கண்டோனீயம்

கண்டோனீயம் அல்லது கண்டோனிசு (ஆங்கிலம்:Cantonese) என்பது சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் ஒரு தென்சீன மொழியாகும். இம்மொழி தென்சீனாவின் ஒரு மாகாணமான குவாங்தோ மாகாணத்தில், கண்டன் பகுதியில் வசித்த மக்களால் பேசப்பட்ட மொழியென்பதால், இம்மொழியின் பெயரும் "கண்டோனிசு" என்றழைக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாகும். ஹொங்கொங்கில் பெரும்பான்மையோரின் மொழியும் "கண்டோனிசு" ஆகும். இம்மொழிப் பேசுவோர் ஹொங்கொங், தென்சீனா, மக்காவ் மற்றும் சிறுதொகையின் வேறுசில நாடுகளிலும் வசிக்கின்றனர்.

கண்டோனிசு
广府话/廣府話 gwong2 fu2 waa2
广州话/廣州話 gwong2 zau1 waa2
白话/白話 baak6 waa2

ஹொங்கொங் மற்றும் மக்காவில்:
廣東話/广东话 gwong2 dung1 waa2
நாடு(கள்) சீனா: நடு, மேற்கு குவாங்டாங், குவாங்சீயின் கிழக்குப் பகுதி
 ஆங்காங்
 மக்காவு
 ஆத்திரேலியா
 கனடா: வான்கூவர், ரொறன்ரோ
 மலேசியா: கோலாலம்பூர், சண்டாக்கான்
 சிங்கப்பூர்
 தாய்வான்
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா: நியூ யார்க், லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ
 வியட்நாம்
சீன-திபெத்திய மொழிகள்
  • சினித்திய மொழிகள்
    • சீன மொழிகள்
      • யூ
        • யூஹெய்
          • கண்டோனிசு
கண்டோனிய எழுத்துகள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஆங்காங்
 மக்காவு (சீன அரசின் நடைமுறையில் உள்ள அதிகாரப்பூர்வமான பேச்சு வடிவம்)
Regulated byஆட்சி மொழிப் பிரிவு.[1]
குடிமுறை அரசுப் பணி அலுவலகம்
ஹாங்காங் அரசு
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
இந்தக் கட்டுரை சிறப்பு எழுத்துகளை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம்..

பலுக்குதல்

"கண்டோனிசு" என அழைக்கப்படும் சொல், ஆங்கில ஒலிப்புக்கு அமைவாகவே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வாழும் தமிழர்கள் அவ்வாறே உச்சரிக்கின்றனர். அத்துடன் தாய்மொழி அல்லாத பிற மொழியினர் இந்த வழக்கையே கொண்டுள்ளனர். அதேவேளை "கண்டோனிசு" எனும் சொல்லை சீன மொழியிலும் ஒரேமாதிரி ஒலிக்கப்படுவதில்லை. தென்சீன, மத்தியசீன, மேற்குசீன மக்களிடையே இதன் ஒலிப்பு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக: மத்தியசீனர்கள் குவோங்ஃபூவா என்றும், மேற்குசீனர்கள் பாக்வா என்றும், தென்சீனர்கள் குவோங்ந்தாவ்வா என்றும் ஒலிப்பர். அதேவேளை ஹொங்கொங் மக்களும், மக்காவ் மக்களும் குவோங்துங்வா என்று ஒலிப்பர். இருப்பினும் ஹொங்கொங்கின் புதிய தலைமுறையினரின் பேச்சு வழக்கில் "கண்டோனிசு" என்றே அழைக்கப்படுவதும் காணக்கூடியதாக உள்ளது.

வரலாறு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.