அங்கேரி தேசிய காற்பந்து அணி

அங்கேரி தேசிய காற்பந்து அணி (Hungary national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் அங்கேரி நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை, அங்கேரிய காற்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது.

அங்கேரி
அடைபெயர்The Magical Magyars
(In the 1950s)
கூட்டமைப்புMagyar Labdarúgó Szövetség (MLSZ)
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர் Attila Pintér
அணித் தலைவர்Zoltán Gera
Most capsJózsef Bozsik (101)
அதிகபட்ச கோல் அடித்தவர்ஃபெரெங்க் புஸ்கஸ் (84)
தன்னக விளையாட்டரங்கம்Stadium Puskás Ferenc
பீஃபா குறியீடுHUN
பீஃபா தரவரிசை44 2
அதிகபட்ச பிஃபா தரவரிசை27 (செப்டெம்பர் 2011)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை87 (சூலை 1996)
எலோ தரவரிசை45
அதிகபட்ச எலோ1 (1953–57, 1958, 1964, 1965)
குறைந்தபட்ச எலோ80 (நவெம்பர் 2003)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 ஆஸ்திரியா 5–0 Hungary
(வியன்னா, ஆஸ்திரியா 12 October 1902)
பெருத்த வெற்றி
 Russian Empire 0–12 Hungary
(மாஸ்கோ, உருசியா; 14 July 1912)
Hungary 13–1 பிரான்சு 
(புடாபெஸ்ட், அங்கேரி; 12 June 1927)
Hungary 12–0 அல்பேனியா 
(Budapest, Hungary; 24 September 1950)
பெருத்த தோல்வி
Hungary 0–7 இங்கிலாந்து 
(Budapest, Hungary; 10 June 1908)
England Amateurs 7–0 Hungary
(Solna, சுவீடன்; 30 June 1912)[1]
 செருமனி 7–0 Hungary
(கோல்ன், Germany; 6 April 1941)
 நெதர்லாந்து 8–1 Hungary
(Amsterdam, Netherlands; 11 October 2013)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம்; 1938 மற்றும் 1954
யூரோ
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1964 இல்)
சிறந்த முடிவுமூன்றாமிடம், 1964
வென்ற பதக்கங்கள்
Men's Football
தங்கம்1952 HelsinkiTeam
வெண்கலம்1960 RomeTeam
தங்கம்1964 TokyoTeam
தங்கம்1968 Mexico CityTeam
வெள்ளி1972 MunichTeam

மூன்று முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்ற அணியான அங்கேரி, 1938 மற்றும் 1954 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது. மேலும், 1964 யூரோ போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் மிக நீண்ட தோல்வி-பெறாத ஓட்டத்தைக் கண்ட அணியாக அங்கேரி இருக்கிறது; 4 ஆண்டுகள் நீடித்த இந்த ஓட்டத்தில், அவ்வணி 31 போட்டிகளில் தோல்விபெறாமலிருந்தது. இந்த ஓட்டத்தில், நூற்றாண்டின் சிறந்த கால்பந்துப் போட்டியாகக் கருதப்படும் இங்கிலாந்து (எ) அங்கேரி (1953) போட்டியும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஃபெரெங்க் புஸ்கஸ் அங்கேரி அணி வீரர் ஆவார்; இவரே, 20-ஆம் நூற்றாண்டின் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.[2][3][4] அவரது பெயரில் ஃபிஃபா விருது வழங்கப்படுகிறது; அவ்வாண்டின் மிகச்சிறந்த கோல் அடித்தவருக்கு அவ்விருது அளிக்கப்படும்.[5] உலகக் காற்பந்தாட்ட அணிகளிலேயே மிக அதிக எலோ தரவரிசைப் புள்ளிகள் பெற்ற அணி அங்கேரி தேசிய காற்பந்து அணியாகும்; 1954-ஆம் ஆண்டில் அவ்வணி 2166 புள்ளிகள் பெற்றிருந்ததே இதுவரையான உச்சகட்ட சாதனையாகும்.

குறிப்புதவிகள்

  1. Note that this match is not considered to be a full international by the English FA, and does not appear in the records of the England team
  2. "FIFA President: FIFA to help the Galloping Major". பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (12 October 2005). மூல முகவரியிலிருந்து 7 October 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-11-17.
  3. "Coronel Puskas, el zurdo de oro" (Spanish). AS (17 November 2006). பார்த்த நாள் 2006-11-17.
  4. Mackay, Duncan (13 October 2005). "Lineker tees up another nice little earner". London: Guardian Unlimited. http://sport.guardian.co.uk/golf/story/0,10069,1590809,00.html. பார்த்த நாள்: 2006-11-17.
  5. Blatter unveils FIFA Puskas Award

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.