கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Summer Olympic Games) அல்லது ஒலிம்பியட்டின் விளையாட்டுக்கள் (Games of the Olympiad) பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு விளையாட்டு நிகழ்வாகும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தக் கொடுக்கப்படும் வாய்ப்பை இந்த நகரங்கள் பெரும் கௌரவமாகக் கருதுகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இரண்டாண்டுகள் கழித்து குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. இவை குளிர் பிரதேசங்களில், மலைப்பாங்கான நகரங்களில் நடத்தப்படுகின்றன. குளிர்கால ஒலிம்பிக்கை விட கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெரும்பான்மையான நாடுகள் பங்கேற்கின்றன.

ஒலிம்பிக் விளையாட்டுக்களின் சின்னமாக ஒலிம்பிக் வளையங்கள் திகழ்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைக் கிரேக்கத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்துள்ளன. கிரேக்க இராச்சியங்களின் வீழ்ச்சியால் பல நூற்றாண்டுகளாக தடைபட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பியர் தெ குபர்த்தென் மீண்டும் நிறுவினார். தற்கால கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏதென்ஸ் நகரில் 1896இல் முதன்முதலாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் ஒலிம்பிக் போட்டிகளில் 200 கிரேக்கப் போட்டியாளர்களும் 13 நாடுகளிலிருந்து 45 போட்டியாளர்களும் பங்கேற்றனர். 1904 முதல் முதல் மூன்று இடங்களை எட்டிய போட்டியாளர்களுக்கு (அல்லது அணிகளுக்கு) பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

துவக்ககால ஒலிம்பிக் போட்டிகளில் 42 போட்டிகளே இருந்தன; ஆனால் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 302 போட்டிகளில் 10,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.[1]

கோடைக்கால ஒலிம்பிக்கை மற்றெந்த நாடுகளை விட ஐக்கிய அமெரிக்கா நான்கு முறை ஏற்று நடத்தியுள்ளது. ஐக்கிய இராச்சியம் மூன்றாம் முறையாக 2012இல் ஏற்று நடத்தியுள்ளது. இதன் தலைநகர் இலண்டன் மூன்று முறையும் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தி இவ்வாறு மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஒரே நகரமாக விளங்குகிறது. ஆத்திரேலியா, பிரான்சு, செருமனி மற்றும் கிரீசு கோடைக்கால ஒலிம்பிக்கை இருமுறைகள் நடத்தியுள்ளன. கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்திய மற்ற நாடுகளாவன; பெல்ஜியம், சீனா, கனடா, பின்லாந்து, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, நெதர்லாந்து, தென் கொரியா, எசுப்பானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் சுவீடன். 2016இல், தென் அமெரிக்காவில் முதன்முறையாக இரியோ டி செனீரோ நகரம் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தவிருக்கிறது. மூன்று நகரங்கள் இருமுறை இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தி உள்ளன: லாஸ் ஏஞ்சலஸ், பாரிஸ் மற்றும் ஏதென்ஸ். சுவிடனின் ஸ்டாக்ஹோம் இரு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போட்டிகளை நடத்தியுள்ளது; 1912இல் முழுமையாகவும் 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குதிரையேற்ற நிகழ்வுகளை மட்டும் நடத்தி உள்ளது. [2] இதேபோல் 1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் போது பாய்மரப் படகோட்டப் போட்டிகள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரத்திலும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போது குதிரையேற்றப் போட்டிகள் மட்டும் ஹாங்காங்கிலும் நடத்தப்பட்டன.

அனைத்து கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் ஐந்து நாடுகள் – கிரீசு, பிரான்சு, பெரிய பிரித்தானியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஆத்திரேலியா – தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளன. அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் குறைந்தது ஒரு தங்கப் பதக்கமாவது பெற்ற நாடாக பெரிய பிரித்தானியா விளங்குகிறது.

இதுவரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற மொத்த பதக்கப் பட்டியல்

பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அலுவல்பூர்வ தரவுகளின்படி முதல் பத்து நாடுகளின் பதக்கப் பட்டியல்.

     இப்போதில்லாத நாடுகள்

#நாடுவிளையாட்டுக்கள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா269767586662400
2  சோவியத் ஒன்றியம்93953192961010
3  ஐக்கிய இராச்சியம்27236272272780
4  பிரான்சு27202223246671
5  சீனா9201144128473
6  இத்தாலி26198166185549
7  செருமனி15174182217573
8  அங்கேரி25167144165476
9  கிழக்கு ஜேர்மனி5153129127409
10  சுவீடன்26143164176483
11  ஆத்திரேலியா25138153177468

தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல்

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்த இடங்கள். கோடைக்கால ஒலிம்பிக்கை ஒருமுறை நடத்திய நாடுகள் பச்சை வண்ணத்திலும் இரண்டு அல்லது மேற்பட்ட முறைகள் நடத்தியவை நீல வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளன.
விளையாட்டுக்கள் ஆண்டு நடத்திய நாடு திறப்பு நாட்கள் நாடுகள் போட்டியாளர்கள் விளையாட்டுக்கள் துறைகள் நிகழ்வுகள் உசா
மொத்தம் ஆண் பெண்
I 1896 ஏதென்ஸ், கிரேக்கம் மன்னர் ஜார்ஜ் I 6–15 ஏப்ரல் 14241241091043
II 1900 பாரிஸ், பிரான்சு N/A 14 மே – 28 அக்டோபர் 2499797522192085A[]
III 1904 செயின்ட் லூயிஸ் (மிசூரி), அமெரிக்க ஐக்கிய நாடு ஆளுநர் டேவிட் ஆர். பிரான்சிஸ் 1 சூலை – 23 நவம்பர் 126516456161794B[]
IV 1908 இலண்டன், ஐக்கிய இராச்சியம் மன்னர் எட்வர்டு VII 27 ஏப்ரல் – 31 அக்டோபர் 2220081971372225110
V 1912 ஸ்டாக்ஹோம், சுவீடன் மன்னர் குசுத்தாவ் V 6–22 சூலை 2824072359481418102
VI 1916 பெர்லினுக்கு வழங்கப்பட்டு, முதல் உலகப் போர் காரணமாக கைவிடபட்டது
VII 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் மன்னர் ஆல்பர்ட் I 20 ஏப்ரல் – 12 செப்டம்பர் 2926262561652229156C[]
VIII 1924 பாரிஸ், பிரான்சு அரசுத்தலைவர் கசுத்தோன் டவுமெர்கு 4 மே – 27 சூலை 44308929541351723126
IX 1928 ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து நெதர்லாந்தின் இளவரசர் என்றி 28 சூலை – 12 ஆகத்து 46288326062771420109
X 1932 லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்க ஐக்கிய நாடு துணைத் தலைவர் சார்லசு கர்ட்டிசு 30 சூலை – 14 ஆகத்து 37133212061261420117
XI 1936 பெர்லின், செருமனி சான்சுலர் அடொல்ஃப் இட்லர் 1–16 ஆகத்து 49396336323311925129
XII 1940 முதலில் தோக்கியோவிற்கு வழங்கப்பட்டது, பின்னர் ஹெல்சிங்கிக்கு வழங்கப்பட்டது, இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது
XIII 1944 இலண்டனுக்கு வழங்கப்பட்டு இரண்டாம் உலகப்போர் காரணமாக கைவிடப்பட்டது
XIV 1948 இலண்டன், ஐக்கிய இராச்சியம் மன்னர் ஜோர்ஜ் VI 29 சூலை – 14 ஆகத்து 59410437143901723136
XV 1952 ஹெல்சின்கி, பின்லாந்து தலைவர் யுகோ குசுத்தி பாசிகிவி 19 சூலை – 3 ஆகத்து 69495544365191723149
XVI 1956 மெல்பேர்ண், ஆஸ்திரேலியா எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் 22 நவம்பர் – 8 திசம்பர் 72D[]331429383761723151E[]
XVII 1960 உரோமை நகரம், இத்தாலி தலைவர் கியோவன்னி குரோஞ்சி 25 ஆகத்து – 11 செப்டம்பர் 83533847276111723150
XVIII 1964 தோக்கியோ, ஜப்பான் பேரரசர் ஹிரோஹிட்டோ 10–24 அக்டோபர் 93515144736781925163
XIX 1968 மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ தலைவர் குசுத்தாவொ டியாசு ஓர்டாசு 12–27 அக்டோபர் 112551647357811824172
XX 1972 மியூனிக், மேற்கு செருமனி தலைவர் குசுத்தாவ் எயின்மேன் 26 ஆகத்து – 10 செப்டம்பர் 1217134607510592128195
XXI 1976 மொண்ட்ரியால், கனடா எலிசபெத் அரசி 17 சூலை – 1 ஆகத்து 926084482412602127198
XXII 1980 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் அவைத்தலைவர் லியோனிட் பிரெஷ்னெவ் 19 சூலை – 3 ஆகத்து 805179406411152127203
XXIII 1984 லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்க ஐக்கிய நாடு தலைவர் ரோனால்டு ரீகன் 28 சூலை – 12 ஆகத்து 1406829526315662129221
XXIV 1988 சியோல், தென் கொரியா தலைவர் ரோ டே-வூ 17 செப்டம்பர் – 2 அக்டோபர் 1598391619721942331237
XXV 1992 பார்செலோனா, எசுப்பானியா மன்னர் யுவான் கார்லோசு I 25 சூலை – 9 ஆகத்து 1699356665227042534257
XXVI 1996 அட்லான்டா, அமெரிக்க ஐக்கிய நாடு தலைவர் பில் கிளின்டன் 19 சூலை – 4 ஆகத்து 19710318680635122637271
XXVII 2000 சிட்னி, ஆஸ்திரேலியா தலைமை ஆளுநர் சேர் வில்லியம் டீன் 15 செப்டம்பர் – 1 அக்டோபர் 19910651658240692840300
XXVIII 2004 ஏதென்ஸ், கிரேக்கம் (நாடு) தலைவர் கான்சுடான்டினோசு இசுடெபோனோபவலோசு 13–29 ஆகத்து 20110625629643292840301
XXIX 2008 பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு தலைவர் கூ சிங்தாவ் 8–24 ஆகத்து 20410942630546372841302
XXX 2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம் எலிசபெத் அரசி 27 சூலை – 12 ஆகத்து 20410568589246762639302
XXXI 2016 இரியோ டி செனீரோ, பிரேசில் 5–21 ஆகத்து வருங்கால நிகழ்வு 2841306
XXXII 2020 தோக்கியோ, ஜப்பான் 24 சூலை – 9 ஆகத்து வருங்கால நிகழ்வு
XXXIII 2024 தேர்வு: 2017 வருங்கால நிகழ்வு
XXXIV 2028 தேர்வு: 2021 வருங்கால நிகழ்வு

^ அ: 1900 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 95 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[3] பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தரவுதளத்தில் 1900 ஒலிம்பிக் போட்டிகளில்[4] 85 நிகழ்வுகளாகப் பதியப்பட்டுள்ளன. இந்த வேறுபாடு பில் மல்லோன் எழுதிய "1900 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் — பகுப்பாய்வும் சுருக்கங்களும்"[5] என்ற பதிப்பிலிருந்து எழுந்திருக்கலாம்; இதில் மல்லோன் எந்தெந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் தன்மையானவை என்ற தனது கருத்தையொட்டி எழுதியுள்ளார்.
^ ஆ: 1904 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 91 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[6] பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தரவுதளத்தில் 1904 ஒலிம்பிக் போட்டிகளில்[7] 94 நிகழ்வுகளாகப் பதியப்பட்டுள்ளன. இந்த வேறுபாடு பில் மல்லோன் எழுதிய "1904 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் — பகுப்பாய்வும் சுருக்கங்களும்"[8] என்ற பதிப்பிலிருந்து எழுந்திருக்கலாம்; இதில் மல்லோன் எந்தெந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் தன்மையானவை என்ற தனது கருத்தையொட்டி எழுதியுள்ளார்.
^ இ: 1920 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 154 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[9] பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தரவுதளத்தில் 1920 ஒலிம்பிக் போட்டிகளில்[10] 156 நிகழ்வுகளாகப் பதியப்பட்டுள்ளன.
^ ஈ: ஆத்திரேலிய ஒதுக்கிடம் சட்டங்களால், 1956 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான 6 குதிரையேற்ற நிகழ்வுகளை மெல்பேர்ண் நகரில் மற்ற விளையாட்டு நிகழ்வுகள் நடப்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே ஸ்டாக்ஹோம் நகரில் நடத்தியது; இதில் 72 போட்டியாளர்கள் 5 நாடுகளலிருந்து கலந்து கொண்டனர். இவர்கள் மெல்பேர்ணுக்கு வரவில்லை.
^ உ: 1956 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 145 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[11] உண்மையில் 145 நிகழ்வுகள் மெல்பேர்ணிலும் 6 நிகழ்வுகள் ஸ்டாக்ஹோமிலும் நடந்தமையால் மொத்தம் 151 நிகழ்வுகள் என்றிருக்க வேண்டும்.

குறிப்பு: 1916, 1940, மற்றும் 1944 ஆண்டுகளில் விளையாட்டுப் போட்டிகள் கைவிடப்பட்டாலும் அவற்றிற்கும் உரோம எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன;இது ஒலிம்பிக் சாசனத்தின்படி விளையாட்டுக்களை எண்ணாது ஒலிம்பியடுகளை கணக்கில் கொள்வதால் விளைகின்றது. எதிராக குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இம்முறை பின்பற்றப்படாது கைவிடப்பட்ட 1940 & 1944 விளையாட்டுக்களுக்கு எண்கள் தரப்படவில்லை.

மேற்சான்றுகள்

  1. "Beijing 2008: Games Programme Finalised". International Olympic Committee. 2006-04-27. http://olympic.org/uk/news/olympic_news/full_story_uk.asp?id=1797. பார்த்த நாள்: 2006-05-10.
  2. "Melbourne / Stockholm 1956". பன்னாட்டு ஒலிம்பிக் குழு. பார்த்த நாள் 5 September 2008.
  3. "IOC site for the 1900 Olympic Games". Olympic.org. பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  4. "IOC database for the 1900 Olympic Games". Olympic.org. பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  5. ""1900 Olympic Games — Analysis and Summaries"" (PDF). பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  6. "IOC site for the 1904 Olympic Games". Olympic.org. பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  7. "IOC database for the 1904 Olympic Games". Olympic.org. பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  8. ""1904 Olympic Games — Analysis and Summaries"" (PDF). பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  9. "IOC site for the 1920 Olympic Games". Olympic.org. பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  10. "IOC database for the 1920 Olympic Games". Olympic.org. பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.
  11. "IOC site for the 1956 Olympic Games". Olympic.org (1956-11-22). பார்த்த நாள் 2014 பிப்ரவரி 10.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.