சாவோ பாவுலோ

சாவோ பாவுலோ (São Paulo) São Paulo (/ˌs ˈpl/; போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [sɐ̃w ˈpawlu]  ( listen); Saint Paul) பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரம். இதன் பெருநகரப் பகுதியுடன் சேர்த்து இது உலகின் மிகப் பெரிய நகரப் பகுதிகளுள் ஒன்றாக விளங்குகிறது. இந் நகரம் பிரேசிலின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட சாவோ பாவுலோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். நாட்டின் செல்வம் மிகுந்த நகரமும் இதுவே. இதன் பெயர் போர்த்துக்கேய மொழியில் புனிதர் பால் (Saint Paul) என்பதைக் குறிக்கிறது. சாவோ பாவுலோ, வணிகம், நிதி ஆகிய துறைகளிலும், கலை, பொழுதுபோக்கு என்பவற்றிலும் உலக அளவில் தாக்கத்தைக் கொண்டுள்ளது.

சாவோ பாவுலோ
Município de São Paulo
மாநகரசபை
சாவோ பாவுலோ மாநகரசபை
The Municipality of São Paulo
சாவோ பாவுலோ

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): டெரா டா கரோவா (மழைத்தூரலின் நகரம்),
சம்ப்பா
குறிக்கோளுரை: "நன் டுக்கோர், டூக்கோ"  (இலத்தீன்)
"நான் வழிநடத்தப்படுவதில்லை, வழிநடத்துகிறேன்"

சாவோ பாவுலோ மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
மாநிலம் சாவோ பாவுலோ மாநிலம்
நிறுவப்பட்டதுஜனவரி 25, 1554
அரசு
  மேயர்ஜோவாவோ தோரியா (பிரேசில் சமூக குடியரசுக் கட்சி)
பரப்பளவு
  மாநகரசபை[.989
  Metro8,051
ஏற்றம்760.4
மக்கள்தொகை (2008)
  மாநகரசபை10
  அடர்த்தி7,233
  பெருநகர்22
  பெருநகர் அடர்த்தி2,277
நேர வலயம்UTC-3 (ஒசநே-3)
  கோடை (பசேநே)UTC-2 (ஒசநே-2)
HDI (2014)0.829 – மிக அதிகம்
இணையதளம்City of São Paulo

இந்த நகரம் பல்வேறு அடையாளச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்குள்ள குடிவருவோர் விடுதி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல இலட்சக் கணக்கான குடிவருவோரை வரவேற்றது. நகரின் வணிகப் பகுதியில் அமைந்துள்ள பாலிஸ்ட்டா அவெனியூ நாட்டினதும், லத்தீன் அமெரிக்காவினதும் மிக முக்கியமான நிதித்துறை மையம் ஆகும். சாவோ போலோ பங்குச் சந்தையும் இங்குள்ள முக்கியமான ஒன்றாகும். மிராந்தே டோ வாலே கட்டிடம் உட்பட, பிரேசிலின் மிக உயர்ந்த கட்டிடங்கள் பல சாவோ போலோவில் உள்ளன.

மக்கள் தொகையியல்

குடியேற்றம்

1886 இல் சாவோ பாவுலோ நகரம்
குடியேற்றவாசிகள்பிறந்த வெளிநாட்டு மக்களில் குடியேற்றவாசிகளின் சதவீதம்[1]
இத்தாலியர்கள்47.9%
போத்துக்கீசர்29.3%
ஜேர்மனியர்கள்9.9%
எசுப்பானியர்கள்3.2%
சாவோ பாவுலோ நகரம்
வருடம்இத்தாலியர்கள்இத்தாலியர்களின் மொத்த நகர மக்களின் சதவீதம்[2]
18865,71713%
189345,45735%
190075,00031%
1910130,00033%
1916187,54037%

சமயங்கள்

சமயம் சதவீதம் எண்ணிக்கை
கத்தோலிக்கம் 58.20% 6,549,775
புரட்டஸ்தாந்தம் 22.11% 2,487,810
சமயமின்மை 9.38% 1,056,008
ஆவிக்கொள்கை 4.73% 531,882
பௌத்தம் 0.67% 75,075
உம்பண்டா மற்றும் கன்டொம்பிலே 0.62% 69,706
யூதர் 0.39% 43,610

மூலம்: IBGE 2010.[3]

புள்ளிவிபரங்கள்

முக்கிய புள்ளிவிவரங்கள்
பிரிவுதரவுகள்
வாகனங்கள்7,081,778 (ஜூன் 2011)[4]
தினசரிப் பத்திரிகைகள்34 (செப்டம்பர் 2008).[5]
உலங்கு வானூர்திகள்உலகின் மிகப்பெரிய தொகுதி[6]
நகர்ப்புறப் பகுதி1,968 சதுர கிலோமீற்றர்கள் (760 சதுர மைல்கள்)[7]
விமானப் பயணிகள் போக்குவரத்து47,723,894 (2010) சாவோ பாவுலோ-குவாருல்ஹொஸ் சர்வதேச விமான நிலையம், கொன்கொன்ஹாஸ்-சாவோ பாவுலோ விமான நிலையம், விராகொபொஸ்-கம்பினாஸ் சர்வதேச விமான நிலையம், கம்போ டே மார்டே விமான நிலையம், சாவோ ஜோசே டொஸ் கம்பொஸ் விமான நிலையம்), தென்னரை கோளத்திலேயே மிகவும் பெரியதாக இருக்கின்றது.[8]
கட்டடங்கள்எம்போரிஸ் தரவுகளின் படி 5,644 கட்டடங்களுடன் 3 ஆவது அதிகமான மிக உயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரமாக உள்ளது.[9] இலத்தீன் அமெரிக்காவின் பெரிய வணிக மையமாக சென்டரோ கொமர்சியல் லெஸ்டே அரிகன்டுவா 365,000 m2 (3,928,827.30 சதுர அடி) கட்டடப் பரப்பளவுடனும் 242,300 m2 (2,608,095.49 சதுர அடி) கட்டடம் தவிர்ந்த பிரதேசத்துடனும் விளங்குகின்றது.[10]
நாள் ஒன்றுக்கு புகையிரதப் பயணிகள் போக்குவரத்துசாவோ பாவுலோ மெட்ரோவில் 3.7 மில்லியனும் அத்துடன் கொம்பான்ஹியா பௌலிஸ்டா டே டிரென்ஸ் மெட்ரோபொலிடனோஸில் 2.3 மில்லியனுமாக மொத்தமாக 6 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்.[11][12]
மருத்துவமனைகள்இலத்தீன் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய கட்டடத் தொகுதியாக சாவோ பாவுலோ பல்கலைக்கழகத்தின் டாஸ் கிலினாஸ் மருத்துவமனை 352,000 m2 (3,788,896.47 சதுர அடி) கட்டடப் பரப்பளவுடன் உள்ளது.[13]
பில்லியனர்கள்21: உலகில் 6 ஆவது நிலையை மும்பையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.[14]
GDP2008 இல் GDP (PPP) உடன் பெரிய சாவோ பாவுலோவே உலகின் 10 ஆவது பணக்கார நகரமாக 388 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் உள்ளது.[15][16]

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், சாவோ பாவுலோ (1961 - 1990, 1931 இல் இருந்து பதிவுகள் குறைந்து செல்கின்றன)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.2
(93.6)
34.6
(94.3)
33.6
(92.5)
31.3
(88.3)
29.8
(85.6)
28.9
(84)
29.3
(84.7)
33
(91)
37.4
(99.3)
34.4
(93.9)
35.2
(95.4)
35.7
(96.3)
37.4
(99.3)
உயர் சராசரி °C (°F) 27.4
(81.3)
28
(82)
27.3
(81.1)
25.1
(77.2)
23
(73)
21.7
(71.1)
21.8
(71.2)
23.3
(73.9)
23.9
(75)
24.7
(76.5)
25.9
(78.6)
26.3
(79.3)
24.5
(76.1)
தினசரி சராசரி °C (°F) 22.2
(72)
22.4
(72.3)
21.7
(71.1)
19.8
(67.6)
17.6
(63.7)
16.4
(61.5)
15.8
(60.4)
17.1
(62.8)
17.8
(64)
19
(66)
20.3
(68.5)
21.2
(70.2)
18.5
(65.3)
தாழ் சராசரி °C (°F) 18.7
(65.7)
18.8
(65.8)
18.2
(64.8)
16.3
(61.3)
13.9
(57)
12.3
(54.1)
11.7
(53.1)
12.8
(55)
13.9
(57)
15.3
(59.5)
16.5
(61.7)
17.8
(64)
14.5
(58.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
11.2
(52.2)
10.9
(51.6)
6
(43)
5.2
(41.4)
0.9
(33.6)
0.2
(32.4)
-2.2
(28)
2.1
(35.8)
4.2
(39.6)
6.9
(44.4)
7.3
(45.1)
-2.2
(28)
பொழிவு mm (inches) 240
(9.45)
250
(9.84)
160
(6.3)
80
(3.15)
70
(2.76)
60
(2.36)
40
(1.57)
30
(1.18)
70
(2.76)
130
(5.12)
140
(5.51)
190
(7.48)
1,460
(57.48)
சராசரி பொழிவு நாட்கள் 18 16 13 9 9 6 7 7 9 11 13 16 134
சூரியஒளி நேரம் 148.8 150.8 145.7 141.0 151.9 144.0 164.3 155.0 126.0 136.4 144.0 130.2 1,738.1
Source #1: INMET — Clima[17], Hong Kong Observatory[18] for data of sunshine hours
Source #2: World Weather Information Service[19], for data of precipitation days

அரசியல்வாதிகள்

சாவோ பாவுலோவின் அண்மைக்கால மாநகராட்சி மன்றத் தலைவர்கள்

மாநகராட்சி மன்றத் தலைவர் நுழைவு விலகல் அரசியல் கட்சி
ஜோவாவோ தோரியா 2017 - பிரேசில் சமூக குடியரசு கட்சி (PSDB)
பெர்னாடோ ஹடாட் 2013 2016 PT
கில்பேர்டோ கஸ்ஸாப் 2006 2012 Democratas
ஜோசே செர்ரா 2005 2006 பிரேசில் சமூக குடியரசு கட்சி (PSDB)
மர்டா சப்ளிசி 2001 2004 PT
செல்சோ பிட்டா 1997 2000 PPB, பின்னர் PTN
பவுலோ மலவ் 1993 1996 PPB (PP)
லூசினா எருண்டினா 1989 1992 PT
ஜானியோ குவாடிரோஸ் 1986 1988 PTB
மாரியோ கொவாஸ் 1983 1985 PMDB

விளையாட்டு

கால்பந்து

பிரேசிலின் மற்ற இடங்களைப் போலவே இங்கும் கால்பந்தே முக்கியமான விளையாட்டாகும். இந்த நகரைச் சேர்ந்த மூன்று அணிகள் பிரேசிலின் முதல் தர கால்பந்து போட்டியான பிரேலியேரோ சீரி ஆவில் விளையாடுகின்றன. சாவோ பாவுலாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கால்பந்து அணிகள் பின்வருமாறு.

அணி போட்டித் தொடர் மைதானம் தொடக்கம்
கொர்ந்தியன்சு பிரேசிலியேரோ சீரி ஆ அரேனா கொரிந்தியன்சு 1910
பால்மைராசு பிரேசிலியேரோ சீரி ஆ அலையன்சு பூங்கா 1914
போர்த்துகேசா பிரேசிலியேரோ சீரி ஏ கனிந்தே மைதானம் 1920
சாவோ பாவுலோ கால்பந்து கழகம் பிரேசிலியேரோ சீரி ஆ மொரும்பி மைதானம் 1930

பிரேசில் கிராண் ப்ரி

ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து போட்டியானது சாவோ பாவுலோவில் அமைந்துள்ள ஜோசோ கார்லோசு பேசி அரங்கில் நடைபெறும். இந்த விளையாட்டின் சிறந்த வாகையாளர்களான அயர்ட்டன் சென்னா மற்றும் பிலிப்பே மாசா இந்த மண்ணின் மைந்தர்கள்.

    உசாத்துணைகள்

    நூற்பட்டியல்

    • Lawrence, Rachel (January 2010). Alyse Dar. ed. Brazil (Seventh ). Apa Publications GmbH & Co. / Discovery Channel. பக். 183–204.

    குறிப்புக்கள்

    1. "Universidade de São Paulo Faculdade de Gilosofia". Images.pauloce129.multiply.multiplycontent.com. பார்த்த நாள் 2012-12-01.
    2. Do outro lado do AtlРntico: um sжculo de imigraусo italiana no Brasil – Angelo Trento – Google Livros. Books.google.com.br. http://books.google.com.br/books?id=ncc7WLAXlmQC&pg=PA100&lpg=PA100&dq=governo+propaganda+atrair+italianos+imigrantes&source=bl&ots=fPPKBPmnJ4&sig=u8CjxKZ9t-eeM-nV5BNYSSiJMWU&hl=pt-BR&ei=Hk_OSf3VNYKItgfHjrjzCQ&sa=X&oi=book_result&resnum=7&ct=result#PPA67. பார்த்த நாள்: 2012-12-01.
    3. "Sistema IBGE de Recuperação Automática – SIDRA". Sidra.ibge.gov.br. பார்த்த நாள் October 11, 2012.
    4. "Departamento Estadual De Trânsito De São Paulo". Detran-Sp. பார்த்த நாள் July 22, 2011.
    5. "Number of Daily Newspapers". Guiademidia.com.br. பார்த்த நாள் April 17, 2010.
    6. "Estadão". Estadao.com.br. பார்த்த நாள் April 17, 2010.
    7. "The largest cities in the world by land area". Citymayors.com (January 6, 2007). பார்த்த நாள் April 17, 2010.
    8. "Estatísticas". Infraero (January 18, 2011). மூல முகவரியிலிருந்து May 26, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 2, 2011.
    9. "Emporis". Emporis (June 15, 2009). பார்த்த நாள் April 17, 2010.
    10. "Centro Comercial Leste Aricanduva". Aricanduva.com.br. பார்த்த நாள் April 17, 2010.
    11. "São Paulo Metro". Metro.sp.gov.br. பார்த்த நாள் April 17, 2010.
    12. "CPTM". Cptm.sp.gov.br. பார்த்த நாள் April 17, 2010.
    13. "Hcfmusp". Hcnet.usp.br. பார்த்த நாள் April 17, 2010.
    14. Claire Obusan. "Billionaires in São Paulo, Forbes". Forbes. http://www.forbes.com/2011/05/17/cities-with-most-billionaires_slide_8.html. பார்த்த நாள்: July 22, 2011.
    15. "Yahoo! Finance, in Portuguese". Br.pfinance.yahoo.com. பார்த்த நாள் May 16, 2012.
    16. "PricewaterhouseCoopers, Global city GDP rankings 2008–2025".
    17. "INMET — Climatologia — Gráficos Climatológicos". INMET.
    18. "Climatological Normals of Sao Paulo". Hong Kong Observatory. பார்த்த நாள் March 19, 2011.
    19. "World Weather Information Service - Sao Paulo". World Weather Information Service. பார்த்த நாள் March 19, 2011.

    வெளி இணைப்புக்கள்

    அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள்
    பிற இணையத்தளங்கள்
    செய்தித் தகவல்கள்
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.