1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முனிச் நகரில் ஆகத்து 26 முதல் செப்டம்பர் 11 வரை 1972ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XX ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இது மேற்கு செருமனியில் நடக்கும் இரண்டாவது ஒலிம்பிக்காகும். முதல் ஒலிம்பிக் 1932ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்தது.

இப்போட்டி முனிச் படுகொலையால் பாதிக்கப்பட்டது. இப்படுகொலையில் 11 இசுரேலிய வீரர்களும் பயிற்சியாளர்களும் காவல்துறையினரும் ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் மூவர் உயிருடன் பிடிபட்டனர்.

பதினொரு நாடுகள் முதன்முறையாக முனிச் ஒலிம்பிக்கின் போது பங்கு கொண்டன. அவை அல்பேனியா, சவுதி அரேபியா, சோமாலியா, வட கொரியா, டாகோமெ (தற்போது பெனின்), காபோன், புர்க்கினா பாசோ, டோகோ, மலாவி, லெசோத்தோ, சுவாசிலாந்து. பங்குபெற்ற நாடுகள் செருமன் எழுத்து முறைப்படி வந்தன அதனால் எகிப்து முதலில் வந்தது.

போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு

ஆகத்து 26, 1966 ல் ரோமில் நடந்த 64வது நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் அமர்வில் முனிச் தேர்வு பெற்றது[1]

1972 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[2]
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2
முனிச் மேற்கு செருமனி2931
மாட்ரிட் எசுப்பானியா1616
மொண்ட்ரியால் கனடா613
டெட்ராய்ட் ஐக்கிய அமெரிக்கா6

பதக்கப் பட்டியல்

பங்கு கொண்ட நாடுகளில் 48 பதக்கம் பெற்றன.       போட்டையை நடத்தும் நாடு மேற்கு செருமனி

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சோவியத் ஒன்றியம்50272299
2 ஐக்கிய அமெரிக்கா33313094
3 கிழக்கு ஜேர்மனி20232366
4 மேற்கு செருமனி13111640
5 சப்பான்138829
6 ஆத்திரேலியா87217
7 போலந்து75921
8 அங்கேரி6131635
9 பல்கேரியா610521
10 இத்தாலி531018
11 சுவீடன்46616
12 ஐக்கிய இராச்சியம்45918
13 உருமேனியா36716
14 கியூபா3148
 பின்லாந்து3148
16 நெதர்லாந்து3115
17 பிரான்சு24713
18 செக்கோசிலோவாக்கியா2428
19 கென்யா2349
20 யுகோசுலாவியா2125
21 நோர்வே2114
22 வட கொரியா1135
23 நியூசிலாந்து1113
24 உகாண்டா1102
25 டென்மார்க்1001
26 சுவிட்சர்லாந்து0303
27 கனடா0235
28 ஈரான்0213
29 பெல்ஜியம்0202
 கிரேக்க நாடு0202
31 ஆஸ்திரியா0123
 கொலம்பியா0123
33 அர்கெந்தீனா0101
 தென் கொரியா0101
 லெபனான்0101
 மெக்சிக்கோ0101
 மங்கோலியா0101
 பாக்கித்தான்0101
 தூனிசியா0101
 துருக்கி0101
41 பிரேசில்0022
 எதியோப்பியா0022
43 கானா0011
 இந்தியா0011
 ஜமேக்கா0011
 நைஜர்0011
 நைஜீரியா0011
 எசுப்பானியா0011
மொத்தம்195195210600

மேற்கோள்கள்

  1. IOC Vote History
  2. "[http://www.webcitation.org/5xFvf0ufx Past Olympic host city election results]". GamesBids. மூல முகவரியிலிருந்து 17 March 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 March 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.