பெர்னம்புகோ

பெர்னம்புகோ (Pernambuco) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் தலைநகரம் ரெசிஃபி ஆகும். இந்த மாநிலத்தில் பெர்னான்டோ டெ நோரோன்கா தீவுக்கூட்டம் உள்ளது. இந்த மாநிலத்தின் வடக்கே பாராயிபாவும் சியாராவும், மேற்கே பியாயுயி மாநிலமும், தெற்கே ஆலகோவாசும் பாகையாவும் அமைந்துள்ளன; கிழக்கு எல்லையாக அத்திலாந்திக்குப் பெருங்கடல் உள்ளது.

பெர்னம்புகோ மாநிலம்
மாநிலம்

கொடி

பிரேசிலில் பெர்னம்புகோ மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரமும் பெரிய நகரமும்ரெசிஃபி
அரசு
  ஆளுநர்எடுவர்டோ கேம்போசு
  துணை ஆளுநர்ஜோவா லிரா நெடோ
பரப்பளவு
  மொத்தம்[.616
பரப்பளவு தரவரிசை19வது
மக்கள்தொகை (2012)[1]
  மொத்தம்8
  தரவரிசை7வது
  அடர்த்தி91
  அடர்த்தி தரவரிசை6th
இனங்கள்Pernambucano
GDP
  Year2007 estimate
  TotalR$ 32.255.687 (10th)
  Per capitaR$ 4.337 (21st)
HDI
  Year2005
  Category0.718 – Medium (23rd)
நேர வலயம்BRT (ஒசநே-3)
  கோடை (பசேநே)not observed (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு50000-000 - 56990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-PE
இணையதளம்pe.gov.br

இந்த மாநிலத்திலுள்ள பிரேசிலின் இரண்டாவது தொன்மையான நகரமான ஒலின்டாவை 1982இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மாந்த வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுரிமையாக அறிவித்துள்ளது. இங்கும் ரெசிஃபியிலும் பிரேசிலின் மரபார்ந்த பல கார்னிவல்கள் கொண்டாடப்படுகின்றன. இரு நகரங்களிலும் போர்த்துக்கேய கட்டிடக்கலையைக் காணலாம்; நூற்றாண்டுகள் பழைமையான மாளிகைகளும் தேவாலயங்களும் கட்டப்பட்டுள்ளன. பல கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைகள் அமைந்துள்ளன. நில நடுக்கோட்டிற்கு அண்மையில் உள்ளதால் ஆண்டு முழுமையும் சூரிய ஒளி கிட்டுகிறது; சராசரி வெப்பநிலை 26 °C (79 °F)ஆக உள்ளது.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.