ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.

இரண்டாம் எலிசபெத்
Elizabeth II
ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய நாடுகளின் அரசி (more...)
2007 இல் எலிசபெத்
ஆட்சி பெப்ரவரி 6, 1952 – இற்றைவரை
( ஆண்டுகள், 233 நாட்கள்)
முடிசூடல் ஜூன் 2, 1953
முன்னிருந்தவர் ஆறாம் ஜோர்ஜ்
முடிக்குரியவர் வேல்சு இளவரசர் சார்லசு
உடனுறை துணை பிலிப், எடின்பரோ கோமகன்
பிள்ளைகள்
சார்ல்ஸ்
ஆன்
ஆண்ட்ரூ
எட்வேர்ட்
முழுப்பெயர்
எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி
வேந்திய மரபு வின்சர் மரபு
வேந்தியப் பண் அரசியைக் கடவுள் காப்பாராக
தந்தை ஜோர்ஜ் VI
தாய் எலிசபெத் போவ்ஸ்-லயோன்
பிறப்பு 21 ஏப்ரல் 1926 (1926-04-21)
லண்டன்
திருமுழுக்கு மே 29, 1926
பக்கிங்ஹாம் அரண்மனை, லண்டன்

பெப்ரவரி 6, 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. 67 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.

எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947 இல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்: சார்லசு, ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

எலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.

அரசியின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைகளிலும் சந்திப்புகளிலும் அயர்லாந்து குடியரசுக்கான அரசுப் பயணமும reciprocal visits to and from the திருத்தந்தையுடனான சந்திப்புக்களும் முதன்மையானவை. தனது ஆளுமைக்குட்பட்ட நாடுகளில் பல அரசியல்சட்ட மாற்றங்களை கண்டுள்ளார்; ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு மற்றும் கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப் பெறல் போன்றவை. தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் முதன்மையான நிகழ்ச்சிகளாகும்.

அரசியின் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளாக வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்கள் விளங்குகின்றன. அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபுவின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. அரச குடும்பம் மற்றும் குடியரசு கொள்கைகளுக்காக ஊடகங்களில் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும் இவரது ஆட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளதுடன் தனிப்பட்ட முறையிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.

மக்கள்

பெயர்பிறப்புதிருமணம்பிள்ளைகள்பேரப்பிள்ளைகள்
வேல்சு இளவரசர் சார்லசு14 நவம்பர் 194829 சூலை 1981
மணமுறிவு 28 ஆகத்து 1996
டயானா இசுபென்சர் கோமகள்இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
வேல்சு இளவரசர் ஹாரி
9 ஏப்ரல் 2005கேமில்லா ஷேண்ட்
இளவரசி ஆன்15 ஆகத்து 195014 நவம்பர் 1973
மணமுறிவு 28 ஏப்ரல் 1992
மார்க் பிலிப்சுபீட்டர் பிலிப்சுசாவன்னா பிலிப்சு
இசுலா பிலிப்சு
சாரா பிலிப்சு
12 திசம்பர் 1992டிமோத்தி லாரன்சு
இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்19 பெப்ரவரி 196023 சூலை 1986
மணமுறிவு 30 மே 1996
சாரா பெர்குசன்யார்க் இளவரசி பீட்ரைசு
யார்க் இளவரசி யூஜெனி
இளவரசர் எட்வர்டு, வெசக்சு பிரபு10 மார்ச்சு 196419 சூன் 1999சோபி ரைசு-ஜோன்சுலூயி வின்ட்சர் சீமாட்டி
ஜேம்சு, செவர்ன் கோமகன்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.