2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2014 Winter Olympics) அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (22nd Winter Olympics) உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அயன அயல் மண்டல நகரமொன்றில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சூலை 4, 2007இல் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கூடிய 119வது பன்னாட்டு ஒலிம்பிக் குழு மன்றத்தில் இங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது.[2] 1980இல் மாஸ்கோ நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ள உருசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

XXII Olympic Winter Games
குறிக்கோள்"சூடு, குளிர், உங்களது
Hot. Cool. Yours."[1]
(உருசியம்: Жаркие. Зимние. Твои.)
பங்குபெறும் நாடுகள்88
பங்குபெறும் வீரர்கள்2,800+
நிகழ்ச்சிகள்98 - 15 விளையாட்டுகள்
துவக்க நிகழ்வுபெப்ரவரி 7
இறுதி நிகழ்வுபெப்ரவரி 23
திறந்து வைப்பவர்விளாதிமிர் பூட்டின்
வீரர் உறுதிமொழிருஸ்லான் சாகரொவ்
நடுவர் உறுதிமொழிவிச்சிசிலாவ் வெதெனின்
ஒலிம்பிக் தீச்சுடர்விளாதிசுலாவ் திரெத்தியாக்
இரீனா ரொத்னினா
2013 இல் வெளியிடப்பட்ட 100 உருசிய ரூபிள் வங்கித்தாள்

பங்கேற்கும் நாடுகள்

வான்கூவரில் நடைபெற்ற கடைசி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 82 நாடுகள் பங்கேற்றிருந்தன; இதனை காட்டிலும் கூடுதலாக 88 நாடுகள் இங்கு விளையாடத் தகுதிபெற்று சாதனை படைத்துள்ளன.[3] ஏழு நாடுகள், டொமினிக்கா, மால்ட்டா, பரகுவை, கிழக்குத் திமோர், டோகோ, தொங்கா, மற்றும் சிம்பாப்வே, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடுகின்றன.[4]

சோச்சியில் 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகள்.
பங்கேற்கும் நாடுகள்
2010ல் பங்கேற்று 2014ல் பங்கேற்காத நாடுகள் 2010ல் பங்கேற்காமல் 2014ல் பங்கேற்கும் நாடுகள்
 கொலம்பியா
 எதியோப்பியா
 கானா
 வட கொரியா
 செனிகல்
 தென்னாப்பிரிக்கா
 பிரித்தானிய கன்னித் தீவுகள்
 டொமினிக்கா
 லக்சம்பர்க்
 மால்ட்டா
 பரகுவை
 பிலிப்பீன்சு
 தாய்லாந்து
 கிழக்குத் திமோர்
 டோகோ
 தொங்கா
 வெனிசுவேலா
 அமெரிக்க கன்னித் தீவுகள்
 சிம்பாப்வே

இந்தியப் பங்கேற்பு

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடைமுறைகள் குறித்த பிணக்கினால் திசம்பர் 2012இல் இந்தியா பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்தக் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியபோதும் இத்தேர்தல்கள் நடைபெறாத நிலை இருந்தது. எனவே இந்தியாவின் சார்பாக இப்போட்டிகளில் பங்கேற்கும் மூவர் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர். இவர்களது சாதனைகளும் சுயேச்சை ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் என பட்டியலிடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டது.[5][6] இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு நடைமுறைப்படி தேர்தல் நடந்தது. எனவே சோச்சியில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது. இதனால் இந்திய வீரர்கள் இனி இந்தியக் கொடியை பயன்படுத்துவர். அவர்களது சாதனைகள் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்படும். [7]

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

2014 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு (தே.ஒ.கு) சுற்று 1 சுற்று 2
சோச்சி உருசியா3451
பியாங்சாங் தென் கொரியா3647
சால்சுபர்க் ஆஸ்திரியா25

விளையாட்டுக்கள்

சோச்சி போட்டியின் மூன்று முகடிகளை கொண்டுள்ள உருசிய அஞ்சல் தலை.
  • லூஜ்
  • நோர்டிக் கம்பைன்டு
  • குறுந் தடகள வேகப் பனிச்சறுக்கல்
  • எலும்புக்கூடு இசுலெட்
  • வேகப் பனிச்சறுக்கல்

தொலைக்காட்சி ஒளிபரப்பு

தெற்காசியாவில் 7 நாடுகளில் நேரடி ஒளிபரப்பினை செய்வதற்குரிய உரிமையினை ஸ்டார் இண்டியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. [8]

  • இந்தியாவில் STAR Sports 2, STAR Sports 4 எனும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பினை காண இயலும்.

பதக்கப் பட்டியல்

இறுதி பதக்கப் பட்டியல்:[9]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 உருசியா*1311933
2 நோர்வே1151026
3 கனடா1010525
4 ஐக்கிய அமெரிக்கா971228
5 நெதர்லாந்து87924
6 செருமனி86519
7 சுவிட்சர்லாந்து63211
8 பெலருஸ்5016
9 ஆஸ்திரியா48517
10 பிரான்சு44715
11 போலந்து4116
12 சீனா3429
13 தென் கொரியா3328
14 சுவீடன்27615
15 செக் குடியரசு2428
16 சுலோவீனியா2248
17 சப்பான்1438
18 பின்லாந்து1315
19 ஐக்கிய இராச்சியம்1124
20 உக்ரைன்1012
21 சிலவாக்கியா1001
22 இத்தாலி0268
23 லாத்வியா0224
24 ஆத்திரேலியா0213
25 குரோவாசியா0101
26 கசக்கஸ்தான்0011
மொத்தம்999799295

மேற்கோள்கள்

  1. "Sochi 2014 Reveals its Slogan". Sochi 2014 Olympic and Paralympic Games Organizing Committee. 25 September 2012. http://www.sochi2014.com/en/media/news/59607/. பார்த்த நாள்: 29 September 2012.
  2. «Sochi Elected as Host City of XXII Olympic Winter Games». International Olympic Committee, July 4, 2007
  3. "Record 88 nations to participate in Winter Games". Global News. Associated Press (சோச்சி, உருசியா). 2 பெப்ரவரி 2014. http://globalnews.ca/news/1123578/record-88-nations-to-participate-in-winter-games/. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2014.
  4. MacKenzie, Eric (16 சனவரி 2014). "Sochi Spotlight: Zimbabwe's first Winter Olympian". Pique Newsmagazine (Whistler, British Columbia, கனடா). http://www.piquenewsmagazine.com/whistler/sochi-spotlight-zimbabwes-first-winter-olympian/Content?oid=2542948. பார்த்த நாள்: 16 சனவரி 2014.
  5. "Sochi Games: Four Indian skiers to go as independent athletes". Zee news. 31 திசம்பர் 2013. http://zeenews.india.com/sports/others/sochi-games-four-indian-skiers-to-go-as-independent-athletes_777046.html. பார்த்த நாள்: 31 திசம்பர் 2013.
  6. "Sochi Olympics starts today sans Tricolour; two babus arrive to mentor three athletes". டிஎன்ஏ இந்தியா (8 பெப்ரவரி 2014). பார்த்த நாள் 8 பெப்ரவரி 2014.
  7. "Olympic ban on India lifted: Official statement of International Olympic Committee". Ndtv. பார்த்த நாள் 11 பெப்ரவரி 2014.
  8. "ioc awards broadcast rights for seven countries in south asia". Olympic.org (31 ஜூலை 2013). பார்த்த நாள் 7 பெப்ரவரி 2014.
  9. http://www.bbc.com/sport/winter-olympics/2014/medals/countries

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.