1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மொண்ட்ரியால் நகரில் சூலை 17 முதல் ஆகத்து 1 வரை 1976ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XXI ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இதுவே கனடாவில் நடந்த முதல் ஒலிம்பிக் ஆகும்.

நியூசிலாந்தின் ரக்பி அணி தடைவிதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ததால் நியூசிலாந்தை இவ்வொலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகம் ஏற்காததால் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் இப்போட்டியை புறக்கணித்தன. செனிகலும் கோட் டிவாரும் இப் புறக்கணிப்பில் பங்கேற்க வில்லை. ஈராக்கும் கினியும் புறக்கணிப்பில் பங்கேற்றன. இப்புறக்கணிப்பை மக்கள் கொங்கோ குடியரசு தலைமையேற்று நடத்தியது.

கயானா, மாலி, சுவாசிலாந்து ஆகியவை தொடக்க விழாவில் பங்கு பெற்று பின் காங்கோ தலைமையிலான புறக்கணிப்பில் பங்குபெற்றன. [1]

இதற்கு தொடர்பற்ற இன்னொரு புறக்கணிப்பு சீன குடியரசால் நடத்தப்பட்டது. கனடா அரசு மக்கள் சீன குடியரசை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டதால் சீன குடியரசு என்ற பெயரில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததால் அந்நாடு போட்டியை புறக்கணித்தது.

அந்தோரா, அன்டிகுவா பர்புடா (ஆண்டிகுவா என்ற பெயரில்), கேமன் தீவுகள், பப்புவா நியூ கினி ஆகியநான்கு நாடுகள் முதன்முதல் கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்குபெற்றன.


போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு

ஆம்ஸ்டர்டாம் நகரில் மே 2, 1970 ல் நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 69 வது அமர்வில் மொண்டிரியால் தேர்வு பெற்றது[2].

1976 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்s[3]
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2
மொண்ட்ரியால் கனடா2541
மாசுக்கோ சோவியத் ஒன்றியம்2828
லாஸ் ஏஞ்சலஸ் ஐக்கிய அமெரிக்கா17


பதக்கப் பட்டியல்

      போட்டையை நடத்தும் நாடு கனடா

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சோவியத் ஒன்றியம்494135125
2 கிழக்கு ஜேர்மனி40252590
3 ஐக்கிய அமெரிக்கா34352594
4 மேற்கு செருமனி10121739
5 சப்பான்961025
6 போலந்து761326
7 பல்கேரியா69722
8 கியூபா64313
9 உருமேனியா491427
10 அங்கேரி451322
11 பின்லாந்து4206
12 சுவீடன்4105
13 ஐக்கிய இராச்சியம்35513
14 இத்தாலி27413
15 பிரான்சு2349
16 யுகோசுலாவியா2338
17 செக்கோசிலோவாக்கியா2248
18 நியூசிலாந்து2114
19 தென் கொரியா1146
20 சுவிட்சர்லாந்து1124
21 ஜமேக்கா1102
 வட கொரியா1102
 நோர்வே1102
24 டென்மார்க்1023
25 மெக்சிக்கோ1012
26 டிரினிடாட் மற்றும் டொபாகோ1001
27 கனடா05611
28 பெல்ஜியம்0336
29 நெதர்லாந்து0235
30 போர்த்துகல்0202
 எசுப்பானியா0202
32 ஆத்திரேலியா0145
33 ஈரான்0112
34 மங்கோலியா0101
 வெனிசுவேலா0101
36 பிரேசில்0022
37 ஆஸ்திரியா0011
 பெர்முடா0011
 பாக்கித்தான்0011
 புவேர்ட்டோ ரிக்கோ0011
 தாய்லாந்து0011
மொத்தம்198199216613

மேற்கோள்கள்

  1. (PDF) Complete official IOC report. Part I. http://www.la84foundation.org/6oic/OfficialReports/1976/1976v1p2.pdf. பார்த்த நாள்: 18 October 2012.
  2. http://www.aldaver.com/votes.html
  3. "Past Olympic host city election results". GamesBids. மூல முகவரியிலிருந்து March 17, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 17, 2011.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.