சீன வானொலி நிலையம் (தமிழ்)

சீன வானொலி நிலையம் (தமிழ்) சீன வானொலி நிலையத்தின் தமிழ்ச் சேவை ஆகும். சீன வானொலி நிலையம் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய ஒலிபரப்புச் சேவை ஆகும். இது 43 மொழிகளில் தற்போது ஒலிபரப்பு செய்கிறது. அவற்றுள் தமிழும் ஒன்று. சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு, 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் தொடங்கியது. [1]. தமிழ்ப் பிரிவிற்கு 22 ஆயிரத்திற்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். சீனாவுக்கும் உலக நாடுகளின் மக்களுக்கும் புரிந்துணர்வை வளர்ப்பதற்காக இந்த வானொலிச் சேவை ஏற்படுத்தப்பட்டது. இது சீனக் கண்ணோட்டத்தில் செய்திகளையும் கருத்துரைகளையும் தருகிறது. செய்தி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் என பல துறை சார் தகவல்களைப் பகிர்கிறது. சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தலைவராக தற்போது கலைமகள் என்கிற சாவோ ஜியாங் இருக்கிறார். இந்தச் செய்திச் சேவையை இங்கிலாந்தின் பிபிசி தமிழோசையுடன் ஒப்பிட முடியும். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு, 2013 ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது. [2] தமிழ் நேயர் மன்றக் கருத்தரங்குகள் பல முறை நிகழ்ந்துள்ளன. இது "சீனத் தமிழொலி" என்ற இதழை வெளியிடுகிறது.

சீன வானொலி நிலையத்தின் தமிழ்ச் சேவை இணையத்தளம்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.