இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு
இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (Italian Football Federation (FIGC); இத்தாலியம்: Federazione Italiana Giuoco Calcio; F.I.G.C.) என்பது இத்தாலியில் கால்பந்தை நிர்வகிக்கும் மேலாண்மை அமைப்பாகும். ஆண்கள் மற்றும் மகளிருக்கான தேசியக் கால்பந்து அணிகளைத் தேர்வு செய்து நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும். மேலும், இத்தாலிய கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் இத்தாலியக் கோப்பை ஆகியவற்றை நடத்துவதும் இவ்வமைப்பே ஆகும். இதன் தலைமயகம் ரோம் நகரில் உள்ளது; தொழில்நுட்ப மையம் புளோரன்சு நகரில் உள்ளது. யூஈஎஃப்ஏவின் உருவாக்கத்தின் போது உறுப்பினராக இருந்த அமைப்பாகும்; ஃபிஃபாவில் 1905-இல் உறுப்பினராக இணைந்தது.
யூஈஎஃப்ஏ | |
---|---|
![]() | |
தோற்றம் | 1898 |
ஃபிஃபா இணைவு | 1905 |
யூஈஎஃப்ஏ இணைவு | 1954 |
தலைவர் | ஜியான்கார்லோ அபெடே (Giancarlo Abete) |
சிறப்புகள்/வெற்றிகள்
- உலகக்கோப்பை காற்பந்து: 4 முறை (1934, 1938, 1982 மற்றும் 2006)
- ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி: ஒரு முறை (1968)
- ஒலிம்பிக்சு: ஒரு முறை (1936)
- டாக்டர். கீரோ கோப்பை: இருமுறை (1927-1930, 1933-1935)
வெளியிணைப்புகள்
- Official site
- Italy at FIFA site
- Italy at UEFA site
- Italian calcio glossary
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.