எசன்

எசன் (Essen, டாய்ச்சு ஒலிப்பு: [ˈɛsən]) செருமனியின் வட ரைன்-வெஸ்ட்பாலியாவின் ரூர் பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரம். ரூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை (சூன் 30, 2008 படி) ஏறத்தாழ 579,000. இது செருமனியின் ஒன்பதாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. ரூர் பகுதியின் சார்பாக 2010ஆம் ஆண்டின் ஐரோப்பிய பண்பாட்டு தலைநகராக விளங்கியது.

எசன்
2009இல் எசன் அடிவானம்
2009இல் எசன் அடிவானம்
சின்னம் அமைவிடம்
எசன் இன் சின்னம்
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம்Invalid state: "வட ரைன்-வெஸ்ட்பாலியா"
நிரு. பிரிவுடுசல்டொர்ஃப்
மாவட்டம்Urban district
நகரம் subdivisions9மாவட்டங்கள் , 50 வட்டங்கள்
நகர முதல்வர்Reinhard Paß (SPD)
Governing partiesSPD / CDU
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு210.32 ச.கி.மீ (81.2 ச.மை)
ஏற்றம்116 m  (381 ft)
மக்கட்தொகை  5,78,477  (30 சூன் 2009)[1]
 - அடர்த்தி2,750 /km² (7,124 /sq mi)
 - Urban5.302
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம்E
அஞ்சல் குறியீடுs45001–45359
Area codes0201, 02054 (கெட்விக்)
இணையத்தளம்www.essen.de
Location of the நகரம் of எசன் within வட ரைன்-வெஸ்ட்பாலியா
Map

முந்தைய செருமனியின் நிலக்கரி மற்றும் இரும்பு ஆலைகளுக்கு மிக முக்கியமான மையமாக விளங்கிய எசன் வரலாற்றில் நாற்றாண்டுகள் பழமையான க்ரூப் குடும்ப இரும்பு தொழிற்சாலைகள் புகழ் வாய்ந்தவை. தற்போதைய எசன் சேவைகள் பொருளாதாரத்திலும் வல்லமை பெற்று அண்மையிலுள்ள டுசல்டோர்ஃப்புடன் இணைந்து ரூர் பகுதியின் மேசைத் தொழிலகமாக விளங்குகிறது.[2] செருமனியின் 100 பெரும் நிறுவனங்களில் 13க்கு தலைமையகமாகவும் பல மண்டல நிறுவனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.

1958ஆம் ஆண்டு எசன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட (Ruhrbistum) தலைமையகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2003இன் துவக்கத்தில் 1972ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வந்த எசன் பல்கலைக்கழகம் மற்றும் டுயிஸ்பெர்க் பல்கலைக்கழகங்களை இணைத்து டுயிஸ்பெர்க்-எசன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இரு நகரங்களிலும் தனது வளாகங்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைகழகத்தின் மருத்துவமனை எசனில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Population in the Regierungsbezirk Düsseldorf
  2. ("Schreibtisch des Ruhrgebiets")

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.