டொங்குவான்

டுங்க்வான் (Dongguan, எளிய சீனம்: 东莞; மரபுவழிச் சீனம்: 東莞; பின்யின்: Dōngguǎn, கண்டோனீசு: Dung1 gun2; பழைய ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு: Tung-kuan) சீனாவின் மையத்தில் உள்ள குவாங்டோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டநிலை நகரமாகும்.

டுங்க்வான்
Dongguan

东莞
மாவட்ட நிலை நகரம்
டுங்க்வான் நகரம் 东莞市
டுங்க்வான் நிழற்சாலை, மைய வணிக மாவட்டம்
நாடுசீனா
மாநிலம்குவாங்டோங்
நிறுவப்பட்டதுகிபி 331[1]
அரசு
  சீன பொதுவுடமைக் கட்சி குழுச் செயலாளர்லியு சிஜெங் (刘志庚)
  மேயர்லீ யுகுவான் (李毓全)
பரப்பளவு
  மொத்தம்2,465
மக்கள்தொகை
  மொத்தம்64,45,700
நேர வலயம்சீன சீர் நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறி523000
தொலைபேசி குறியீடு769
ஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள்粤S
- மொதம்¥ 424.6 பில்லியன்(2010)
- தனிநபர் ஒருவருக்கு¥ 53,285 (2008)
நகர மலர்யூலன் மக்னோலியா
Magnolia denudata
இணையதளம்http://www.dongguan.gov.cn/

பவழ ஆறு கழிமுகத்தில் அமைந்துள்ள இந்த இன்றியமையாத தொழில்நகரத்தின் வடக்கே மாநிலத் தலைநகர் குவாங்சோவும் வட கிழக்கே யுயிஷூவும் தெற்கே சென்ச்சென்னும் மேற்கே பவழ ஆறும் அமைந்துள்ளன.

உலகிலேயே, பெரும்பாலும் வெற்றிடமாக இருப்பினும், மிகப் பெரும் அங்காடி வளாகமான நியூ சௌத் சைனா மால் இங்குள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வரவேற்பதில் நகர நிர்வாகம் முற்போக்கான செயல்பாட்டுடன் திகழ்கிறது. டுங்க்வான் மற்றும் அடுத்துள்ள குவாங்சோ, சென்ச்சென் ஆகிய மூன்று நகராட்சிகளும் இணைந்து 25 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ளன. பவழ ஆறு கழிமுகப்பகுதி மக்கள்தொகையில் இவை மூன்றும் பெரும்பங்கை வகிக்கின்றன.[2] டுங்க்வானின் ஏற்றுமதி $65.54 பில்லியனாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Dongguan information, History of Dongguan, culture, climate, hotels, map, travel, tourism, tourist, weather, travel tips.". HotelTravel.com. பார்த்த நாள் 2010-05-06.
  2. "Livable Dongguan". Liveable.dg.gov.cn. பார்த்த நாள் 2010-05-06.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.