கட்டிடம்

கட்டிடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.

கட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம், வாயுக் கொள்ளளவு, பக்டீரியா நடமாட்டம், அமுக்கம், மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டிடங்கள், கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் போன்ற சிறிய, எளிமையான கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டிடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது.

கட்டிடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டிடங்களில் கட்டிடப் பொருட்களின் பயன்பாடு அமைகின்றது.

கட்டிடங்களின் வகைகள்

கட்டிடங்கள் அவற்றின் அமைவிடம் ,பயன்பாடு ,அமைப்பு , பயன்படுத்தும் கட்டுமான பொருள் , ஆகியவற்றை பொருத்து பல

வகைகளில் பிரிக்கப்பட்டுகிறது .

பயன்பாட்டை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு

குடியிருப்பு கட்டிடங்கள்

சட்டசபை கட்டிடங்கள்

கல்விசார்ந்த கட்டிடங்கள்

தொழில் சார்ந்த கட்டிடங்கள்

சுமைதாங்கும் விதத்தை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு

கட்டுமான பொருட்களை பொருத்து வகைப்பாடு

வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடங்கள்

இரும்புக் கட்டிடங்கள்

கலவை கட்டிடங்கள்

கட்டிட உறுப்புக்கள்

ஒரு கட்டிடம் பல வகையான கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது.

கட்டமைப்பு சுமைகள்

ஒரு கட்டிடமானது பலவகை சுமைகளுக்கு உட்படுகிறது .

நிலைச்சுமைகள்

சுமத்திய சுமைகள்

காற்று சுமைகள்

பனி சுமைகள்

நிலஅதிர்வு சுமைகள்

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.