங்கத்தில் 45,000 பேர் அமரக்கூடும். இந்த வளாகத்திலேயே அங்காடி மையம், வணிக கட்டிடங்கள், பன்னாட்டு தரம் பேணும் விடுதிகள், செயற்கை ஏரி ஆகியன அமைக்கப்படுகின்றன.[6]

2014 உலகக்கோப்பை காற்பந்து

நாள் நேரம் (UTC-03) அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 13, 201413:00 மெக்சிக்கோஆட்டம் 2 கமரூன்குழு ஏ
சூன் 16, 201419:00 கானாஆட்டம் 14 ஐக்கிய அமெரிக்காகுழு ஜி
சூன் 19, 201419:00 சப்பான்ஆட்டம் 22 கிரேக்க நாடுகுழு சி
சூன் 24, 201413:00 இத்தாலிஆட்டம் 39 உருகுவைகுழு டி
மணற்குன்ற அரங்கத்தின் வான்வழிக் காட்சி

மேற்கோள்கள்

  1. architect: Populous
  2. "Christopher Lee, architect of Dunas Stadium and London 2012". பார்த்த நாள் 2010-09-13.
  3. http://tribunadonorte.com.br/noticias/112113.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.