இரியோ கிராண்டு டொ சுல்

இரியோ கிராண்டு டொ சுல் (Rio Grande do Sul, பொருள்: "தெற்கு மகா நதி ") பிரேசிலின் தெற்குக் கோடியில் அமைந்துள்ள மாநிலமாகும். நாட்டின் உயரிய மனித வளர்ச்சிச் சுட்டெண் (HDI) மாநிலங்களில் நான்காவதாகவும் மிக உயரிய வாழ்க்கைத்தரம் கொண்டதாகவும் விளங்குகிறது.[2] இந்த மாநிலத்தில் உள்ள சுயி என்ற நகரம் மிகவும் தெற்கு முனையில், உருகுவையின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் பென்ட்டோ கான்கிளேவ்சு, காக்சியசு டொ சுல் பகுதிகள் நாட்டின் பெரிய வைன் தயாரிப்பு மையங்களாக விளங்குகின்றன. ஐரோப்பிய தாக்கத்தைத் தவிர, இங்கு வாழும் உள்ளூர் கௌச்சோசுவினரின் (gaúchos) பம்பாசு உருகுவை, அர்கெந்தீனா எல்லையுடனான பகுதிகள் – பண்பாட்டையும் காணலாம்; காபி சேர்ந்த சிமர்ரோ என்ற பானத்தை இதற்கான சுரைக்காய் கோப்பைகளில் குடிப்பது, சுர்ராசுக்கோ எனப்படும் புறவெளிச் சமையல் உணவுகள், போம்பொச்சாசு எனப்படும் அகன்ற முழங்கால் கால்சராய்களும் பெரிய தொப்பிகளும் இவற்றில் அடங்கும்.

இரியோ கிராண்டு டொ சுல் மாநிலம்
மாநிலம்

கொடி

சின்னம்
குறிக்கோளுரை: லிபர்டேடு, ஈகுவல்டேடு, ஹுமானிடேடு (போர்த்துக்கேயம்)
"சுதந்திரம், சமத்துவம், மனிதநேயம்"
பண்: ஹினோ இரியோ கிராண்டென்சு

பிரேசிலில் இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரமும் பெரிய நகரமும்போர்ட்டோ அலெக்ரி
அரசு
  ஆளுநர்டார்சோ ஜென்ரோ
  துணை ஆளுநர்ஜோர்ஜ் ஆல்பர்ட்டோ "பெடோ" கிரில்
பரப்பளவு
  மொத்தம்[
பரப்பளவு தரவரிசை9th
மக்கள்தொகை (2012)[1]
  மொத்தம்10
  தரவரிசை5th
  அடர்த்தி38
  அடர்த்தி தரவரிசை13th
இனங்கள்Gaúcho or Sul-rio-grandense
GDP
  Year2008 estimate
  TotalR$ 199,499,000,000 (4th)
  Per capitaR$ 18.378,17 (6th)
HDI
  Year2005
  Category0.832 high (4th)
நேர வலயம்BRT (ஒசநே-3)
  கோடை (பசேநே)BRST (ஒசநே-2)
அஞ்சல் குறியீடு90000-000 to 99990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-RS
இணையதளம்rs.gov.br

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.