2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

இருபத்தி நான்காவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (சீனம்: 第二十四届冬季奥林匹克运动会; pinyin: Dì Èrshísì Jiè Dōngjì Àolínpǐkè Yùndònghuì), அல்லது 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அழைக்கப்படும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நிகழ்வுகளாகும். இதனை சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரம் 2022 ஆம் ஆண்டு  பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடத்துகிறது.[1] இந்நகரமே கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரமாகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட திட்டமிட்டுள்ளது.

XXIV Olympic Winter Games
Beijing's 2022 Bid Logo
குறிக்கோள்Joyful Rendezvous Upon Pure Ice and Snow (bid motto).
எளிய சீனம்: 纯净的冰雪欢乐的聚会
பங்குபெறும் நாடுகள்90 (Estimated)

நகரம் தேர்வு 

இப்போட்டிகளை நடத்துவதற்காக ஓஸ்லோ, அல்மடி மற்றும் பெய்ஜிங் போட்டியிட்டன. இறுதியாக கோலாம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சம்மேளனக் கூட்டத்தில் பெய்ஜிங் நகரம் தேர்வு செய்யப்பட்டது.[2]

தேர்வு முடிவு

2022 குளிர்கால ஒலிம்பிக் ஏல முடிவு
நகரம்
பெய்ஜிங்  சீனா 44
அல்மாட்டி  கசக்கஸ்தான் 40

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Beijing to host 2022 Winter Olympics and Paralympics". பார்த்த நாள் 31 July 2015.
  2. "2022 குளிர்கால ஒலிம்பிக் பீஜிங்கில்". செய்தி. www.tamilcnn.lk (2015 ஆகத்து 2). பார்த்த நாள் 5 அக்டோபர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.