2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும்.

XXIX ஒலிம்பிக் போட்டிகள்
  ஒரே பூமி, ஒரே கனவு
"நடனமாடும் பெய்ஜிங்" சின்னம்,
நகரின் பெயரில் காணப்படும் சீன எழுத்தான "ஜிங்"
என்பதன் அழகியல் வடிவமாகும்.
நடத்தும் நகரம்பீஜிங், சீனா
பங்குபெறும் நாடுகள்கட்டுரையைப் பார்க்க
பங்குபெறும் வீரர்கள்10,500 (அண்ணளவாக)[1]
நிகழ்ச்சிகள்302 - 28 விளையாட்டுகள்
துவக்க நிகழ்வுஆகஸ்ட் 8
இறுதி நிகழ்வுஆகஸ்ட் 24
திறந்து வைப்பவர்சீன அதிபர்
அரங்குகள்பீஜிங் தேசிய அரங்கம்
2008 ஒலிம்பிக் போட்டிகள்

கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைபெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.

உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டி நடத்தும் நாடு தெரிவு

2008 கோடை ஒலிம்பிக் விலைக்கோள்களின் முடிவுகள்
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2
பெய்ஜிங் சீனா4456
டொரண்டோ கனடா2022
பாரிஸ் பிரான்ஸ்1518
இஸ்தான்புல் துருக்கி179
ஒசாக்கா ஜப்பான்6

2001 ஜூலை 13 அன்று மொஸ்கோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது டொரண்டோ, பரிஸ், இஸ்தான்புல், ஓசாகா, பெய்ஜிங் ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன.

முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் பெய்ஜிங் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.[2]

விளையாட்டு அரங்குகள்

பறவைக் கூடு சீனத் தேசிய விளையாட்டரங்கம்
  • நீர் கன சதுர விளையாட்டரங்கம் -
  • பறவைக் கூடு - சீனத் தேசிய விளையாட்டரங்கம் -

விளையாட்டுக்கள்

தட கள விளையாட்டுக்கள் (47)

  • ஓடுதல்
  • பாய்தல்
  • எறிதல்

நீர் விளையாட்டுக்கள் (46)

  • நீர் மூழ்குதல் - (8)
  • நீச்சல், வேக நீச்சல் - (34)
  • ஒருங்கிணைந்த நீச்சல் - Synchronized swimming (2)
  • நீச்சல் எறிபந்தாட்டம் - Water polo (2)

சீருடற்பயிற்சிகள் (18)

தற்காப்புக் கலைகள்

ஊர்தி ஓட்டங்கள்

குழு விளையாட்டுக்கள்

கருவி விளையாட்டுக்கள்

பதக்க நிலவரம்

2008 கோடை ஒலிம்பிக் பதக்கங்களின் பின்புறம்: வெள்ளி (இடது), தங்கம் (நடு), வெண்கலம் (வலது)

போட்டிகள் இறுதியில் (ஆகஸ்ட் 24) முதல் 10 நிலைகள் வருமாறு:

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா512128100
2 ஐக்கிய அமெரிக்கா363836110
3 உருசியா23212872
4 ஐக்கிய இராச்சியம்19131547
5 செருமனி16101541
6 ஆத்திரேலியா14151746
7 தென் கொரியா1310831
8 சப்பான்961025
9 இத்தாலி8101028
10 பிரான்சு7161740

ஒலிம்பிக் நாட்காட்டி

2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நாட்காட்டி
  துவக்க விழா  போட்டிகள்  இறுதிப் போட்டிகள்  நிறைவு விழா
ஆகஸ்ட்67891011121314 15161718192021222324மொ
கொண்டாட்டங்கள்
வில்வித்தை 1 1 1 1 4
தட கள விளையாட்டுக்கள் 2 4 6 6 5 3 6 7 7 1 47
பூப்பந்தாட்டம் 1 2 2 5
அடிப்பந்தாட்டம் 1 1
கூடைப்பந்தாட்டம் 1 1 2
குத்துச்சண்டை 5 6 11
சிறு படகோட்டம் 2 2 6 6 16
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் 1 1 2 1 3 1 2 3 2 1 1 18
நீர் மூழ்குதல் 1 1 1 1 1 1 1 1 8
குதிரையேற்றம் 2 1 1 1 1 6
வாள்வீச்சு 1 1 1 1 2 1 1 1 1 10
வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
காற்பந்தாட்டம் 1 1 2
சீருடற்பயிற்சிகள் 1 1 1 1 4 4 4 1 1 18
எறிபந்தாட்டம் 1 1 2
யுடோ 2 2 2 2 2 2 2 14
தற்கால ஐந்திறப்போட்டி 1 1 2
துடுப்பு படகோட்டம் 7 7 14
பாய்மரப் படகோட்டம் 2 1 2 2 2 2 11
குறி பார்த்துச் சுடுதல் 2 2 2 2 1 2 1 2 1 15
மென்பந்தாட்டம் 1 1
நீச்சல் 4 4 4 4 4 4 4 4 1 1 34
ஒருங்கிணைந்த நீச்சல் 1 1 2
மேசைப்பந்தாட்டம் 1 1 1 1 4
டைக்குவாண்டோ 2 2 2 2 8
டென்னிஸ் 2 2 4
நெடுமுப்போட்டி 1 1 2
கைப்பந்தாட்டம் 1 1 1 1 4
நீச்சல் எறிபந்தாட்டம் 1 1 2
பாரம்தூக்குதல் 1 2 2 2 2 2 1 1 1 1 15
மற்போர் 2 2 3 2 2 2 2 3 18
ஆகஸ்ட்67891011121314 15161718192021222324302

தமிழில் ஒலிம்பிக் செய்திகள்

தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி
பிபிசி தமிழோசை: கனவு பலிக்குமா?
கூகிள் தமிழ் விளையாட்டு செய்திகள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 6th Coordination Commission Visit To Begin Tomorrow, International Olympic Committee. Retrieved on May 20, 2006.
  2. "Beijing 2008: Election". International Olympic Committee. பார்த்த நாள் 2006-12-18.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.