செக்கோசிலோவாக்கியா

செக்கோசிலோவாக்கியா அல்லது செக்கோ-சிலோவாக்கியா[1] (Czech and Slovak: Československo, Česko-Slovensko[2]) என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரியா-அங்கேரி இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் இறைமையுள்ள நாடாக இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை நாட்சி ஜெர்மனியால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது.

செக்கோசிலோவாக்கியா

 

1918–1992
 

 


1920லிருந்து

குறிக்கோள்
செக் மொழி: en:Pravda vítězí
("வாய்மையே வெல்லும்"; 1918–1990)
இலத்தீன்: Veritas vincit
("வாய்மையே வெல்லும்"; 1990–1992)
நாட்டுப்பண்
en:Kde domov můj and en:Nad Tatrou sa blýska (முதல் வரிகள் மட்டும்)
செக்கோசிலோவாக்கியா அமைவிடம்
தலைநகரம் பிராகா (Praha)
மொழி(கள்) செக் மொழி and சுலோவாக்கிய மொழி
அரசாங்கம் குடியரசு
அதிபர்தாம்ஸ் மசர்க்(முதல்)
வரலாறு
 - சுதந்திரம் 28 அக்டோபர் 1918
 - புரட்சி 1945
 - குலைவு 31 டிசம்பர் 1992
பரப்பளவு
 - 1921 1,40,446 km² (54,227 sq mi)
 - 1993 1,27,900 km² (49,382 sq mi)
மக்கள்தொகை
 -  1921 est. 1,36,07,385 
     அடர்த்தி 96.9 /km²  (250.9 /sq mi)
 -  1993 est. 1,56,00,000 
     அடர்த்தி 122 /km²  (315.9 /sq mi)
நாணயம் செக்கோசிலோவக் கொருனா
இணைய குறி .cs
Current ISO 3166-3 code:        CSHH

அண்டை நாடுகள்

1969ல் செக்கோசிலோவாக்கியா.
1930 ல் செக்கோஸ்லோவாக்கியா மொழியியல் வரைபடம்

இனப் பிரிவுகள்


செக்கோசிலோவாக்கியாவின் இனப் பிரிவுகள் 1921[3]


மொத்த மக்கள்தொகை13,607.385
செக்கோசிலோவாக்கியர்கள்8,759.70164.37 %
செருமனி3,123.30522.95 %
அங்கேரியர்கள்744.6215.47 %
ருதனியர்கள்461.4493.39 %
யூதர்*180.5341.33 %
போல்ஸ்75.8520.56 %
இதர23.1390.17 %
வெளிநாட்டினர்238.7841.75 %

சமயம்

1991ம் ஆண்டின் படி, கத்தோலிக்க திருச்சபை 46.4%, லூதரனியம் 5.3%, இறைமறுப்பு 29.5%, கணக்கில்லாதவர்கள் 16.7% என இருந்தனர்.

விளையாட்டுகள்

செக்கோசிலோவாக்கியா தேசிய கால்பந்து அணி என்ற அணியின் மூலமாக எட்டு முறை உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்துகொண்டு, 1934 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் இரண்டாமிடம் பெற்றது. இவ்வணி 1980ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. செக்கோசிலோவாக்கியா தேசிய பனி வளைதடிப் பந்தாட்ட அணி மூலமாக ஒலிம்பிக்கில் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. எமில் ஜடொபக் என்பவர் ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்களில் நான்குமுறை தங்கம் வென்றுள்ளார். பிரபலமான டென்னிசு வீரர்களான மார்டினா ஹிங்கிஸ் மார்ட்டினா நவரோத்திலோவா மற்றும் இவான் லென்டி, மிலோசவ் மிகிர் போன்றவர்கள் செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர்கள்

மேற்கோள்கள்

மூலம்

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.