இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி (England national football team), பன்னாட்டு கால்பந்தாட்டப் போட்டிகளில் இங்கிலாந்தின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும்; இதனை, இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இசுக்கொட்லாந்துடன் இங்கிலாந்தும் உலகின் மிகப்பழமையான இரு தேசிய கால்பந்து அணிகளாகும்; இவ்விரு அணிகளும் 1872-ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டுக் கால்பந்துப் போட்டியை ஆடின. இங்கிலாந்தின் தன்னக விளையாட்டரங்கம், லண்டனிலுள்ள வெம்பிளி விளையாட்டரங்கம் ஆகும்.

இங்கிலாந்து
அடைபெயர்மூன்று சிங்கங்கள்
கூட்டமைப்புகால்பந்துச் சங்கம்
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்ராய் ஆட்சன்
துணைப் பயிற்சியாளர்ரே லீவிங்டன்(Ray Lewington)
அணித் தலைவர்ஸ்டீவன் ஜெரார்ட்(Steven Gerrard)
Most capsபீட்டர் சில்டன் (Peter Shilton) (125)
அதிகபட்ச கோல் அடித்தவர்பாபி சார்ல்டன் (Bobby Charlton) (49)
தன்னக விளையாட்டரங்கம்வெம்பிளி விளையாட்டரங்கம்
பீஃபா குறியீடுENG
பீஃபா தரவரிசை13
அதிகபட்ச பிஃபா தரவரிசை3 (ஆகத்து 2012)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை27 (பெப்ரவரி 1996)
எலோ தரவரிசை7
அதிகபட்ச எலோ1 (1872–1876
1892–1911
1966–1970
1987–1988)
குறைந்தபட்ச எலோ13 (1936)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 இசுக்காட்லாந்து 0–0 England
(Partick, Scotland; 31 சூலை 1872)
பெருத்த வெற்றி
 அயர்லாந்து 0–13 England
(Belfast, Ireland; 31 சூலை 1882)
பெருத்த தோல்வி
 அங்கேரி 7–1 England
(Budapest, Hungary; 23 மே 1954)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்14 (முதற்தடவையாக 1950 இல்)
சிறந்த முடிவுWinners: 1966
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1968 இல்)
சிறந்த முடிவுThird: 1968
Semi-finals: 1996

இங்கிலாந்து அணியினர் 1966-ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்றிருக்கின்றனர். அதன்பின்னர், அவர்களது சிறந்த உலகக்கோப்பை செயல்பாடு என்பது 1990-இல் அரையிறுதியை எட்டியது ஆகும். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை இங்கிலாந்து அணியினர் வென்றதில்லை. அப்போட்டியில் அவர்களின் சிறந்த செயல்பாடு, 1968 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அரையிறுதியை எட்டியது ஆகும்.

குறிப்புதவிகள்

    வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.