2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது 2000ல் ஆத்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடந்த கோடைகால ஒலிம்பிக் ஆகும். இப்போட்டி அதிகாரபூர்வமாக XXVII ஒலிம்பிக் எனப்பட்டது. இப்போட்டிகள் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது. இப்போட்டியை நடத்தியதின் மூலம் இந்த நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக்கை நடத்திய பெருமையை சிட்னி பெற்றது. இப்போட்டிகளுக்கு அண்ணளவாக 6.6பில்லியன் ஆத்திரேலிய டாலர் செலவாகியது. ஆத்திரேலியாவில் நடத்தப்படும் இரண்டாவது ஒலிம்பிக் இதுவாகும். 1956ல் மெல்பேர்ண் நகரில் ஒலிம்பிக் நடந்தது முதல் தடவையாகும்.


199 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இது 1996 போட்டியில் பங்கேற்றதைவிட இரண்டு அதிகமாகும். கிழக்குத் திமோரில் இருந்து நான்கு பேர் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். பலாவு, மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், எரித்திரியா ஆகியவை முதல் முறையாக போட்டியிட்டன. தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டதாலும் விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாலும் ஆப்கானித்தானுக்கு போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மூன்று தங்க பதக்கத்தையும் இரண்டு வெண்கல பதகத்தையும் வென்ற அமெரிக்காவின் மெரியன் சோன்சு தான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக அக்டோபர் 2007ல் அறிவித்து ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை துறந்தார்[1]. ஒலிம்பிக் ஆணையகம் மரியமின் 5 பதக்கங்களையும் அவர் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கத்தையும் பறிக்கப்பட்ட போதிலும் குழுவினர் பதக்கத்தை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது. இறுதியாக அவரின் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. மெரியன் சோன்சு இரண்டு ஆண்டுகளுக்கு போட்டியில் ஈடுபட உலக தடகள அமைப்பால் தடைவிதிக்கப்பட்டார்[2].

2008 ஆகத்து 2 அன்று அன்டானியோ பென்னிகுரோவ் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக தெரிவித்ததால் அமெரிக்க ஆண்கள் 400x4 தொடர் ஓட்ட குழுவின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன[3]. இறுதி ஓட்டத்தில் கலந்துகொண்ட நால்வரில் மூவர் போதை மருந்து உட்கொண்டதாக சோதனையில் தெரியவந்தது. ஆரம்ப ஓட்டத்தில் கலந்து கொண்ட ஆஞ்சலொ தைலரும் உலக சாதனையாளர் மைக்கேல் ஜான்சனும் குற்றம் சாட்டப்படவில்லை[3]. இது மைக்கேல் ஜான்சனுக்கு ஐந்தாவது தங்கமாகும். அன்டானியோவின் கூற்றால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்வதால் இந்த தங்கப்பதக்கத்தை முன்பே தான் திருப்பிதர முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[3]. இப்போட்டியின் தங்கப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.

ஏப்பிரல் 28, 2010 அன்று ஒலிம்பிக் ஆணையகம் சீனாவின் பெண்கள் சீருடற்பயிற்சிகள் அணி பெற்ற வெண்கலப்பதக்கத்தை அப்போட்டியில் அனுமதிக்கப்பட்டதை(16 வயது) விட வயது 2 வயது குறைந்தவரை கொண்டு பெறப்பட்டதால் திரும்ப பெற்றது. அப்பதக்கம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது.[4]

சனவரி 16, 2013ல் ஒலிம்பிக் ஆணையகம் லான்சு ஆம்ஸ்டிராங் மிதிவண்டி போட்டியில் பெற்ற வெண்கலப்பதக்கத்தை அவர் ஏமாற்றி பெற்றார் என்று திரும்ப பெற்றது. [5][6]

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

1993ம் ஆண்டு மான்டே கார்லோ [7]நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆணையகத்தின் 101வது அமர்வில் 2000வது ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த நடைபெற்ற தேர்தலில் சிட்னி ஒலிம்பிக் போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது.

2000 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[8]
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
சிட்னி ஆத்திரேலியா 30303745
பெய்ஜிங் சீனா 32374043
மான்செஸ்டர் ஐக்கிய இராச்சியம் 111311
பெர்லின் செருமனி 99
இசுதான்புல் துருக்கி 7

பதக்கப் பட்டியல்

மொத்தம் 80 நாடுகள் பதக்கம் பெற்றன,

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஐக்கிய அமெரிக்கா37243293
2 உருசியா32282989
3 சீனா28161458
4 ஆத்திரேலியா*16251758
5 செருமனி13172656
6 பிரான்சு13141138
7 இத்தாலி1381334
8 நெதர்லாந்து129425
9 கியூபா1111729
10 ஐக்கிய இராச்சியம்1110728
11 உருமேனியா116926
12 தென் கொரியா8101028
13 அங்கேரி86317
14 போலந்து65314
15 சப்பான்58518
16 பல்கேரியா56213
17 கிரேக்க நாடு46313
18 சுவீடன்45312
19 நோர்வே43310
20 எதியோப்பியா4138
21 உக்ரைன்3101023
22 கசக்கஸ்தான்3407
23 பெலருஸ்331117
24 கனடா33814
25 எசுப்பானியா33511
26 துருக்கி3025
27 ஈரான்3014
28 செக் குடியரசு2338
29 கென்யா2327
30 டென்மார்க்2316
31 பின்லாந்து2114
32 ஆஸ்திரியா2103
33 லித்துவேனியா2035
34 அசர்பைஜான்2013
34 பஹமாஸ்2013
36 சுலோவீனியா2002
37 சுவிட்சர்லாந்து1629
38 இந்தோனேசியா1326
39 சிலவாக்கியா1315
40 மெக்சிக்கோ1236
41 நைஜீரியா1203
42 அல்ஜீரியா1135
43 உஸ்பெகிஸ்தான்1124
44 லாத்வியா1113
44 யுகோசுலாவியா1113
46 நியூசிலாந்து1034
47 எசுத்தோனியா1023
47 தாய்லாந்து1023
49 குரோவாசியா1012
50 கமரூன்1001
50 கொலம்பியா1001
50 மொசாம்பிக்1001
53 பிரேசில்06612
54 ஜமேக்கா0639
55 பெல்ஜியம்0235
55 தென்னாப்பிரிக்கா0235
57 அர்கெந்தீனா0224
58 சீன தைப்பே0145
58 மொரோக்கோ0145
60 வட கொரியா0134
61 மல்தோவா0112
61 சவூதி அரேபியா0112
61 டிரினிடாட் மற்றும் டொபாகோ0112
64 அயர்லாந்து0101
64 உருகுவை0101
64 வியட்நாம்0101
64 இலங்கை0101
68 சியார்சியா0066
69 கோஸ்ட்டா ரிக்கா0022
69 போர்த்துகல்0022
71 ஆர்மீனியா0011
71 பார்படோசு0011
71 சிலி0011
71 ஐசுலாந்து0011
71 இந்தியா0011
71 இசுரேல்0011
71 குவைத்0011
71 கிர்கிசுத்தான்0011
71 மாக்கடோனியக் குடியரசு0011
71 கட்டார்0011
மொத்தம்300300327927

மேற்கோள்கள்

  1. "Jones Returns 2000 Olympic Medals". Channel4.com. பார்த்த நாள் 8 October 2007.
  2. "IOC strips Jones of all 5 Olympic medals". Associated Press. MSNBC. 12 December 2007. http://nbcsports.msnbc.com/id/22170098/. பார்த்த நாள்: 12 May 2010.
  3. Wilson, Stephen (2 August 2008). "IOC strips gold from 2000 US relay team". Associated Press.
  4. "IOC strips 2000 Games bronze medal from China". USA Today. Associated Press. 28 April 2010. Archived from the original on 1 May 2010. http://nbcsports.msnbc.com/id/35610686/ns/sports-olympic_sports/. பார்த்த நாள்: 12 May 2010.
  5. "IOC Statement on Lance Armstrong". International Olympic Committee (17 January 2013).
  6. "Lance Armstrong stripped of Olympic medal, Disgraced cyclist won bronze at the 2000 Sydney Games". 17 January 2013. http://www.independent.co.uk/sport/general/others/lance-armstrong-stripped-of-olympic-medal-8455813.html.
  7. IOC Vote History
  8. GamesBids.com Past Olympic Host Cities List
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.