சோச்சி

சோச்சி (Sochi, உருசியம்: Со́чи) உருசியாவின் கிராஸ்னதார் பிரதேசத்தில் கருங்கடலோரம் அமைந்துள்ள நகரமாகும். இது சியார்சியா/அப்காசியாவிற்கும் உருசியாவிற்குமான எல்லைக்கருகே அமைந்துள்ளது. சோச்சியின் ஆளுகையில் அமைந்துள்ள நிலப்பகுதிகள் அடங்கிய பெரும் சோட்சியின் பரப்பளவு 3,526 சதுர கிலோமீட்டர்கள் (1,361 sq mi) ஆகும்.[3] சோச்சி நகரத்தின் பரப்பளவு 176.77 சதுர கிலோமீட்டர்கள் (68.25 sq mi) ஆகும்.[3] 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 343,334 ஆக உள்ளது.[7] இது உருசியாவின் மிகப்பெரும் மனமகிழ்வு நகரமாக உள்ளது. உருசியாவில் அயன அயல் மண்டல வானிலை நிலவும் சில நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. குளிர்காலம் மிதமாகவும் வேனில் காலம் வெப்பமாகவும் காணப்படுகிறது.

சோச்சியின் அமைவிடத்தைக் காட்டும் கருங்கடலின் நிலப்படம்
கருங்கடலிலிருந்து சோச்சியின் காட்சி
சோச்சி
Sochi
Сочи

சோச்சியின் ஒளிப்படத் தொகுப்பு
Sochi
இரசியாவில் சோச்சி இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°35′07″N 39°43′13″E


நிருவாக அமைப்பு (மே 2013)
நாடுஇரசியா
ஆட்சிப் பிரிவுகிராஸ்னதார் பிரதேசம்
'எதன் நிருவாக மையம்City of Sochi
மாநகரத் தரம் (as of சூன் 2009)
Urban okrugசோச்சி நகரக ஒக்ருக்[1]
Administrative center ofசோச்சி நகரக ஒக்ருக்[1]
தலைவர்[2]அனடோலி பாக்கோமோவ்[2]
பிரதிநிதித்துவ அமைப்புநகரமன்றம்
Statistics
Area (city)176.77 ச.கி.மீ (68.3 ச.மை)[3]
'1838[4][5]
Previous namesடக்கோவ்ஸ்கி (until 1896)[6]
Postal code(s)354000, 354002–354004, 354008–354010, 354013, 354014, 354018, 354019, 354022, 354024, 354025, 354030, 354031, 354033, 354036, 354037, 354039, 354053–354055, 354057, 354059, 354061, 354065–354068, 354071, 354073, 354084, 354099, 354200, 354202–354214, 354216–354218, 354220, 354226, 354231, 354233, 354299, 354340, 354346, 354348, 354349, 354354, 354355, 354364, 354380, 354382, 354383, 354399, 993501
Dialing code(s)+7 8622
Official websitehttp://www.sochiru.ru/

அண்மையில் உள்ள பனிச்சறுக்கு மனமகிழ்விடமான ரோசா குத்தோரில் மலைசார்ந்த நிகழ்வுகள் நடக்க, சோச்சி 2014ஆம் ஆண்டுக்கான 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் 11வது குளிர்கால மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தியது. மேலும் உருசிய பார்முலா 1 கிராண்டு பிரீ போட்டிகள் 2014 ஆண்டுமுதல் குறைந்தது 2020 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது;[8][9] 2018 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தரைவழிப் போக்குவரத்திற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

  1. Law #679-KZ
  2. Official website of Sochi (உருசிய மொழியில்)
  3. Городское Собрание Сочи. Решение №89 от 14 июля 2009 г. «Об утверждении генерального плана городского округа города Сочи». Вступил в силу со дня опубликования. (City Assembly of Sochi. Decision #89 of July 14, 2009 On the Adoption of the General Plan of the Urban Okrug of the City of Sochi. Effective as of the publication date.).
  4. Exposition of the Historical Museum of Sochi, partly reflected in Russian in История Сочи (History of Sochi) at the official site of the city
  5. Great Soviet Encyclopedia. Entry on Sochi (உருசிய மொழியில்)
  6. Сочи in the Great Soviet Encyclopedia (உருசிய மொழியில்)
  7. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  8. Sochi hosts 2014 Winter Olympics BBC Sport, July 4, 2007
  9. PM Putin confirms Russian GP for 2014 GPUpdate, October 15, 2010
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.