தொராண்டோ

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.

தொராண்டோ நகரம்

கொடி

சின்னம்
குறிக்கோளுரை: Diversity Our Strength
நாடுகனடா
மாகாணம்ஒன்டாரியோ
தொடக்கம்மார்ச் 6, 1834
ஒன்றுபடுத்தல்சனவரி 1, 1998
அரசு
  மாநகரத் தலைவர்சான் தோரி (John Tory)
  சபைதொராண்டோ மாநகரவை
மக்கள்தொகை (2001)
  நகரம்2.
  நகர்ப்புறம்4.
  பெருநகர்5.
இணையதளம்www.city.toronto.on.ca
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டொராண்டோவில் அமைந்துள்ள சி. என். கோபுரம். உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் அமைப்பு இதுவே.

கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் தொராண்டோ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.

புவியியல்

தொராண்டோ நகரம் சுமார் 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. வடக்குத் தெற்காக இதன் அதிகபட்சத் தூரம் 21 கிலோமீட்டர்களும் கிழக்கு மேற்காக அதிக பட்சத் தூரம் 43 கிலோமீட்டர்களுமாகும். இது ஒண்டாரியோ ஏரியின் வடமேற்குக் கரையில் 46 கிலோமீட்டர் நீர்முகத்தைக் கொண்டுள்ளது. தொராண்டோ நகரினூடாக ஹம்பர் ஆறு, டொன் ஆறு மற்றும் றோக் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் பாய்கின்றன.

அரசு

தொராண்டோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய தொராண்டோவில் தான் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றம் (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. தொராண்டோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.

தொராண்டோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், தொராண்டோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.

பொருளாதாரம்

தொராண்டோ, உலக வர்த்தக மற்றும் நிதியியல் மையங்களிலொன்றாக விளங்குகின்றது. தொராண்டோ பங்குச் சந்தையானது சந்தை முதலீட்டின் அடிப்படையில் உலகின் ஏழாவது பெரிய பங்குச்சந்தையாக விளங்குகின்றது. இந்நகரம் ஊடகம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத்துறைகளின் முக்கிய நிலையமாகத் திகழ்கின்றது.

கல்வி

இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.

தொராண்டோ பல்கலைக்கழகம் கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். யோர்க் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். றயர்சன் பல்கலைக்கழகம் நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.

தொராண்டோவின் சிறப்பு இடங்கள்

தொராண்டோ தமிழர்கள்

தொராண்டோவில் 200 000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் 1983க்குப் பின்னர் இலங்கை இனக்கலவரங்கள் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பலர் தொராண்டோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், தொராண்டோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். தொராண்டோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழிலும் கிடைக்கிறது.

வழிபாட்டு இடங்கள்

  • சிரீ மீனாட்சி அம்மன் கோவில்

நகரத்தோற்றம்

சி. என். கோபுரத்திலிருந்து தொராண்டோ நகரின் 360பாகை தோற்றம்.

சகோதர நகரங்கள்

இரட்டை நகரங்கள்[1]
நட்பு நகரங்கள்[1]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Toronto's International Alliance Program". Toronto.ca (October 23, 2000). பார்த்த நாள் 2010-10-17.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.