பெய்ரா ரியோ விளையாட்டரங்கம்
ஒசே பினெய்ரோ போர்டா விளையாட்டரங்கம், (Estádio José Pinheiro Borda) பிரேசிலின் போர்ட்டோ அலெக்ரி நகரில் அமைந்துள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இது குவையிபா (Guaíba) ஆற்றுக்கு அருகே அமைந்துள்ளதால் ஆற்றங்கரை விளையாட்டரங்கம் எனப் பொருள்படும் எசுடேடியோ பெய்ரா-இரியோ (Estádio Beira-Rio, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [esˈtadʒiu ˈbejɾɐ ˈʁiu], ) என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறது. இது பன்னாட்டு விளையாட்டுக் கழகத்திற்கு (Sport Club Internacional) தாயக விளையாட்டரங்கமாக விளங்குகிறது. இந்த விளையாட்டரங்கின் கட்டமைப்பில் பெரிதும் பங்கேற்று பணி முடிவதற்குள் இயற்கை எய்திய முதிய போர்த்துகேயப் பொறியாளர் ஓசெ பின்கைரோ போர்டா நினைவில் அலுவல்முறையாகப் பெயரிடப்பட்டுள்ளது.[1]
ஒசே பினெய்ரோ போர்டா விளையாட்டரங்கம் Estádio José Pinheiro Borda | |
---|---|
பெய்ரா-இரியோ, சிகான்டெ டா பெய்ரோ-இரியோ | |
![]() | |
முழு பெயர் | எசுடேடியோ யோசு பின்கைரோ போர்டா |
இடம் | பாத்ரெ காசிக் நிழற்சாலை, 621-1571, பிரையா டெ பெலாசு, போர்ட்டோ அலெக்ரி, இரியோ கிராண்டெ டொ சுல், பிரேசில் |
எழும்பச்செயல் ஆரம்பம் | செப்டம்பர் 12, 1956 |
திறவு | ஏப்ரல் 6, 1969 |
சீர்படுத்தது | இலையுதிர் 2013 |
உரிமையாளர் | பன்னாட்டு விளையாட்டுக் கழகம் |
ஆளுனர் | எஸ்பிஈ ஹோல்டிங் பெய்ரோ-இரியோ S/A |
தரை | டிஃப்கிராண்டு™ (2013-நடப்பு) பெர்முடா பச்சை (1980-2013) |
கட்டிடக்கலைஞர் | ஹைப் இசுடூடியோ |
குத்தகை அணி(கள்) | பன்னாட்டு விளையாட்டுக் கழகம் |
அமரக்கூடிய பேர் | 51,300 |
பரப்பளவு | 105 x 68 மீ |
பொதுத் தகவல்கள்
- புற்றரை: பெர்முடா பச்சை (அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது). சீரமைப்பிற்குப் பின்னர்: டிஃப்கிராண்டு™ .
- நுழைவுக்கட்டண அலுவலகங்கள்: 4, 68 அறைகளுடன்.
- கழிவறைகள்: 39. சீரமைப்பிற்குப் பிறகு: 81.
- கொள்ளளவு 56,000. சீரமைப்பிற்குப் பிறகு: 51.300 (5,000 மிக முக்கிய நபர்களுக்கு இருக்கைகள்).
- உயரலுவலர் வீட்டறைகள் 33. சீரமைப்பிற்குப் பிறகு: 125 (70 வீட்டறைகள் + 55 வானுயர் அறைகள்).
- ஒளிதத் திரைகள் 1 (42மீ²). சீரமைப்பிற்குப் பிறகு 2 (ஒவ்வொன்றும் 100மீ²).
- நிறுத்தம் 2,000. சீரமைப்பிற்குப் பிறகு: 5,500.
- மிகவுயர் வருகைப்பதிவு 106,554 (இரியோ கிராண்டு டொ சுல் ஆல்-இசுடார் அணி 3-3 பிரேசிலின் தேசிய அணி, - சூன் 17, 1972).
2014 உலகக்கோப்பை கால்பந்து
இங்கு நடக்கவிருக்கும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள்[2]:
நாள் | நேரம் (ஒ.அ.நே-03) | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
சூன் 15, 2014 | 16:00 | ![]() | ஆட்டம் 10 | ![]() | குழு ஈ | |
சூன் 18, 2014 | 13:00 | ![]() | ஆட்டம் 20 | ![]() | குழு பி | |
சூன் 22, 2014 | 16:00 | ![]() | ஆட்டம் 32 | ![]() | குழு எச் | |
சூன் 25, 2014 | 13:00 | ![]() | ஆட்டம் 43 | ![]() | குழு எப் | |
சூன் 30, 2014 | 17:00 | குழு ஜி வெற்றியாளர் | ஆட்டம் 54 | குழு எச் இரண்டாமிடத்தவர் | பதினாறுவர் சுற்று |
மேற்சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.