1978 உலகக்கோப்பை கால்பந்து

1978 உலகக்கோப்பை காற்பந்து, நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பை காற்பந்தின் 11வது நிகழ்வாகும். இது அர்கெந்தீனா சூன் 1 முதல் 25 வரை நடைபெற்றது.

1978 உலகக்கோப்பை காற்பந்து
அர்கெந்தீனா '78
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு அர்கெந்தீனா
நாட்கள்1 – 25 சூன் (25 days)
அணிகள்16 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்6 (5 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் அர்கெந்தீனா (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் நெதர்லாந்து
மூன்றாம் இடம் பிரேசில்
நான்காம் இடம் இத்தாலி
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்38
எடுக்கப்பட்ட கோல்கள்102 (2.68 /ஆட்டம்)
பார்வையாளர்கள்15,46,151 (40,688/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) மாரியோ கெம்பசு (6 இலக்குகள்)
சிறந்த ஆட்டக்காரர் மாரியோ கெம்பசு
1974
1982

அர்கெந்தீனா கூடுதல் நேரம் வரை சென்ற இறுதியாட்டத்தில் நெதர்லாந்தை 3–1 என்ற இலக்குகளில் வென்று இந்த உலகக்கோப்பையை வென்றது. இது அர்கெந்தீனாவிற்கான முதல் கோப்பையாகும். உருகுவை, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் மேற்கு செருமனி நாடுகளை அடுத்து போட்டியை நடத்தி கோப்பையையும் வென்ற ஐந்தாவது நாடாக ஆனது. அர்கெந்தீனா, நெதர்லாந்து மற்றும் பிரேசில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றன.

உலகக்கோப்பை போட்டிகளுக்கு முதன்முறையாக நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் இந்த உலகக்கோப்பையில் தான் பங்கேற்றன.[1] முதன்மையான காற்பந்து அணியான உருகுவை தகுதிச் சுற்றுக்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.