1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (எசுப்பானியம்: Juegos Olímpicos de Verano de 1968), அலுவல்முறையாக XIX ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள், அக்டோபர் 1968இல் மெக்சிக்கோவின் தலைநகரம் மெக்சிக்கோ நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

XIX ஒலிம்பிக் போட்டிகள்
நடத்தும் நகரம்மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
நிகழ்ச்சிகள்172 - 20 விளையாட்டுகள்
துவக்க நிகழ்வுஒக்டோபர் 12
இறுதி நிகழ்வுஅக்டோபர் 27
அரங்குகள்பல்கலைக்கழக ஒலிம்பிக் விளையாட்டரங்கம்

இலத்தீன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இதுவாகும். எசுப்பானிய மொழி பேசும் நாடொன்றில் நடத்தப்பட முதல் நிகழ்வும் இதுவேயாகும். ஓர் வளர்ந்து வரும் பொருளாதார நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக்கும் இதுவாகும். இந்தப் போட்டிகளில் வழக்கமான சாம்பல் தடகளத்திற்கு மாற்றாக அனைத்து-வானிலை (கெட்டியான) தடகளம் அமைக்கப்பட்டது.

இலையுதிர் காலத்தில் நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது; முன்னதாக 1956 மெல்பேர்ண் ஒலிம்பிக்கும் 1964 தோக்கியோ ஒலிம்பிக்கும் அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.

பதக்கப் பட்டியல்

1968 கோடைக்கால ஒலிம்பிக்கில் மிகுந்தப் பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகள்: ஏற்று நடத்திய மெக்சிக்கோ ஒவ்வொருவகைப் பதக்கத்திலும் மூன்று பதக்கங்களை வென்றது (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்).

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஐக்கிய அமெரிக்கா452834107
2 சோவியத் ஒன்றியம்29323091
3 சப்பான்117725
4 அங்கேரி10101232
5 கிழக்கு ஜேர்மனி99725
6 பிரான்சு73515
7 செக்கோசிலோவாக்கியா72413
8 மேற்கு செருமனி5111026
9 ஆத்திரேலியா57517
10 ஐக்கிய இராச்சியம்55313
15 மெக்சிக்கோ (நடத்திய நாடு) 3339

வெளி இணைப்புகள்

முன்னர்
தோக்கியோ
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
மெக்சிக்கோ நகரம்

XIX ஒலிம்பியாடு (1968)
பின்னர்
மியூனிக்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.