கரீம் பென்சிமா

கரீம் மொஸ்தஃபா பென்சிமா (Karim Mostafa Benzema, திசம்பர் 19,1987) பிரான்சின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பிரான்சியத் தேசிய காற்பந்தணிக்கும் லா லீகாவில் எசுப்பானியக் கழகமான ரியல் மாட்ரிட்டிற்காகவும் ஆடி வருகிறார். முன்னணி தாக்கு வீரராக விளையாடும் இவர் நடுக்கள ஆட்ட வீரராகவும் விளையாடும் திறனுடையவர்.[3] "ஆழ்ந்த-திறனுள்ள விளையாட்டாளர்" என்றும் "ஆட்டத்தை முடிப்பவர்" என்றும் பாராட்டப்படுகிறார்.[4]

கரீம் பென்சிமா

யூரோ 2012 போது பென்சிமா.
சுய விவரம்
முழுப்பெயர்Karim Mostafa Benzema[1]
பிறந்த தேதி19 திசம்பர் 1987 (1987-12-19)
பிறந்த இடம்லியோன், பிரான்சு
உயரம்1.87 m (6 ft 2 in)[2]
ஆடும் நிலைமுன்னணி தாக்கு வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்ரியல் மாட்ரிட்
எண்9
இளநிலை வாழ்வழி
1996–2005லியோன்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2004–2006லியோன் பி20(15)
2004–2009லியோன்112(43)
2009–ரியல் மாட்ரிட்159(72)
தேசிய அணி
2004பிரான்சு U174(1)
2004–2005பிரான்சு U1817(14)
2005–2006பிரான்சு U199(5)
2006–2007பிரான்சு U215(0)
2007–பிரான்சு67(23)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 15:56, 17 மே 2014 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 15 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

பென்சிமா பன்னாட்டளவில் பிரான்சிற்காக இளமைக் காலத்திலேயே விளையாடியவர். 17 அகவைக்கு குறைவானர்களுக்கான போட்டிகளில் தொடங்கி 18, 19, 21 அகவையினருக்கான போட்டிகளில் விளையாடியுள்ளார். மூத்தவர்களுக்கான அணியில் முதன்முதலாக மார்ச்சு 2007இல் ஆஸ்திரிய அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் பங்கேற்றார். தமது முதல் ஆட்டத்திலேயே தமது முதல் பன்னாட்டு கோலை அடித்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். பென்சிமா பிரான்சிற்காக ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியின் 2008 மற்றும் 2012 ஆண்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டிகளில் உருமேனியாவிற்கு எதிராகவும் இத்தாலிக்கு எதிராகவும் நடந்த குழுநிலை ஆட்டங்களில் பங்கேற்றார்.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.